CarDekho.com மற்றும் அதன் துணை இணையதளங்கள் இணைந்து அக்டோபர் மாதத்தில் 3.3 மில்லியன் விசிட்டர்களைப் பதிவு செய்துள்ளன
அறிக்கையின்படி, முன்னணி ஆன்லைன் வாகன சந்தை வியத்தகு வெப் ட்ராஃபிக் பெற்று சாதனை புரிந்துள்ளது. பொதுவாக, கார் பற்றிய இணையதளங்களுக்கு மிக அதிகமான ட்ராஃபிக் இருப்பதில்லை என்பதே உண்மை, ஆனால், இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வாகன சந்தையான CarDekho.com , இணையதள ட்ராஃபிக் எண்ணிக்கையில் இந்தப் பொதுவான கருத்தைப் பொய்யாக்கியது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. CarDekho.com நிறுவனரான கிர்னார் சாஃப்ட் கம்பெனி தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதன்படி, CarDekho.com மற்றும் அதன் துணை இணையதளங்களான ZigWheels.com, BikeDekho.com மற்றும் Gaadi.com ஆகிய அனைத்தும் சேர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் சராசரியாக 33 மில்லியன் முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் பதிவாகியிருப்பது, நிச்சயமாக ஒரு அதிரடி சாதனையாகும். 22 மில்லியனுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட பயனர்கள் இந்த இணையத்தளங்களைப் பயன்படுத்தி, இங்குள்ள பல்வேறு வகையான தகவல் பட்டியல்களில், தங்களுக்கு தேவையான சிறந்த ஆட்டோமொபைல் தீர்வுகளைத் தேடி எடுத்துப் பயன் பெற்றிருக்கின்றனர்.
கிர்னார் சாஃப்ட் நிறுவனத்தின் வாகன இணையதளங்களின் விசிட்டர் ட்ராஃபிக் கணிசமான அளவு உயர்ந்திருப்பது தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையின் புள்ளி விவரத்தின் வழியாக, குன்றின் மேலிட்ட விளக்கைப் போல தெளிவாகத் தெரிகிறது. அதாவது, போன வருடத்தின் ட்ராஃபிக் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த வருடம் சுமார் 50 சதவீதம் வரை அதிகமான வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இது தவிர, இந்த அறிக்கை மேலும் ஒரு முக்கியமான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, CarDekho.com –மின் கடந்த மாத வளர்ச்சியை விட இந்த மாதம் 25.37 சதவீதம் அதிகமாக உள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட, 48 சதவிகிதம் அதிகமான வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்தியாவில் வாகனங்கள் வாங்குவோரின் மனதில், தனக்கென ஒரு தனி இடத்தை CarDekho.com பிடித்துள்ளது என்பதை, இத்தகைய அசுர வளர்ச்சி படம் பிடித்து காண்பிக்கிறது.
CarDekho.com –இன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமித் ஜெய்ன் இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள விவரங்களைப் பற்றி பேசினார். அவர், “அறிக்கையில் உள்ள போக்கைப் பார்க்கும் போது, இந்தியாவின் ஆன்லைன் ஆட்டோமொபைல் சந்தையில் CarDekho.com முன்னணி இடத்தில் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எங்களது இணையதளங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு வந்து எங்களது சேவைகளின் நன்மைகளைப் பெற்றிருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, இந்திய மக்கள் எங்களின் சேவை மீது எத்தகைய நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது விளங்குகிறது. அசாதாரணமான இந்த நம்பிக்கை, எங்களது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், மேலும் சிறந்த தரமான சேவையை எங்களது சேவையை பயன்படுத்துவோருக்கு தருவதற்கும் சிறந்த காரணியாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை,” என்று உறுதிபடக் கூறினார்.
வழக்கத்திற்கு மீறிய இந்த ட்ராஃபிக் அதிகரிப்பிற்கு மூல காரணம் அதிகமான ஸ்மார்ட் ஃபோன் உபயோகம் என்று அறுதியிட்டுக் கூறலாம். இன்டெர்நெட்டை, கணினியை விட அதிகமாக மொபைல் ஃபோன்களில் பயன்படுத்துவதால் இத்தகைய அதிகமான ட்ராஃபிக் எண்ணிக்கை வந்ததா என்று தெளிவாக கணிப்பது இந்த அறிக்கையில் சாத்தியம் ஆகிறது. ஏனென்றால், இந்த இணையதளங்களில் உள்ள பல்வேறு விதமான கார்களின் தொகுப்பை பிரௌஸ் செய்வதற்கு CarDekho.com மொபைல் ஆப் முறையை 8.7 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் உபயோகித்து உள்ளனர் என்று இந்த அறிக்கை உணர்த்துகிறது. இதை அடுத்து, WAP –யைப் பயன்படுத்தி 6 லட்சத்திற்கும் அதிகமான விசிட்டர்கள் இந்த இணையதளங்களில் பிரௌஸ் செய்துள்ளனர் என்பதும், இந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014 –ஆம் ஆண்டு அக்டோபர் மாத ட்ராஃபிக் தரவுகளை ஒப்பிடுகையில், இந்த குழுமம் முழுவதும் மொபைல் ட்ராஃபிக்கில் 212 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளன.
இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள விஷயங்களை CarDekho.com நிறுவனம் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, தன் சேவை தரத்தை மேம்படுத்தவும், வாகன உலகில் தனது முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
இதையும் படியுங்கள்: