2016 ஆட்டோ எக்ஸ்போவின் நான்காவது நாளில் 1.09 லட்சம் மக்கள் திரண்டனர்
published on பிப்ரவரி 09, 2016 03:39 pm by nabeel
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 ஆட்டோ எக்ஸ்போ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வாகன திருவிழா முடிவடையும் நேரம் நெருங்கி வந்தாலும் இதைக் காண வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை . சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில் முறையே 1.1 லட்சம் மற்றும் 1.3 லட்சம் பார்வையாளர்கள் இந்த கண்காட்சியை கண்டு களித்தனர். இந்நிலையில் ஆட்டோ எக்ஸ்போவை காண நேற்று 1.09 லட்சம் மக்கள் திரண்டனர். பல்வேறு சர்வதேச கார் நிறுவனங்களின் தயாரிப்புக்கள் , புது புது கான்செப்ட்கள் , இருசக்கர வாகனங்கள் மற்றும் கமர்சியல் (வர்த்தகம் ) வாகனங்கள் என்று அனைத்தையும் வந்திருந்த பார்வையாளர்கள் குதூகலத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.
கார்களைத் தவிர , இந்த கார் தயாரிப்பாளர்கள் விழிப்புணர்வு நாடகங்கள் , பொம்மலாட்டங்கள் போன்றவைகளையும் நடத்தி பார்வையாளர்களையும் இந்த மாபெரும் விழாவின் ஒரு பகுதியாக மாற்றுகின்றனர். சாலை பாதுகாப்பின் அவசியத்தையும் பார்வையாளர்களுக்கு உணர்த்தி வருகின்றனர். இதைத் தவிர பிரமிக்க வைக்கும் ஸ்டன்ட் (சாகச ) நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றுகின்றனர். வெயிலில் கண்காட்சியை சுற்றி பார்த்து களைப்படையும் பார்வையாளர்களுக்கு புட் கோர்ட் பல வகையான உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அரங்கம் எண்.16 ல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழமையான கார்கள் ஏராளமான பார்வையாளர்களின் பாராட்டுதல்களை அள்ளிக் கொள்கிறது. பார்வையாளர்களைத் தவிர ஏராளமான முக்கியஸ்தர்களும் இந்த ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகை தந்து இந்த 2016இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவை சிறப்பித்து வருகின்றனர்.
இன்று தான் இந்த கண்காட்சியின் இறுதி நாள் ! இந்த மாபெரும் வாகன திருவிழாவை நேரில் கண்டு களியுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களால் இந்த நிகழ்வுக்கு வர முடியவில்லை என்றால் கவலை படாதீர்கள் , இந்த கண்காட்சியில் உள்ள அனைத்து அரங்கங்களின் தெளிவான படங்களையும் , அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் கார்தேகோ 360 டிகிரி ஆட்டோ எக்ஸ்போ டூர் மூலமாக ஆன்லைனில் கண்டு களிக்கலாம்.