• English
  • Login / Register

ARAI குழு திரு.ராஜன் வதேராவை தலைவராக நியமித்தது

published on செப் 25, 2015 03:31 pm by cardekho

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்திய வாகன ஆராய்ச்சி கூட்டமைப்பின் (ARAI) புதிய தலைவராக திரு. ராஜன் வதேரா மற்றும் புதிய துணைத் தலைவராக திரு விக்ரம் கிர்லோஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஒரு செய்தி வெளியீட்டில் ARAI அறிவித்துள்ளது. ARAI குழுவின் தலைவர் பதவியை திரு. வதேராவிற்கு முன்பு, திரு. வினோத் தாசரி பொறுப்பேற்றிருந்தார்; மற்றும் திரு. கிர்லோஷ்கரின் துணை தலைவர் பதவியை இதற்கு முன் திரு. வதேரா வகித்திருந்தார்.

திரு. வதேரா, இதற்கு முன்னர் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் டிரக் மற்றும் பவர் டிரைன் பிரிவிற்கு தலைவராகவும், தலைமை நிர்வாகியாகவும்; மற்றும் மஹிந்த்ராவின் ஆராய்ச்சி கூடத்திற்கு தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார். மேலும், ARAI -இன் அதிகார குழுவில் திறம்பட பங்கேற்று, கடந்த இரண்டு வருடமாக துணைத் தலைவர் பொறுப்பில் செயலாற்றி, ARAI –இன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவிற்கு திறம்பட திட்டஙகளை வகுத்து, புதிய பரிணாம வளர்ச்சிக்கு பாதை வகுத்தார். 

இது தவிர, ARAI –இன் நிதிநிலை மற்றும் உள்ளக கணக்காய்வு (இன்டெர்னல் ஆடிட்) பிரிவிற்கும் தலைவரான திரு. வதேரா, நிதி நிலையில் கட்டுக்கோப்பான எதற்கும் அசைந்து கொடுக்காத விதிகள் மற்றும் நடைமுறைகளைத் தங்கள் கூட்டமைப்பு பின்பற்றுவதாக தெரிவித்தார். இவரை பொறுப்பான தலைவர் பதவியில் அமரச் செய்வதன் மூலம், தலைவர் பதவிக்கான புதிய செயல்முறைகளை, இந்த சங்கம் எதிர்பார்க்கிறது. ஏனெனில், ARAI கூட்டமைப்பின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் தரத்தை சீரமைத்து, இதன் புகழை உலக அளவில் உறுதியாக எடுத்துச் செல்லும் திறமை திரு. வதேராவிற்கு இருப்பதாக நம்புகிறது.

ARAI- இன் இயக்குனரான திருமதி. ராஷ்மி உர்த்வரேஷீ, இந்த சங்கத்தின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை பற்றி பகிர்ந்து கொள்ளும் போது, அவருடைய முழு நம்பிக்கையையும் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் மீது வைத்திருப்பதாக கூறினார். மேலும், ARAI புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பங்களிப்பாளராக இருக்க ஆசைப்படுவதாக திருமதி. ரஷ்மி தெரிவித்தார். “ராஜன் வதேரா மற்றும் விக்ரம் கிர்லோஸ்கர் போன்ற வாகனத்துறையின் பெருந்தலைவர்களின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் வழி காட்டுதலாலும், ARAIசிறந்த முறையில் பயனடையும் என்று நான் நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார். 

“பல விதத்தில் மாற்றங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், புதிய சவால்களான சாலை பாதுகாப்பு, கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிகள், எரிபொருள் சிக்கனம், போக்குவரத்து பொறியியல் மற்றும் பாதுகாப்பான, தூய்மையான மற்றும் சத்தமில்லாத வாகனங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை செதுக்குவதற்கு ARAI தயாராகி விட்டது. ARAI குழு இந்த சவால்களை சமாளிப்பதற்கு தேவையான முற்போக்கான தொழில்நுட்பங்களைக் கையாளுவதில் முழுகவனம் செலுத்துகிறது,” என்று தனது அதிகாரபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience