• English
  • Login / Register

‘சீரிய யோசனை vs உண்மை தேவை’:

published on டிசம்பர் 03, 2015 12:47 pm by cardekho

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி:

பண்டிகை காலத்தில் வாகனங்களை வாங்குவதற்கான அறிக்கை - கார்தேக்கோ வெளியிடுகிறது

இந்திய வாடிக்கையாளர்கள் இடையே அதிக முக்கியத்துவம் பெறும் வாகனங்களான ஹாட்ச்பேக்கள்; பட்டியலில் மாருதியும், ஹூண்டாயும் முன்னணி வகிக்கிறது.

பண்டிகை காலத்தில் சந்தையில் நடைபெறும் கார்களின் உண்மையான விற்பனை அளவுடன், இந்திய வாடிக்கையாளர்களின் ஆன்லைன் தேடல் வகைகளை ஒப்பிட்டு தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையை, இந்தியாவின் முன்னணி ஆன்லைன் சந்தை பகுதியான கார்தேக்கோ மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கார்தேக்கோவின் தளத்தில் ஏற்படும் தேடல்கள் மற்றும் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் (சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் மோனுஃபேச்சர்ஸ் - SIAM) அளித்த தகவு (டேட்டா) ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஹாட்ச்பேக்கள், MUV, சேடன், SUV மற்றும் கச்சிதமான SUV/MUV ஆகிய பலதரப்பட்ட கார் பிரிவுகளை மையப்படுத்தி, உண்மையான தேவைக்கு எதிரான பயனீட்டாளரின் சீரிய யோசனை (கன்சிடரேஷன்) ஆகியவற்றை தொகுத்த ஒரு விரிவான புள்ளியியல் சித்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, வாடிக்கையாளர்களால் மிக அதிகமாக விரும்பி தேர்வு செய்யப்படும் ஹாட்ச்பேக்குகள், சீரிய யோசனை பகுதியின் புள்ளிவிவரத்தில் சுமார் 47 சதவீதம் வாடிக்கையாளர்களையும், உண்மையான தேவையின் ஒட்டுமொத்த புள்ளிவிவரத்தில் 48 சதவீதம் தேவை நிலையையும் பதிவு செய்கிறது. சேடன் பிரிவிலும் சீரிய யோசனையும் (26%), உண்மையான தேவையும் (25%) பெற்று, ஏறக்குறைய ஒன்றிற்கு ஒன்று நெருக்கமான மட்டத்தில் காணப்படுகிறது. ஹாட்ச்பேக் மற்றும் சேடன் ஆகிய பிரிவுகளின் பட்டியலில், மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகியவை முன்னணி வகிக்கின்றன. இதில் இரண்டாவது பிரிவில் ஹோண்டாவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலையை கொண்டுள்ளது.

கச்சிதமான SUV/MUV பிரிவில் புதிதாக அறிமுகமான வகையினால் ஏற்பட்ட விளைவாக, சீரிய யோசனை ஒரு உயர்ந்த சதவீதத்தை (17%) பெற்றுள்ளது. அதே நேரத்தில் அந்த பிரிவிற்கான உண்மையான தேவை 10 சதவீதம் மட்டுமே கொண்டு, இந்திய மக்களுக்கு இடையே இந்த பிரிவிற்கு அதிக பிரபலத் தன்மை இல்லாத நிலையைக் கொண்டுள்ளது. மற்றொருபுறம் MUV பிரிவின் சீரிய யோசனை உடன் ஒப்பிட்டால், உண்மையான தேவை 2 சதவீதம் மட்டுமே கூடுதலாக பெற்று, அதிகமாக (12%) காணப்படுகிறது.

இந்த அறிவிப்பை குறித்து கிர்னார்சாஃப்ட்டின் CMO Lk குப்தா கூறுகையில், “இந்திய நுகர்வோரை பொறுத்த வரை, ஓராண்டிற்கு மேலாக தாங்கள் பட்டியலிட்ட காரியங்களை தங்களின் நிதி செல்வாக்கிற்கு ஏற்ப, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும் பண்டிகை சீஸனில் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த அறிக்கையின் மூலம் மேற்கண்ட விறுவிறுப்பான காலளவில், பொருட்களை வாங்குவது தொடர்பான ஒரு மதிப்பு மிகுந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது. அதேபோல இந்த கண்ணோட்டத்தின் மூலம் கார் சந்தைக்குள் நுழையும் நுகர்வோர் எந்த மாதிரியான சீரிய யோசனைகளின் மாறுதல்களை கொண்டுள்ளனர் என்பதை கார் தயாரிப்பாளர்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் தற்போது இயங்கி வரும் எங்களின் சேவைகளை மேம்படுத்தவும், நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப எங்களின் பொருட்களின் வடிவமைப்பை உருமாற்றி இன்னும் அதிக ஒத்திசைவோடு அளிக்கவும், இந்த அறிக்கை எங்களுக்கு உதவுகிறது” என்றார்.

கார்தேக்கோ அளிக்கும் இந்த அறிக்கை, விலையின் முக்கியத்துவம் மற்றும் பணத்திற்கு ஏற்ப அமையும் மதிப்பு ஆகியவற்றின் முக்கிய அம்சங்களை இந்திய நுகர்வோருக்கு அளிக்கிறது. ஹாட்ச்பேக் பிரிவில் ஹூண்டாய் எலைட் i20 சுமார் 17 சதவீத பயனீட்டாளர்களின் சீரிய யோசனையை பெற்றுள்ள நிலையில், அதன் உண்மையான மாற்றம் (கன்வர்ஷன்) 9% மட்டுமே கொண்டுள்ளது. அதன் கிராண்டு i10 மாடல் உடன் ஒப்பிடும் போது, விலையில் ரூ.2 லட்சம் குறைவாக பெற்று, 11 சதவீத உண்மையான தேவையை பதிவு செய்த போதும், 4 சதவீதம் சீரிய யோசனையை கொண்டுள்ளது. ஆல்டோவில் உண்மையான தேவை 18 சதவீதம் என்று பதிவு செய்தாலும், சீரிய யோசனையோடு ஒப்பிட்டால், மாருதியின் பிராண்ட் மதிப்பு மற்றும் குறைந்த விலையை கொண்டு 8 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல சேடன் பிரிவிலும், டிசையரின் உண்மையான தேவை (37%), சீரிய யோசனைக்கும் (16%) அப்பால் சென்றுள்ளது. ஆனால் ஹோண்டா சிட்டியை பொறுத்த வரை முற்றிலும் தலைக்கீழாக அமைந்து சீரிய யோசனை 20 சதவீதம் கண்டாலும், உண்மையான தேவை 11 சதவீதம் பெற்றுள்ளது.

இதற்கு விலை ஒரு முக்கிய காரணமாக இருந்து பரிவர்த்தனைகளை நடத்தினாலும், செயல்திறன் மற்றும் அம்சங்கள் ஆகியவை சீரிய யோசனையில் முக்கிய இடம் வகிக்கிறது. கச்சிதமான SUV/MUV பிரிவில், விலை குறைவாக இருந்தாலும் ஹூண்டாயின் க்ரேடா (32% சீரிய யோசனை மற்றும் 28% உண்மையான தேவை) காருடன் ஒப்பிட்டால், மாருதியின் S-கிராஸ் சீரிய யோசனை (14%) மற்றும் உண்மையான தேவையை (12%) பெற்று, காணப்படுகிறது. இதன் பின்னணியில் S-கிராஸ் உடன் ஒப்பிட்டால், க்ரேடாவில் அதிக கவர்ச்சியான அம்சங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience