• English
  • Login / Register

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அடுத்துவரவுள்ள 5 SUV-கள்

published on அக்டோபர் 20, 2015 09:22 am by அபிஜித்

  • 17 Views
  • 5 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

எப்போதும் போல, இந்தியாவில் வாகனம் வாங்குவோரின் முதல் தேர்வாக SUV-கள் உள்ளன. இவற்றில் காணப்படும் இடவசதி, நடைமுறையியல் மற்றும் அதனோடு காணப்படும் தடித்த உருவம் ஆகியவற்றால் தான் அவை அதிகம் விரும்பப்படுகின்றன. இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால், இந்த பிரிவில் உட்படும் செயல்திறன் மிகுந்த கார்கள் மற்றும் பெரிய அளவிலான சந்தையை பிடிக்கும் குறைந்த திறன் கொண்ட கார்கள் என இரு வகையை சேர்ந்த அதிகளவிலான ஸ்போர்ட்ஸ் கார்கள் வெளியாகி உள்ளன. அது ஒரு கச்சிதமான SUV-வாகவோ, கிராஸ்ஓவர் ஆகவோ, முழு அளவிலான SUV-வாகவோ, எப்படியோ அவையெல்லாம் நம்மை வந்து சேர்ந்தன. இதில் ஹூண்டாய் க்ரேடா – இப்போது மிகவும் பிரபலமானது, மாருதி S-கிராஸ், மஹிந்திரா TUV300, BMW X5M, X6M மற்றும் பல, பாக்கியை நீங்களே கூறி கொள்ளுங்கள். அதே நேரத்தில் இந்த பிரிவின் மீதான தயாரிப்பாளர்களின் தாக்குதல் இதோடு முடிந்து போவதாக தெரியவில்லை. ஏனெனில் இப்பிரிவில் தங்கள் தயாரிப்புகளை உட்படுத்தும் முயற்சியில் இன்னும் அதிகளவிலான தயாரிப்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். இதில் நமது எதிர்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்தியுள்ள 5 முக்கிய வாகனங்களின் பெயர்களை கீழே வெளியிடுகிறோம்.

ஜீப் கிராண்ட் செரோகீ

தடித்த உருவம் கொண்ட ஜீப் கிராண்ட் செரோகீயை, அடுத்த ஆண்டு (2016) துவக்கத்தில் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ முடிந்த உடன், பியட்-கிரைஸ்லர் குழுவினரால் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம், தனது பிரபலமான ரோடு பிரவேஷம், ஒரு பாக்ஸ் போன்ற செட்அப் கொண்டு நேரான வரிகளால் மூடப்பட்டு, சதுர வடிவிலான டெயில்லெம்ப்கள், பெரிய வீல்கள், கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்ற தன்மை ஆகிய சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. இதன் விலை நிர்ணயம் ரூ.55 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலான வட்டத்திற்குள் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபகால தகவல் ஒன்றில், பியட் நிறுவனம் தனது ராஞ்சன்கன் தொழிற்சாலையில் வரும் ஆண்டுகளில் ஏறக்குறைய 280 மில்லியன் டாலர் முதலீடு செய்ய போவதாகவும், அதை இந்தியாவில் ஜீப் தயாரிப்புகளை அசம்பிள் செய்யும் கூடமாக உருவாக்கப் போவதாகவும் கூறி, ஏற்புடைய ஒரு காலடியை எடுத்து வைத்துள்ளது. பெரும்பாலும், துவக்கத்தில் வாகனங்களை CBU முறையில் கொண்டுவரப்பட்டு, பிற்காலத்தில் அசம்பிள் செய்யும் பணிகள் நடைபெறலாம். மேலும் இந்த முதலீட்டை பயன்படுத்தி, இந்தியாவிலேயே ஒரு புதிய ஜீப் வடிவமைக்கப்பட உள்ளது. அதன் தயாரிப்பு பணிகள் வரும் 2017 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்கும். மற்றபடி, கடினமாக தோற்றமளிக்கும் ராங்குலர் மற்றும் அநேகமாக ரினிகாட் ஆகியவை உட்பட மற்ற ஜீப்களும் இங்கே உருவாக்கப்படலாம்.

உங்கள் பார்வைக்கு: மாருதி பெலினோவின் பிரத்தியேக  படங்கள்: விவிட் இமேஜ் கேலரி!

ஹோண்டா BR-V

பிரியோ அடிப்படையிலான அல்லது என்னை பொறுத்த வரை ஹோண்டா வழங்கும் மொபிலியோ அடிப்படையிலான கச்சிதமான SUV-யான BR-V, இன்னும் சில மாதங்களில் அதன் இந்திய அறிமுகத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தோற்றத்தை குறித்து பார்க்கும் போது, இந்தோனேஷியா ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து ஷோ-காராக பார்த்ததை வைத்து, அதன் முன்புறம் மற்றும் பின்புறத்தை கடினமாக வடிவமைத்து, வலுவுள்ளதாக தோற்றமளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனோடு பக்கவாட்டு கிளாடிங், பிரோஜக்டர் ஹெட்லெம்ப், DRL-கள் மற்றும் LED டெயில்லெம்ப் ஆகியவை சேர்ந்து கொண்டு ஒரு பிரிமியமாக காட்சியளிக்கிறது. உட்புறத்தை பொறுத்த வரை, சிட்டி மற்றும் ஜாஸ் கார்களில் உள்ள டேஸ் செட்அப்-பை இது பெற்றிருந்தாலும், வேறுபட்ட நிறத் திட்டங்களை கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. தற்போதைய ஏராளமான கச்சிதமான SUV பிரிவில் இணைய உள்ள இந்த கார், வரும் 2016 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவிற்கு கொண்டுவரப்படலாம். இதன் விலை ரூ.7 முதல் ரூ.12 லட்சம் வரையிலான வட்டத்திற்கு உள்ளே அல்லது வெளியே அமையலாம்.

செவ்ரோலேட் டிரையல்பிளேஸர்

அறிமுகத்திற்கு, நமக்கு மிகவும் அருகில் இருக்கும் SUV-வாக இருப்பது டிரையல்பிளேஸர் ஆகும். இது இந்த மாதம் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில் இப்பிரிவிலேயே முழு அளவு SUV-யான இது, மிகப்பெரிய உருவம் மற்றும் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதற்கு பெரிய பரிமாணங்களும், பெருத்த பாக்ஸ் வடிவமைப்பு தன்மைகளையும் கொண்டுள்ளது. உட்புறத்தை பொறுத்த வரை, பரந்து விரிந்து உள்ளதால், மூன்றாவது வரிசையில் உள்ள பயணிகளுக்கு கூட போதுமான இடவசதியை கொண்டு, லெதர் விரிப்பு மற்றும் மெத்தைகள், ஒரு டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், நவீன டுராமேக்ஸ் 2.5 லிட்டர் என்ஜின் மூலம் பொங்கி வழியும் 500 Nm முடுக்குவிசையும், 200 bhp ஆற்றலையும் கொண்டு, இந்த ஆட்டோமெட்டிக் ஆற்றலை பின்புற வீல்களுக்கு மட்டுமே அளிக்குமாறு பொருத்தப்பட்டுள்ளது. இதன் அடுத்தக் கட்டத்தில், ஒரு 2.8-லிட்டர் டீசல் மூலம் ஏறக்குறைய 161 bhp ஆற்றலை அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏறக்குறைய 30 லட்சம் என விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: அடுத்த 15 நாட்களில், அடுத்துவரும் அறிமுகங்கள்

ஆடி Q7

இன்னும் சில மாதங்களில் நம் நாட்டிற்கு, புதுப்பிக்கப்பட்ட ஆடி Q7 வந்து சேர உள்ளது. தற்போதைய மாடலோடு ஒப்பிட்டால், அடுத்த-தலைமுறை Q7-ல் அதிகபடியான எடையை இழப்பதன் விளைவாக, அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கலாம். வெளிபுறம் மெலிந்தும், கோரமாகவும் காட்சி அளிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட Q3-யில் இருப்பது போல, முன்புறத்தில் புதிய ஒற்றை பிரேம் கிரில் செட்அப் கொண்டு, ஒரு புதிய ஜோடி LED பிரோஜக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் நவீன செப்அப்-பான DRL-களை பெற்றுள்ளது. அதேபோல உட்புறத்திலும் TT-யில் உள்ளது போல சீரமைக்கப்பட்ட முழுவதும் டிஜிட்டல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, தற்போதைய Q7-ல் உள்ள அதே 3.0-லிட்டர் V6 என்ஜினை இது பெற்றிருந்தாலும், சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.60 முதல் 80 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டோவர்

ஒரு நல்ல பழைய சூறாவளி, ஒரு காலத்தில் இந்த பிரிவிலேயே சிறப்பாக விற்பனையான SUV-யாக இது இருந்தது. ஆனால் டொயோட்டா பார்ச்யூனர், இதை மேற்கொண்டு சென்ற நிலையில், தற்போது மீண்டும் போட்டிக்கு தயாராக வரவுள்ளதால், அதன் பழைய நிலையை மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஃபோர்டுகளை போல இல்லாமல், எண்ணற்ற அம்சங்களை இந்த கார் தாங்கி வருகிறது. வெளிபுறத்தை செருக்குடன் காட்டும் பெருத்த சிக்னேச்சர் கிரில், முக்கியத்துவம் வாய்ந்த வீல் ஆர்ச்சுகள், பிரோஜக்டர் ஹெட்லெம்ப்கள், DRL-கள், பெருத்த ஹூட் மற்றும் ஒரு வளமான பின்புறம் ஆகியவற்றை பெற்றுள்ளது. உள்ளே காலை எடுத்து வைத்தால், நம் கண்களுக்கு அதிகமாக காண கிடைக்கும் லேதர் அமைப்புகள், ஒரு இரட்டை டோன் கருப்பு-வெளிரிய நிறத் திட்டம், ஃபோர்டு SYNC 2, ஒரு 4x4 கன்ட்ரோல் கினாப், ஒரு விவிட் டிரைவர் இன்பர்மேஷன் கிளெஸ்டர், முன்புறம் மற்றும் பின்புற பயணிகளுக்கு மாற்றக்கூடிய நிலையிலான சீட்கள் மற்றும் பல உள்ளன. இதோடு நமது தேர்வுகள் முடிவதில்லை. ஏனெனில் 2.2-லிட்டர் டீசல் அல்லது அதிக மேம்பட்ட 3.2 லிட்டர்கள் இன்-லைன் 5 சிலிண்டர் என்ஜின் (டீசல்) ஆகியவற்றிலும் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதில் ஒரு மேனுவல் மற்றும் ஒரு ஆட்டோமேட்டிக் என்ற இரு வகையிலான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் உள்ளன. இதில் மேனுவல் வகையில், 2.2-லிட்டர் மட்டுமே அளிக்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை, ஏறக்குறைய ரூ.25 முதல் ரூ.30 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: BMW M2-யை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience