கார் தயாரிப்பாளர்கள் சிறப்பு வெளியீடுகள் மற்றும் ஏராளமான சலுகைகளுடன் இந்த வருட ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்
கார்தேகோ.காம் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. ஓணம் நல்வாழ்த்துக்கள்.
ஜெய்பூர்: மிகப்பெரியதும் முக்கியமானதுமான ஓணம் பண்டிகை அனைத்து தரப்பினராலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளான ஓணம் திருநாள் மலையாள நாட்காட்டியின் முதல் மாதமான சிங்கம் மாதத்தின் ஆரம்ப நாட்களில் கொண்டாடப்படுகிறது. கிரிகேரியன் நாட்காட்டியின்படி இது ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் வருகிறது. இப்போது கேரளா என்று அழைக்கப்படும் பகுதியில் ஒரு காலத்தில் ஆட்சி புரிந்த மகாபலி என்ற புராண காலத்து மன்னனை வரவேற்கும் முகமாக ஓணம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மலையாளிகள் ஒன்று கூடி வெகு விமரிசயாக இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓணம் விழாவுக்காக கேரள அரசாங்கம் 4 நாட்கள் விடுமுறை தருகிறது. இந்த சிங்கம் மாத முதல் வார கொண்டாட்டங்களில் இசை நிகழ்ச்சிகள். கண்கவர் நடன நிகழ்ச்சிகள், பாம்பு வடிவில் செய்யப்பட்ட படகுகள் பங்கெடுக்கும் படகு போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. இதைதவிர வீடுகளை மக்கள் மிக அழகாக அலங்கரிப்பதுடன் விதவிதமான உணவுகளையும் செய்கின்றனர். இந்திய மற்றும் வெளிநாட்டு கார் தயாரிப்பாளர்கள் இந்த முறை ஓணம் கொண்டாட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். இந்த மாதத்தில் ஜெர்மன் நாட்டு மிகப்பெரிய கார் நிறுவனமான வோல்க்ஸ்வேகன் நிறுவனமும் இந்திய ஜப்பான் கூட்டு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனமும் ஏராளமான சலுகைகளை வழங்கி தென்னிந்திய வாடிக்கையாளர்களை மேலும் குதூகலப் படுத்தி உள்ளனர்.
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் குறிப்பிட்ட ஓணம் பண்டிகை காலத்திற்கு என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக வாங்கப்படும் ஒவ்வொரு போலோ அல்லது வெண்டோ கார்களுடன் இலவச தங்க நாணயம் ஒன்றை வழங்கிகிறது. மேலும் வாகன கடனில் சிறந்த சலுகைகளையும் வழங்குகிறது. இது மட்டுமின்றி எக்ஸ்சேன்ஜ் போனஸ் என்ற வகையில் ரூ. 20,000 மற்றும் லாயல்டி போனஸ் என்ற பெயரில் 20,000 ரொக்கமும் வழங்குகிறது.
இது இப்படி இருக்க, இன்னொருபுறம் மாருதி சுசுகி நிறுவனம் கேரளாவில் மிக அதிகமாக விற்பனை ஆகும் ஆல்டோ கார்களின் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு ஆல்டோ கார்களில் பின்புற பார்கிங் சென்சார், ஸ்பீக்கர்களுடன் கூடிய மியுசிக் சிஸ்டம், பவர் கார் சார்ஜர், ஓணம் பண்டிகையை பிரதிபலிக்கும் அழகிய ஸ்டிக்கர்கள் மற்றும் கிராபிக் படங்கள் என 15 புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு ஆல்டோ கார்களுடன் சேர்ந்து மொத்தம் 3,000 கார்களை ஒரே நாளில் பல்வேறு பகுதிகளுக்கு மாருதி நிறுவனம் அனுப்பியுள்ளது . இவைகளுள் 1000 ஆல்டோ800 கார்களும் அடங்கும். இந்த அனைத்து கார்களும் விசேஷமான மலையாள சிங்கம் மாதத்தின் முதல் நாளுக்கென்று பிரத்யேகமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.