• English
  • Login / Register

புதிய பிலாபுங்க்ட் சான் மரீனோ 330: ரூ. 14,990 என்ற விலையில் அறிமுகம்

cardekho ஆல் நவ 16, 2015 10:11 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பிலாபுங்க்ட் இந்தியா நிறுவனம் சான் மரீனோ 330 என்ற 6.2 அங்குல டபுள் டின் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜெர்மன் மின்னணு உபகரண நிறுவனம் இந்த புதிய சிஸ்டத்திற்கு ரூ. 14,990 என்று விலை நிர்ணயித்து வெளியிட்டுள்ளது. புளுடூத், USB, SD – கார்ட் மற்றும் Aux-in போன்ற பலவிதமான கனக்டிவிடி ஆப்ஷங்களுடன் இந்த சிஸ்டம் அமர்க்களமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிலாபுங்க்ட் இந்தியாவின் ப்ராடக்ட் ஹெட் தீபக் அஸ்ராணி, “OEM  (அசல் உபகரண உற்பத்தியாளர்) என்ற தொழில் வட்டத்தில், நாங்கள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறோம். தரமான OEM பொருட்களை உலகெங்கும் உள்ள பயணிகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு தயாரித்து விற்பதிலேயே, எங்களது பாதிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து விடுகிறது. தற்போதுள்ள சந்தையில் உள்ள மல்ட்டிமீடியா நேவிகேஷன் ரேடியோக்களை விட மேம்படுத்தப்பட்ட செயல்பாடு, புதிய செயல்திறன் மற்றும் மாறுபட்ட தொழில்நுட்பத்தில், இந்த புதிய சான் மரீனோ 330 –யைத் தயாரித்து அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். சிறப்பான கனெக்டிவிடி, இண்டெகரேஷன், ப்ராசஸிங் பவர், மல்ட்டிமீடியா பெர்ஃபார்ம்மென்ஸ், டியூனர் க்வாலிட்டி மற்றும் ஃபிளக்சிபிள் யூசர் இன்டர்பேஸ் ஆகியவற்றின் மூலம் உன்னத தொழில்நுட்ப அனுபவத்தை, வாடிக்கையாளர்களுக்கு இந்த ரேடியோ தரமாக வழங்கவிருக்கிறது,” என்று பெருமிதத்துடன் கூறினார்.  

800 x 480 பிக்சல் தரத்தில் வரும் 6.2 அங்குல தொடுதிரை அமைப்பு இந்த சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மல்டி ஃபங்சனல் ஸ்டியரிங் வீலை ஒருங்கிணைத்து பயன்படுத்த, எவருடைய உதவியும் இல்லாமல் இந்த சிஸ்டத்தின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள எளிதாக கற்று கொள்ளும் வசதி மூலம் ஓட்டுனர்கள் சுலபமாகப் பழகிக் கொள்ளலாம், என இந்த நிறுவனம் உறுதிபடக் கூறுகிறது. மேலும், பின்பகுதியில் உள்ள பொழுதுபோக்கு திரையையும் இந்த சிஸ்டம் மூலம் இயக்கலாம். இந்த பிலாபுங்க்ட் சான் மரீனோ 330, உயர்ந்த தரமான 24பிட்/ 192 kHz  சேம்ப்லிங் மற்றும் 4*45 வாட்ஸ் அவுட்புட் தரவல்ல ஆன்-போர்டு ஆம்ப்ளிஃபயர் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இது முன்புற, இடது, சப்வூஃபர் ஆகிய மூன்று ப்ரீ-அவுட்ஸ் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும், இதன் SUB அவுட்புட் சேனலுடன் ஒரு பில்ட்-இன் க்ராஸ்ஓவர் அமைப்பு இணைக்கப்பட்டு, மாற்றியமைக்கக் கூடிய க்ராஸ்ஓவர் பாயிண்ட்களுடன் வருகிறது. இவற்றை எளிதாக கையாளுவதற்கு கையடக்க IR ரிமோட் கண்ட்ரோலும் தரப்படுகிறது.

இதையும் படியுங்கள் :

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience