கார்தேக்கோவின் எதிர்காலத்திற்குரிய விர்ச்சூவல் மேப்பிங் டெக்னாலஜி மூலம் ஆட்டோ எக்ஸ்போ 2016 உயிரோட்டம் பெற்றது!
published on பிப்ரவரி 08, 2016 02:07 pm by cardekho
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியா முழுவதும் உள்ள வாகன ஆர்வலர்களுக்காக, விர்ச்சூவல் டூர் ஆப் எக்ஸ்போவை, பிரத்யேகமாக இணையதளம் மற்றும் மொபைலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆட்டோமொபைல் போர்ட்டலான கார்தேக்கோவின் மற்றொரு முன்னோடியான மேம்பாடாக, ஆட்டோ எக்ஸ்போ 2016-யின் ஒரு விர்ச்சூவல் டூரை உருவாக்கி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய வாகன கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போவிற்காக, முழுமையான முறையில் விர்ச்சூவல் ரியாலிட்டி டூரை அமைத்துள்ள முதல் நிறுவனம் கார்தேக்கோ தான்.கிரேய்ட்டர் நொய்டாவில் நடைபெறும் “எக்ஸ்போதேக்கோ வித் கார்தேக்கோ” என்று அழைக்கப்படும் இந்த கண்காட்சியின் விர்ச்சூவல் டூர், கடந்தாண்டு கார்தேக்கோ மூலம் பெறப்பட்ட திரிஷ்யா360ஸ்-யை சார்ந்த ஸ்டேட்-ஆப்-த-ஆர்ட் 360 இமேஜிங் மற்றும் மேப்பிங் டெக்னாலஜி போன்றவை மூலம் எதிர்காலத்திற்குரியதாக உருவாக்கப்பட்டுள்ளது. 360 இமேஜிங் நிபுணர்கள் கொண்ட ஒரு அணி மூலம் மாருதி சுசுகி, ஹூண்டாய், BMW, ஆடி, ஹோண்டா, ட்ரம்ப், பினில்லி மற்றும் சுசுகி மற்றும் பலரின் மொத்தம் 21 OEM கூடாரங்கள் புகைப்படம் பிடிக்கப்பட்டு, அதற்கு உயிரோட்டமான அனுபவம் அளிக்கப்படுகிறது.
இது குறித்து கார்தேக்கோ துணை நிறுவுனர் மற்றும் CEO அமித் ஜெயின் கூறியதாவது, “ஆட்டோ எக்ஸ்போவை காண விரும்பியும் டெல்லி NCR-க்கு வர முடியாமல் போன லட்சக்கணக்கான வாகன ஆர்வலர்களுக்காக, இந்த புதிய அம்சத்தை அளிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டிங்-எட்ஜ் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த விரிச்சூவல் டூர் ஆப் ஆட்டோ எக்ஸ்போ 2016 மூலம் இந்நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போன நாடெங்கிலும் உள்ள வாகன ரசிகர்களுக்கு, ஒரு அதிவேக அனுபவத்தை அளிக்க முடிகிறது” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “வாகன போர்ட்டல்கள் மூலம் தற்போது பின்தொடரப்படும் மாடல் குறித்த அடிப்படை தேடல் மற்றும் விசாரணை என்ற எல்லையை கடந்து, கார்தேக்கோவில் உள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம். எதிர்காலத்திற்குரிய தொலைநோக்கு பார்வையோடும் தொழிற்நுட்பத்தோடும் கூடிய உபகரணங்களை கொண்டு, அதிவேகமான, தனித்தன்மை கொண்ட மற்றும் அட்டகாசமான அனுபவத்தை நாங்கள் உருவாக்கி, பயனீட்டாளரின் கைகளுக்கு கிடைக்க செய்கிறோம். மேலும் இந்த தொழிற்நுட்பத்தின் மூலம் விர்ச்சூவல் ஷோரூம் கூட உருவாக்க முடியும். இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, கார் ஷோரூமிற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வராமலே, காரை வாங்கியதன் எல்லாவிதமான அனுபவங்களை பெறுவதற்கு இயலும்” என்றார்.
ஆட்டோ எக்ஸ்போ முழுமையாக ஒரு தளத்தில் பிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த அறிமுகம் என்பது கார்களை வாங்குவது, விற்பது, பட்டியலிடுவது, ஆராய்ச்சி செய்வது ஆகியவற்றை எல்லாம் கடந்து பயணிக்க விரும்பும் கார்தேக்கோவின் மூலோபயத்தின் ஒரு பகுதி ஆகும். இதற்காக தேர்ந்த பயிற்சி பெற்ற போட்டோகிராபர்கள் சிறப்பு வாய்ந்த சாதனங்களை பயன்படுத்தி, நடுஇரவு வரை காலத்தை செலவிட்டு, எக்ஸ்போவின் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்தனர். அந்த படங்களை மிகுந்த சிரமத்திற்கு இடையே ஒட்ட வைத்து, தொழிற்நுட்ப அணியினர் மூலம் அதை லைவ் செய்து, இந்த விர்ச்சூவல் டூர் அனுபவத்தை உருவாக்க, இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க கார்தேகோ #first2expo ( #பர்ஸ்ட்2 எக்ஸ்போ) பரிசு போட்டியை நடத்துகிறது.
0 out of 0 found this helpful