டெல்லி கார் தடையை நிறுத்தி வைக்க, வாகன தொழில்துறை விருப்பம்
published on டிசம்பர் 08, 2015 06:31 pm by sumit
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
சுற்றுச்சூழல் மாசுப்படுதலை கருத்தில் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம், அந்த யூனியன் பிரதேசத்தில் வாழ்வதை “ஒரு வாயு அறையினுள் வாழும் வாழ்க்கை” உடன் ஒப்பிட்டு, தனியார் கார்களின் மீதான ஒரு தேர்வுக்குட்பட்ட தடையை டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, மாசுபடுதலை கட்டுப்படுத்தும் வகையில், ஒற்றை மற்றும் இரட்டை நம்பர்களை கொண்ட கார்களை ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் சாலையில் பயணிக்க அனுமதிக்கப்படும். இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஒரே ஒரு கார் மட்டும் வைத்திருக்கும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். இந்த விஷயத்தில் வாகன தொழில்துறை கூட டெல்லி அரசின் மீது அதிருப்தியான நிலையை கொண்டுள்ளது. இதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் R C பார்கவா கூறுகையில், “இது குறித்த முழுமையான காரியங்களை டெல்லி ஆட்சியகம் புரிந்து வைத்திருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளும் போது, இந்த தீர்மானத்தை அவர்கள் மாற்றக்கூடும். ஏனெனில் கார்கள் என்பது தற்போது ஆடம்பரத்தின் ஒரு அடையாளம் அல்லது செல்வந்தரின் பொருளாக மாறியுள்ளது. அதன் அதிக பயன்பாட்டின் காரணமாக, அதை தடை செய்வது என்பது மிகவும் எளிதானது” என்றார். அவர் இது குறித்து விளக்கம் அளித்து கூறுகையில், முதலில் யாரால் மாசுப்படுத்தப்படுகிறது என்பதை டெல்லி அரசு கண்காணிக்க வேண்டியுள்ளது. டெல்லியின் மாசுபடுதலுக்கு முக்கிய காரணமாக 2.5 PM நுண்துகள்கள் ஆகும். அந்த வகையில் பெட்ரோல் கார்களின் மூலம் ஏறக்குறைய மாசுப்படுதலே இல்லை எனலாம். அவர் மேலும் கூறுகையில், கட்டிட வேலைகள், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் இருந்து குப்பைகளை குவிப்பது மற்றும் குப்பைகளை எரிப்பது, ராஜஸ்தானில் இருந்து உண்டாகும் பாலைவன புயல், டெல்லியை கடந்து செல்லும் டீசல் டிரக்குகள் உள்ளிட்ட பல காரணங்களால் கூட மாசுபடுதல் நடைபெறுகிறது, என்றார்.
இது குறித்து இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு கழகத்தின் (சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனிஃபேக்சர்ஸ் அசோசியேஷன் – SIAM) பொது செயலாளர் விஷ்ணு மாதுர் கூறுகையில், “உண்மையில் மாசுபடுதல் என்பது கட்டிட வேலைகள், தீபாவளி பட்டாசுகள், விவசாய நிலத்தில் எரிக்கப்படுதல், பாலைவனத்தில் இருந்து வரும் தூசு ஆகிய முக்கிய காரணிகளை அடிப்படையாக கொண்டு, பெரிய அளவில் மாசுபடுதல் உருவாகிறது. செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரையுள்ள குளிர்காலத்தில் ஏற்படும் பாதகமான காலநிலை காரணமாக, மேற்கூறிய அனைத்து மாசுகளும் கீழடுக்கு மண்டலத்திலேயே சேர்ந்து, அங்கேயே குவிந்து விடுகின்றன” என்றார். கடந்த 2011 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை வெளியிட்ட ஒரு குறிப்பை குறிப்பிட்ட அவர், “வாகனங்களினால் வெறும் 8% மட்டுமே மாசுபடுதல் ஏற்படுகிறது. இது வேண்டுமானால் குறிப்பிட்ட அளவு அதிகரித்து இருக்கலாம்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “நான் பயப்படுவது என்னவென்றால், சாலையில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதால், காற்றின் தரம் உயராது. ஏனெனில் அது ஒரு அத்தியாவசிய சாதனம் என்பதால், இதை சரியான முறையில் கையாள வேண்டியது அவசியமாகும்” என்றார்.
இது குறித்து IHS ஆட்டோமோட்டிவ்-வின் காலநிலைக்கான மூத்த ஆய்வாளரான கவுரவ் வேன்கால் கூறுகையில், “மாசுபடுதலுக்கு வாகன தொழில்துறை மட்டுமே முழு காரணம் என்று கூற முடியாது. டெல்லி போன்ற நகரில் உள்ள மாசுபடுதலை களைய ஒரு தீவிரமான நடவடிக்கை தேவை தான். ஆனால் அதை பொதுமக்கள் மற்றும் தொழில்துறைகளின் அதிகளவிலான விருப்பத்தைக் கருத்தில் கொண்டு மரபுவழி அணுகுமுறையில் கையாள வேண்டும். இது போன்ற முடிவுகளை திடீரென தீர்மானித்து, திடீரென அமல்படுத்தக் கூடாது. அதற்கென சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. சாலையில் செலுத்துவதற்காகவே வாகனங்களுக்கான வரிகளை நுகர்வோர், அரசுக்கு செலுத்தி வருகின்றனர். அதை வீட்டில் நிறுத்தி வைப்பதற்கு அல்ல” என்றார். இந்த தடைக்கு எதிரான தனது அதிருப்தி தெரிவித்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் மூத்த VP ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “ஒரு அரசு உத்தரவை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு பெரிய சவாலான விஷயமாகும். ஏனெனில் அதற்கு மக்கள் பயன்படுத்தும் வகையிலான பாதுகாப்பு, செளகரியம் மற்றும் இதமான வசதிகளை கொண்ட நன்றாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து அமைப்பின் மூலம் கிடைக்கும் பொதுமக்களின் முழு ஆதரவும், கூட்டுறவும் தேவை” என்றார்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful