• English
  • Login / Register

ஸ்ட்ராடஜி இயக்குனராக ஷோபித் மாத்துரை நியமித்து, கிர்னார் சாஃப்ட் தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது

published on டிசம்பர் 01, 2015 11:10 am by cardekho

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கிர்னார் சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை குழுவில் முன்னாள் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்சின் இணை இயக்குனர் இணைந்தார்.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆட்டோமொபைல் சந்தையான CarDekho.com வலைதளத்தின் மூல நிறுவனமான கிர்னார் சாஃப்ட் நிறுவனம், தனது ஸ்ட்ராடஜி இயக்குனராக ஹோபித் மாத்துரை நியமித்து தனது தலைமை குழுவை வலுப்படுத்தியது. PWC நிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குனர் ஷோபித், இனி கிர்னார் சாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும், புதிய ஸ்ட்ராடெஜிக் முயற்சிகளை தலைமை ஏற்று நடத்திச் செல்வார். மேலும், அவர் கிர்னார் சாஃப்ட்டின் புதிய தொழில் வாய்ப்புகளையும் பேணி வளர்ப்பார். 

சமீபத்தில், கிர்னார் சாஃப்ட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கிய புள்ளி, ஷோபித் மாத்துர் ஆவார். தற்போது, இவரைத் தவிர, இந்திய தொழில் துறையில் மரியாதைக்குரிய நபர்களான OLX நிறுவனத்தில் இருந்து தீபாலி குலாத்தி மற்றும் அமித் அகர்வால்; Snapdeal நிறுவனத்தில் இருந்து ரவி குப்தா மற்றும் அநிருத் சிங் போன்றவர்கள் கிர்னார் சாஃப்ட்டின் உயர் பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர். அபரிமிதமான திறமைகள் உடைய நபர்களை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் பகுதியாக, கிர்னார் சாஃப்ட் நிறுவனம் இவர்களை உயர்ந்த பதவிகளில் பணியமர்த்தி உள்ளது.

கிர்னார் சாஃப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான அமித் ஜெய்ன் இந்த நியமனத்தைப் பற்றி பேசுகையில், “ஷோபித் இதற்கு முன் பணியாற்றிய தொழில் துறையில் கிடைத்த அனுபவத்தினாலும் பழக்கங்களினாலும் பல்வேறு வணிக ஆலோசனைத் துறைகளில் விரிவான மற்றும் ஆழமான நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். எங்களின் வணிகப் பயணத்தில், இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் கிர்னார் சாஃப்ட் நிறுவனத்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளது, எங்களது நீண்ட கால வளர்ச்சியை ஊக்கபடுத்த ஏதுவாக உள்ளது. ஷோபித்தின் பங்களிப்பு மற்றும் அவரது வணிக நிபுணத்துவம் இரண்டும் இணைந்து எங்களது நிறுவனத்தின் பரிணாம வளர்ச்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது,” என்று கூறினார். 

ஷோபித் தனது நிலையைப் பற்றி குறிப்பிடும் போது, “கிர்னார் சாஃப்ட் நிறுவனம், தனது உயர்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் சீரிய தலைமைப் பண்பு காரணமாக, ஆற்றல் வாய்ந்த துடிப்பான தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அவர்களை வளர்ப்பதிலும் உறுதுணையாக இருந்து தன்னை வலுவாக நிலைநாட்டுகிறது. இத்தகைய நிறுவனத்துடன் என்னை இணைத்துக் கொள்வது மூலம், சக்தி வாய்ந்த இந்திய சந்தையில் நேரடியாக என்னை உட்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், முழுமையாக தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு வணிக சூழலின் வளர்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பையும் நான் பெற முடியும்,” என்று நம்பிக்கையுடன் கூறினார். 

ஷோபித், இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பேச்சுலர் ஆஃப் டெக்னாலஜி (சிவில் இன்ஜினியரிங்) பட்டம் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் மெல்போர்ன் பிசினஸ் ஸ்கூலில் MBA பட்டம் போன்றவற்றைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். கிர்னார் சாஃப்ட் நிறுவனத்தின் பதவியை ஏற்கும் முன்னர், இவர் PwC நிறுவனத்தின் கேபிட்டல் ப்ராஜக்ட் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையின் இணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார் என்பதும் பெருமைக்குரிய விஷயமாகும். 

மேற்கூறிய பதவி தவிர, இவர் Ernst and Young நிறுவனத்தின் சீனியர் மேனேஜ்மெண்ட் ஆலோசகராகவும் மற்றும் பல்வேறு நிலைகளில் சிவில் இஞ்சீனியராக ஹைடர் கன்சல்டிங்க், சின்க்ளேர் நைட் மெர்ஸ், SMEC ஆஸ்திரேலியா லிமிடெட் மற்றும் இந்திய ரயில்வே போன்ற நிறுவனங்களில் பணியாற்றி, பல்வேறு விதமான அனுபவங்களைப் பெற்றுள்ளார். 

மேலும், இதற்கு முன் அவர், உலகின் ‘பிக் ஃபோர்’ நிறுவனங்கள் பட்டியலில் உள்ள ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் மற்றும் Ernst and Young ஆகிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்றியுள்ளதாலும், ப்ராஜக்ட் அண்ட் ப்ரோக்ராம் மேனேஜ்மென்ட், கவர்னன்ஸ் ஸ்ட்ரக்சர் மற்றும் ஃபிரேம்வொர்க், இன்டர்பேஸ் மேனேஜ்மென்ட், பெனபிட்ஸ் மேனேஜ்மென்ட், ப்ராஜக்ட் போர்ட்போலியோ ஆப்டிமைசேஷன், டேட்டா அனாலிசிஸ் ஃபார் பிசினஸ் இண்டெலிஜன்ஸ், பிசினஸ் அனாலிசிஸ் மற்றும் க்வாலிட்டி அஷ்யூரன்ஸ் போன்ற துறைகளில் பிசினஸ் எஜுகேஷன் பெற்றுள்ளதாலும், ஷோபித்தின் வர்த்தக ஆலோசனைத் திறன்கள் கூர்மையாக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க

Zigwheels.com  இணையதளத்தை CarDekho.com கையகப்படுத்துகிறது: டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனம் கிர்னார் சாஃப்ட்வேரில் முதலீடு செய்கிறது

CarDekho.com மற்றும் அதன் துணை இணையதளங்கள் இணைந்து அக்டோபர் மாதத்தில் 3.3 மில்லியன் விசிட்டர்களைப் பதிவு செய்துள்ளன


 

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience