• English
    • Login / Register

    CarDekho வலைத்தளம் வியட்நாம் மற்றும் ஃபிலிபைன்ஸ் நாடுகளில் தனது CarBay வலைதளத்தை தொடங்கியது

    cardekho ஆல் ஆகஸ்ட் 20, 2015 11:30 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 17 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    கிர்னார் மென்பொருள் நிறுவனத்திற்கு சொந்தமான CarDekho இணையதளம்,   மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின், உலகளாவிய ஆன்லைன் வாகன சந்தையில் முன்னணி இடத்தை கைப்பற்றுவதற்கு ஒரு சிறந்த முயற்சியாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் CarBay.ph என்ற பெயரிலும், வியட்நாம் நாட்டில் CarBay.vn என்ற பெயரிலும், இந்நாட்டு மொழிகளில் இணையதள பதிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இரு இணையதளங்களும் இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் CarDekho.com இணையதளத்தின் அனைத்து சிறப்பு அம்ஸங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்படும். CarDekho.com பலப்பல விருதுகளையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தாலும், கடந்த நான்கு வருடங்களில் மூன்று முறை என்ற உயரிய விருதை வைத்து, இந்திய துணைகண்டத்தில் இந்த இணையதளத்தின் அபரிதமான வெற்றியை அறியலாம்.

     அனைத்து தட்டு மக்களிடமும், சீராக வேகமாக சென்றடைவதற்கு ஏற்ப CarBay.vn இணையதளம் ஆங்கிலம் மற்றும் வியட்நாமிய மொழிகளில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது. இந்த இணையதளத்திற்கு வருகை தரும் பயனாளர்கள் அனைவரும் தங்களது நாடுகளில் கிடைக்கக் கூடிய அனைத்து வகை கார்களை பற்றிய விரிவான விவரங்கள் முழுவதையும் சுலபமாக அறியும் வண்ணம், தெளிவான பிரிவுகளுடன் பட்டியலிடபட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள, எளிதாக கையாளும் தேடுதல் அமைப்பு, பயனீட்டாளர்கள் தங்களின் விருப்பமான காரைப் பற்றிய முழுவிவரங்களான - அதன் ஃபிராண்ட், மாடல், விலை மற்றும் சிறப்பு அம்சங்களின் ஒப்பீட்டு விவரங்கள் போன்றவற்றை தெளிவான முறையில் தருகிறது.

    ஒவ்வொரு வருடமும் லட்சகணக்கில் பயணிகள் வாகனங்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதாலும், இந்த இரு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் உள்ளதாலும்,  மொத்த உள்நாட்டு உற்பத்தி தலா அமெரிக்க டாலர் 2000 முதல் 3000 வரை இருப்பதாலும், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளில் கார் விற்பனையில் ஒரு பெரிய எழுச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது. கார் வாங்கும், விற்கும் பரிவர்தனைகளை எளிதாக்கும் முறையிலும், வாங்குபவர்களுக்கு முழுதிருப்தியை தரும் வண்ணமும் செயல்பட கூடிய ஒரு சிறந்த ஸ்தாபனம் வளர்வதற்கு இந்த சாதகமான சூழ்நிலை உறுதுணையாக இருக்கும்.

    கார்பே இணையதளத்தின் ஆசிய-பசிபிக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) மோஹித் யாதவ், கார்பே இணையதளத்தை சந்தைப்படுத்துவதைப் பற்றி பேசும் போது, “இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் எங்களுக்கு மிகவும் சிறந்த வரவேற்பு உள்ளது. மேலும் ஃபிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளில் எமது நிலையை மென்மேலும் பலப்படுத்துவோம். இந்தியா மற்றும் சீனாவிற்கு அடுத்து, இவை அனைத்தும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய சந்தைகளாக உள்ளன,” என்று கூறினார்.

    2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கிர்னார் சாஃப்ட் நிறுவனத்தின் சீரிஸ் B நிதியின் மதிப்பு $300 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கிர்னார் சாஃப்ட், இந்த நிதியை திரட்டுவதற்கு, முன்னணி முதலீட்டாளர்களான ஹாங் காங்கில் உள்ள ஹில்ஹௌஸ் கேபிட்டல் மற்றும் டைபோர்ன் கேபிட்டல் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமான முதலீட்டாளரான, செக்குவா கேபிட்டல் போன்ற பெரிய நிறுவனங்கள் ஆதரவு தருகின்றன.

    இந்தியாவில் கார் தொடர்பான எந்த விதமான செய்திகளையும் CarDekho.com வின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் புகழையும் இந்த வலைதளம் பெற்றுள்ளது. சமீபத்தில், இதன் வலைபதிப்பு உலக சந்தையில், உலகலாவிய வாகன செய்திகளுடன் விரிவடைய தொடங்கியுள்ளது. இவற்றில், பிரேசில், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் அடங்கும். 

    was this article helpful ?

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience