அப்போலோ டயர்ஸ் தங்கள் தொழிற்சாலைகளை விரிவு படுத்த, ரூபாய் 2,000 கோடி நிதி திரட்டுவதில் ஈடுபட்டுள்ளது
published on ஆகஸ்ட் 13, 2015 10:40 am by nabeel
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
அப்போலோ டயர்ஸ் இந்தியா நிறுவனம், தென் இந்தியாவில் உள்ள தங்கள் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்காக மூலதன செலவு திட்டத்தை விரிவு படுத்த, ரூபாய் 2,000 கோடி நிதி திரட்ட இந்நிறுவனத்தின் நிர்வாக குழு பச்சை கொடி காட்டியுள்ளது. அப்போலோ டயர்ஸ், மும்பை பங்கு சந்தையில் பதிவு செய்யும் போது. “சென்னையிலும், கேரளாவில் உள்ள கலமாசெரியிலும் உள்ள ஆலைகளை தொடர்ந்து விரிவாக்கம் செய்வதால், மூலதன செலவுகளை பூர்த்தி செய்யும் விதத்தில், ரூபாய் 2,000 கோடியை தவணை கடனாகவோ, அந்நிய செலாவணி தவனை கடனாகவோ, மாற்றுரிமை இல்லாத கடனீட்டு பத்திரங்கள் மூலமாகவோ, தேவைப்படும் போது குறிப்பிட்ட காலத்திற்கு கடனாக திரட்டுவதற்கு இந்நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது”.
இந்நிறுவனம், பாதுகாப்பாற்ற மாற்றுரிமை இல்லாத கடனீட்டு பத்திரங்கள் மூலம், ரூபாய் 1,000 கோடிக்கு மிகாமல், தனது மொத்த கடன் வாங்கும் வரம்புகளையும் மீறாமல், தனது மூலதன செலவு தேவைகளை பூர்த்தி செய்ய, தனது பங்குதாரர்களிடம் தபால் மூலம் அங்கீகாரத்தை கோரி வந்தது.
இந்த டையர் உற்பத்தியாளர், தனது சென்னை தொழிற்சாலை மீது மட்டும் விரிவாக்கம் செய்ய ரூபாய் 1,200 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த ஆலையில் இப்போது டிரக் மாற்றும் பேருந்துகளுக்கு உரிய ஆர சக்கரங்களை (ரேடியல் டையர்) உற்பத்தி செய்கின்றனர். இங்கு, நாள் ஒன்றுக்கு 8,900 டயர்கள் என்ற உற்பத்தி விகிதத்தில் செயல்பட்டு வருகிறார்கள். விரிவாக்கப்பட்ட பின்பு இந்த நிலை உருமாறி, நாள் ஒன்றுக்கு 12,000 டயர்கள் என்று தயாரிப்பு எண்ணிக்கை கூடிவிடும்.
மேற்கூறிய மேம்படுத்தல்களைத் தவிர, இந்த நிறுவனம் சுணம் சர்க்கார் என்பவரை நிர்வாகத்தை சாராத சுயேட்சையாக இயங்கும் இயக்குனராகவும், முன்னாள் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் என்பவரை கூடுதல் இயக்குனராகவும் (சுயேட்சை) உடனடியாக நியமித்து, பொறுப்புகளை வழங்கப் போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
0 out of 0 found this helpful