2016 டில்லி ஆட்டோ எக்ஸ்போ – காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிறந்த கான்செப்ட் கார்கள்
published on பிப்ரவரி 08, 2016 06:09 pm by bala subramaniam
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 டில்லி ஆட்டோ எக்ஸ்போ – காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிறந்த கான்செப்ட் கார்கள்
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ஏராளமான கான்செப்ட் கார்கள் பார்வையாளர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து, சிறந்த கான்செப்ட் கார்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள மேலும் வாசியுங்கள்.
மஹிந்த்ரா XUV ஏரோ
ஆட்டோ எக்ஸ்போ ஆரம்பிப்பதற்கு முன்னரே, க்ராஸ்ஓவர் SUV கூபே பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள XUV ஏரோ கான்செப்ட் காரின் டீசரை வெளியிட்டு, மஹிந்த்ரா நிறுவனம் நமது ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. XUV ஏரோ கார், எப்போது சாலைகளில் பாய்ந்தோடும் என்ற விவரங்கள் இன்று வரை வெளிவரவில்லை. எனினும், இது எப்போது சந்தைக்கு வரும் என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு வசீகரமாக உள்ளது. மஹிந்த்ராவின் XUV ஏரோ அறிமுகமாகும் போது, தற்போது மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள BMW X6 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLE கூபே கார்களை விட குறைவான விலையில், அதன் பிரிவில் தன்னிகரில்லாத காராகத் திகழும்.
ஹுண்டாய் HND-14
ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் மற்றும் மாருதி விட்டாரா பிரேஸ்ஸா ஆகிய கார்களின் மேல் மக்களுக்கு உள்ள மோகத்தைத் தன் மீது திருப்பவல்ல, HND 14 கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தி, ஹுண்டாய் நிறுவனம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. HND 14 கான்செப்ட் காருக்கு கார்லினோ என்ற பெயர் சூட்டப்படும் என்று தெரிகிறது. சந்தேகமில்லாமல், இந்த கார் சப்-4 மீட்டர் பிரிவில் தயாரிக்கப்படும்.
டாட்சன் கோ க்ராஸ்
சாதாரண ஹாட்ச்பேக் கார்களுக்கு SUV வர்ணம் பூசுவது என்ற சமீபத்திய வாகன சந்தையின் போக்கில் டாட்சன் கோ க்ராஸ் மாடலும் இணைந்துள்ளது. கோ க்ராஸ் அறிமுகப்படுத்தப்பட்டால், டாட்சன் நிறுவனத்திற்கு கோ மற்றும் கோ+ போன்ற கார்களால் ஏற்பட்ட வீழ்ச்சியை ஈடுகட்டும் விதத்தில், இந்த கார் இந்நிறுவனத்திற்குப் புதிய வெற்றிப் பாதையை அமைத்துத் தரும். மேலும், இந்நிறுவனம் இந்த காரின் உட்புறத்தை தரமாகவும், வசீகரமானதாகவும் மாற்றினால், கோ க்ராஸ் வெற்றி பெறுவது உறுதி.
ரெனால்ட் இயோலாப் கான்செப்ட்
ரெனால்ட் நிறுவனத்தின் நிர்வாகிகளின் கருத்துப்படி, புதிய ஹைபிரிட் இயோலாப் காரின் தயாரிப்பு வடிவம், 2022 –ஆம் ஆண்டு வாகன சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இயோலாப் கான்செப்ட் காரில் 100 விதமான புதிய தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் 20 தொழில்நுட்பங்கள், தற்போது உள்ள ரெனால்ட் கார்களில் உள்ளன. நூற்றில் 60 தொழில்நுட்பங்கள், அடுத்த 8 முதல் 10 வருடங்களுக்குள் நடைமுறை படுத்தப்பட்டு விடும்.
ஆடி ப்ரோலாக்
எதிர்காலத்தில் ஆடி நிறுவனத்தின் தயாரிப்புகள் எவ்வாறு இருக்கும் மற்றும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் எந்த விதமான டிசைனில் கவனம் செலுத்தும் என்ற கருத்துக்களைப் பறை சாற்றும் விதத்தில், ஆடியின் ப்ரோலாக் கான்செப்ட் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான முன்புறத் தோற்றமும், ஆடி நிறுவனத்தின் பிரெத்தியேகமான சிங்கிள்-ஃபிரேம் கிரில், ஆடியின் மேட்ரிக்ஸ் LED விளக்குகள் மற்றும் பல சிறப்பம்சங்கள் ப்ரோலாக் காரில் இடம்பெறுகின்றன.