• English
  • Login / Register

வோக்ஸ்வேகன் இந்தியா மோசடி: போலோ, வெண்ட்டோ, ஜெட்டா மற்றும் ஆடி A4 போன்றவற்றிலும் வாகனப் புகை வெளியீடு மாற்றங்கள் இருக்கிறது என்று ARAI கூறுகிறது

published on நவ 06, 2015 01:57 pm by raunak

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உலகளவில், வோல்க்ஸ்வேகனின் EA 189 வரிசை டீசல் இஞ்ஜின்களில் பொய்யான சாஃப்ட்வேர் பொருத்தி மாசு கட்டுப்பாட்டு விதிகளை ஏமாற்றியதை இந்நிறுவனம் ஒப்புக் கொண்டது. அது போல, இந்தியாவில் வெண்ட்டோ, ஜெட்டா மற்றும் ஆடி A4 போன்ற கார்கள் கண்காணிப்பில் இருக்கின்றன. எனினும், ஸ்கோடா இதனை ஒத்த இஞ்ஜினையே பயன்படுத்தி இருந்தாலும், இந்த காரைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான வோக்ஸ்வேகன் குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக இந்திய அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியது. இந்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ARAI – இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ஆட்டோமொட்டிவ் ரிசர்ச் அசோசியே ன் ஆஃப் இந்தியா), வோக்ஸ்வேகன் காரானது ஆராய்ச்சி கூடத்திலும், நேரடியாக சாலைகளிலும் சோதனை செய்யும் போது எமிஷன் அளவுகள் மாறுபட்டதால், வோக்ஸ்வேகன் இந்திய நிறுவனத்திடம் இந்திய அரசாங்கம் விளக்கம் கேட்டுள்ளது. இதே மோசடியில், வோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டதை நாம் இங்கு நினைவு கூறவேண்டும். இந்நிறுவனம், ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்யும் போது, வாகன புகை அளவை மாற்றிக் காண்பிக்கும் ஒரு மென்பொருளைப் பொருத்தி, 11 மில்லியன் டீசல் இஞ்ஜின்களில் ஏமாற்றியது உண்மை என்று உலகளவில் ஒப்புக் கொண்டது. சோதனை சாலையை விட 40 சதவிகிதம் அதிகமான புகையை இந்த கார் உண்மையான சாலைகளில் உமிழக் கூடியது என்று கண்டுபிடித்ததால், உண்மையை ஒப்புக் கொண்டது.


 
இந்த ஜெர்மன் வாகன உற்பத்தியாளரின் டீசல் இஞ்ஜின் மோசடி செய்தி முதலில் அமெரிக்காவில் வெளியானது முதல், இதை பற்றி தினம் தினம் புது விதமான சர்ச்சைக் கதைகள் உருவாகிக் கொண்டிருக்கிறன. இந்த மோசடி, ‘டீசல் கேட்’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இதை, வாகன உலக வரலாற்றில் மிகப் பெரிய மோசடி என்று கூறினால், அது மிகையாகாது.

வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில், ARAI இரண்டு வாரத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கெடு வைத்துள்ளது. “ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். எனவே, இந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்பது முக்கியமானதாகும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இந்த மாற்றத்திற்கான தக்க காரணங்களைக் கொடுத்து பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அதற்கு பின்பு, நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய முடிவு செய்வோம்,” என்று ET ஆட்டோவிடம் கனரக தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரான அம்புஜ் ஷர்மா கூறினார். மேலும், இது போன்ற மோசடியை ஆடி A6, ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் போன்ற கார்களிலும் நாம் எதிர்பார்க்கலாம், ஏனெனில் இதே போன்ற இஞ்ஜின்களையே இந்த கார்களிலும் பொறுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience