ARAI அமைப்பு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துடன் இணைந்து சிக்கனமான செலவில் பேட்டரிகளை தயாரிக்க திட்டம்
published on ஜனவரி 06, 2016 12:16 pm by sumit
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆடோமொடிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) அமைப்பு, மின்சார வாகனங்களில் பொருத்தப்படும் பிரெத்தியேக பட்டரிகளை குறைவான விலையில் உருவாக்கும் நோக்கத்தில், தற்போது விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டருடன் கை கோர்த்துள்ளது. அனேகமாக, சுற்று சூழல் ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம். மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்கு மிக அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. எனவே, இவற்றைத் பெரிய அளவில் தயாரிப்பது என்பது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. இந்திய சந்தையில் ஹைபிரிட் வாகனங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மின் வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகளின் உற்பத்தி விலையை குறைப்பதே இந்த புதிய கூட்டணியின் தலையாய நோக்கமாக இருக்கிறது.
விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் இயக்குனரான திரு. K. சிவன், விண்வெளியில் ஏவப்படும் வாகனங்களின் அதே கான்செப்ட்டில்தான் ஆட்டோமொபைல் பேட்டரிகளையும் உருவாக்க வேண்டும் என்றார். “புதிய தொழில்நுட்பம் மூலம் உருவான பேட்டரிகள், ARAI ஒத்துழைப்புடன் கார்களில் பொருத்தி சோதனை செய்து பார்க்கப்படும். அதற்கு அடுத்த மூன்றாவது நிலையில், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த விலையில் அதிக உற்பத்தி செய்யும் முறை தயாரானதும், அது ஒரு பெரிய வாகன தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்படும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ARAI இயக்குனரான ரஷ்மி உர்த்வரேஷீ, “மின்சார வாகனங்களிலும் (EV) மற்றும் ஹைபிரிட் வாகனங்களிலும் (HEV) பொருத்துவதற்கான பேட்டரிகளை ARAI உருவாக்கி, சோதனை செய்த பின், அந்த தொழில்நுட்பத்தை பெரு உற்பத்திக்கு தயாரிப்பாளர்களிடம் கொடுக்கும்,” என்றார். “இந்திய வாகன தொழில்துறையில் EV-HEV தயாரிப்புகளில் பயன்படுத்தும் வகையில் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி, சுற்று சூழலுக்கு பாதுகாப்பான ‘க்ரீன் மொபிலிட்டி பிளாட்ஃபார்மைத்’ தருவதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அது மட்டுமல்ல, இதன் மூலம் வாகன இறக்குமதிக்கு பதிலீடுகள் மற்றும் ‘இந்தியாவிலேயே தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) என்ற இந்திய அரசின் லட்சியம் ஆகியவற்றையும் ஊக்குவிக்க முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய சந்தையில், சுற்று சூழலை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தைப் புகுத்த, தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் வாகன தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மாருதி சுசுகி மற்றும் மஹிந்த்ரா போன்ற பெரிய நிறுவனங்களுடன் கை கோர்த்து, மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்களைத் தயாரிக்கத் தேவையான முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. ARAI அமைப்பு எடுக்கும் இந்த புதிய முயற்சி, சுற்று சூழலை மேம்படுத்த பல்வேறு கார் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உதவ வாய்ப்பு உள்ளது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful