• English
  • Login / Register

மெடுலன்ஸ் உடன் இணைந்து அவசர மருத்துவ சேவைகளை கார்தேகோ குழுமம் வழங்க உள்ளது

published on பிப்ரவரி 24, 2023 06:12 pm by shreyash

  • 70 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கார்தேகோ குழுமத்தின் மற்றும் புதிய ஷார்க் இரண்டிற்குமான தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான அமித் ஜெயின் மெடுலன்ஸ் நிறுவனத்தில் ஐந்து சதவீத பங்குகளுக்கு ஈடாக ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளார்.

Amit Jain, CEO and Co-Founder, CarDekho

கார்தேகோ குழுமம் இப்போது மருத்துவ அவசரச் சேவைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், அதன் செயலி மற்றும் இணையதளத்தில் மெடுலன்ஸ் நிறுவனத்தை ஒருங்கிணைத்துள்ளது. மெடுலன்ஸ் என்பது ஜிபிஎஸ்-ஐ பயன்படுத்தி சேவையை இந்தியாவில் கொடுத்து வரும் ஒரு அமைப்பாகும். இது ஷார்க் டேங்க் டிவி நிகழ்ச்சியில் தனது யோசனையை முன் வைத்தது. எங்கள் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான அமித் ஜெயின், நிறுவனத்தின் 5 சதவீத பங்கிற்கு ஈடாக ரூ.5 கோடி முதலீடு செய்து ஒப்பந்தம் செய்தார்.

CarDekho Emergency Services

கார்தேகோவின் செயலி மற்றும் இணையதளத்தில் மெடுலன்ஸ் சேவையை ஒன்றோடொன்று இணைப்பதால் இந்தியாவில் சாலை விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க உதவும் . மொபைல் செயலி மூலம், எவரும் அவசரகாலத்தில் ஆம்புலன்ஸை முன்பதிவு செய்யலாம் அல்லது அழைக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் எப்படி கேப் சேவைகளை முன்பதிவு செய்கிறீர்களோ அதைப் போலவே இதுவும் வேலை செய்கிறது.

மேலும் படிக்க: டாடா நானோவுடன் இந்த வைரல் விபத்தில் மஹிந்திரா தார் ஏன் கவிழ்ந்தது என்பதைப் பார்க்கலாம்

மெடுலன்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஏற்கனவே இந்தியா முழுவதும் 500 நகரங்களில் உள்ளது. கார்தேகோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான அமித் ஜெயின், இந்த இணைப்பு பற்றி கருத்து தெரிவிக்கும்போது ,“இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. சாலை விபத்தானது ஒருவருடைய வாழ்க்கையை விரைவாக முடிவுக்கு கொண்டு வருகிறது . காயமடைந்தவர்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற்றால், இந்த உயிர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றி உயிர்களைக் காக்க முடியும் காப்பாற்ற முடியும், மேலும் இந்த இடைவெளியைக் குறைப்பதில் மெடுலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பொறுப்பான குழுமம் என்ற முறையில், கார்தேகோ அதன் மொபைல் பயன்பாடு மற்றும் இணையதளத்தில் மெடுலன்ஸ் நிறுவனத்தை ஒருங்கிணைத்துள்ளது, மேலும் உயிர்களைக் காப்பாற்ற உதவும் ஒரு சேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனது பங்கை ஆற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு முழுமையான அறிவிப்பு இதோ:

60 மில்லியன் பார்வையாளர்களுக்கு அவசர மருத்துவச் சேவைகளை வழங்க கார்தேகோ அதன் தளங்களில் மெடுலேன்ஸைச் சேர்க்கிறது

மும்பை, 22 ஜனவரி 2023: விரைவான மருத்துவப் பாதுகாப்புடன் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஆம்புலன்ஸ் சேவை வழங்குநரான மெடுலன்ஸ்ஸை அதன் மொபைல் பயன்பாடு மற்றும் இணையதளத்தில் கார்தேகோ இணைத்துள்ளது. ஷார்க் டேங்க் இந்தியா ஷோவில் புதிய ஷார்க் ஆன அமித் ஜெயின், ஜிபிஎஸ் அடிப்படையிலான தளமான மெடுலன்ஸ், ஷார்க் டேங்க் ஷோவில் வேகமான சேவையை வழங்குவதற்காக மெடுலன்ஸ் முன் வைத்த வணிக ரீதியிலான ஆம்புலன்ஸ் சேவை மீதான ஆர்வத்தால் எந்த வித நிதி பரிவர்த்தனையும் இல்லாமலேயே கார்தேகோ-வில் மெடுலன்ஸ்-ஸை சேர்க்க முடிவு செய்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ தொழில்நுட்ப நிறுவனமான கார்தேகோ குழுமத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமித் ஜெயின், அவசரகால முதலுதவி சேவையின் வரம்பை விரிவுபடுத்தி சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க உதவும் நோக்கத்தில் இதை செய்துள்ளா. ஷார்க் டேங்க் இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய ஆஃபரான மெடுலன்ஸில் 5% ஈக்விட்டிக்கு ரூ. 5 கோடி வழங்குவதைத் தொடர்ந்து அமித் ஜெயின் இந்த சலுகையை வழங்கினார்.

கார்தேகோ செயலி மற்றும் இணையதளத்தில் மெடுலன்ஸ் இந்த இலவச ஒருங்கிணைப்பு, விபத்து ஏற்பட்டால், செயலி மற்றும் இணையதளத்தில் இருந்து ஆம்புலன்ஸை அழைக்க பயனர்களுக்கு உதவும். மெடுலன்ஸின் இந்தச் சேவையானது  குறைகளை நிவர்த்தி செய்யும் வணிக மாடல்களை ஆதரிக்கும் அமித் ஜெயினின் பார்வையில் ஒத்துப்போகும் ஒன்றாக இருக்கிறது . மேலும் இது சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது.

மெடுலன்ஸ் என்பது இந்தியாவின் முதல், ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்ப தளமாகும், இது விரைவான மற்றும் நம்பகமான முதல்-நிலை மருத்துவ சிகிச்சையை 500 நகரங்களில் தற்போது செயல்படுத்துகிறது. 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மெடுலன்ஸ் தற்போதைய காலகட்டத்தில்  உணவு டெலிவரி அல்லது கால்டாக்ஸி -களைப் போலவே ஆம்புலன்ஸ் சேவையும் எளிதாக கிடைக்க வேண்டும் என விரும்புகிறது. இது முதல்-நிலை மருத்துவ கவனிப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் முன்பதிவு மற்றும் கண்காணிப்பு அமைப்பு கொண்ட ஒரு ஒருங்கிணைந்த அவசரகால ரெஸ்பான்ஸ் சப்போர்ட் ப்ரொவைடர் ஆகும்.

கார்தேகோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான அமித் ஜெயின், இந்த இணைப்பு பற்றி கருத்து தெரிவிக்கும்போது ,“இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. சாலை விபத்தானது ஒருவருடைய வாழ்க்கையை விரைவாக முடிவுக்கு கொண்டு வருகிறது . காயமடைந்தவர்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற்றால், இந்த உயிர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றி உயிர்களைக் காக்க முடியும் காப்பாற்ற முடியும், மேலும் இந்த இடைவெளியைக் குறைப்பதில் மெடுலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பொறுப்பான குழுமம் என்ற முறையில், கார்தேகோ அதன் மொபைல் பயன்பாடு மற்றும் இணையதளத்தில் மெடுலன்ஸ் நிறுவனத்தை ஒருங்கிணைத்துள்ளது, மேலும் உயிர்களைக் காப்பாற்ற உதவும் ஒரு சேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனது பங்கை ஆற்றி வருகிறது.

மெடுலன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரணவ் பஜாஜ் கூறுகையில், “விபத்து ஏற்பட்டால் முன்கூட்டியே முதலுதவி சிகிச்சைக்கு அழைக்கும் நோக்கத்துடன் மெடுலன்ஸ் தொடங்கப்பட்டது. எங்கள் முயற்சிகள் இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன, மேலும் ஷார்க் அமித் ஜெயின் இந்த சமூக விழிப்புணர்வானது மெடுலன்ஸ் வரம்பை மேலும் பெருக்கும், ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை அனுமதிக்கும் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும்.

ஷார்க் டேங்க் இந்தியா 2.0 சமூக முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் மற்றும் தங்கள் வணிகங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வமுள்ள தொழில்முனைவோரின் பங்கேற்பை அதிகரித்து வருகிறது. அமித் ஜெயின், லாபத்தைத் தாண்டி, இந்தியா முன்னேற உதவும் வணிகங்களில் முதலீடு செய்வதன் மூலம் இத்தகைய முயற்சிகளை ஊக்குவிப்பதில் முன்னணி வகிக்கிறார்.

 

 
 

 

 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience