‘கூகுள் பிளே டாப் டெவலப்பர்’ என்னும் மாபெரும் அங்கீகாரத்துடன், கிர்னர் சாஃப்ட் மிகப் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது
அனைவரும் விரும்பும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட CarDekho மொபைல் ஆப், மாபெரும் அங்கீகாரம் பெற்றுள்ளது
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வாகன இணையதளமான CarDekho – விற்கும், சமூக ஊடகத்தில் போற்றத்தக்க ஃபேஸ்புக், மொபைல் ஆப் மூலமே புக்கிங் செய்யப்படும் டாக்ஸி அக்ரகேட்டர்களில் சர்வதேச புகழ் வாய்ந்த உபர் மற்றும் சிறந்த பொழுதுப்போக்கு நிறுவனமான டிஸ்னி ஆகியவற்றிற்கும் உள்ள ஒற்றுமை என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?
விடை: கூகுள் பிளே ஸ்டோரில் ‘டாப் டெவலப்பர்' என்ற உயர்ந்த நிலையை மேற்சொன்ன அனைத்து நிறுவனங்களுக்கும் அடைந்துள்ளன.
CarDekho இணையதளத்தின் மூல நிறுவனமான கிர்னர் சாஃப்ட் நிறுவனத்தின் இன்னொவேட்டிவ் டெக்னாலஜி-டிரிவேன் பிசினஸ் சல்யூஷன்ஸ் கொள்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில், கூகுள் பிளே வலைதளத்தில் ‘டாப் டெவலப்பர்' என்னும் ஒப்பற்ற பேட்ஜை பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். ஸ்த்ரத்தன்மை, உயர்ந்த தரம், சிறந்த கன்டன்ட், யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதால், கிர்னர் சாஃப்ட் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய ஆப்பிற்கு மட்டுமே, ஆட்டோமொபைல் பிரிவில் இத்தகைய சிறப்பு மிக்க பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. கிர்னர் சாஃப்ட் நிறுவனத்தின் CarDekho, Zigwheels, Bikedekho மற்றும் Pricedekho போன்ற அனைத்து ஆப்களுக்கும் இந்த சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது போற்றுதலுக்குரியது. ‘டாப் டெவலப்பர்' என்ற பெருமையைத் தட்டிச் சென்ற பிரபலமான நிறுவனங்களுக்குள் ஃபேஸ்புக், உபர், Paytm, டைம்ஸ் இன்டெர்நெட் லிமிடெட், NDTV மற்றும் ஜோமாட்டோ போன்ற நிறுவனங்களும் அடங்கும்.
CarDekho ஆப்பின் சிறந்த செயல்பாடுகளின் பின்புலத்தில் இருப்பவர், கிர்னர் சாஃப்ட் நிறுவனத்தின் ஸ்ட்ராடஜி டைரக்டரான திரு. ராகுல் யாதவ் அவர்கள். அவர், “நாங்கள் ஒவ்வொரு மொபைல் பயன்பாட்டை உருவாக்கும் போதும், யூசர்-எக்ஸ்பீரியன்சை மேம்படுத்தும் நோக்கத்துடனே உருவாக்குகிறோம். எங்களது பயனர்களின் இன்சைட்களை அடிப்படையாகக் கொண்டு, பல புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்குகிறோம். எனவே, அவர்களுக்கு உண்மையான உற்சாக அனுபவத்தை வழங்க எங்களால் முடிகிறது. எங்களது ஆப்கள் யூசர்-ஃப்ரெண்ட்லியாக இருப்பதால், நான்கில் மூன்று பதிவிறக்கங்கள் உண்மையான பயன்பாட்டிற்காக, ஆர்கானிக்காக இருக்கின்றன,” என்று பெருமையுடன் கூறினார்.
‘கூகுள் ப்ளே டாப் டெவலப்பர்' என்னும் சிறந்த அங்கீகாரம் வழங்குவதற்கான கட்டளை விதிகள் பல உள்ளன. அவற்றில், இன்ஸ்டலேஷன் எண்ணிக்கை மற்றும் பயனர்கள் கொடுக்கும் மதிப்பீடுகள் ஆகியவை முக்கியமாக கணக்கிடப்படுகின்றன. கூகுள் பிளே ஸ்டோரில், CarDekho ஆண்ட்ராய்ட் ஆப் மட்டுமே 2 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைத் தாண்டிவிட்டது. அதுமட்டுமல்ல, ஏராளமான சாதகமான விமர்சனங்களைத் தவிர, இந்த ஆப் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஐந்து நட்சத்திர பரிந்துரைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விவரமாகும்.
மேலும் வாசிக்க