ஹூண்டாய் கிராண்டு ஐ10 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1120 சிசி - 1197 சிசி |
பவர் | 65.39 - 81.86 பிஹச்பி |
டார்சன் பீம் | 98 Nm - 190.24 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
மைலேஜ் | 17 க்கு 24 கேஎம்பிஎல் |
எரிபொருள் | பெட்ரோல் / சிஎன்ஜி / டீசல் |
- digital odometer
- ஏர் கன்டிஷனர்
- கீலெஸ் என்ட்ரி
- central locking
- ப்ளூடூத் இணைப்பு
- ஸ்டீயரிங் mounted controls
- பின்புற ஏசி செல்வழிகள்
- பின்பக்க கேமரா
- touchscreen
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் ஆகியவை கொண்ட 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம்
அருமையான NVH கன்ட்ரோல் மற்றும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, உள்புற அமைப்பியலின் தரம் சிறப்பாக உள்ளது.
நகர்புற சாலைகளுக்கு தகுந்தாற் போல், கிராண்டு ஐ10 காரில், புதிய 1.2 லிட்டர் டீசல் என்ஜின் அமைக்கப்பட்டு உள்ளது.
லாக் அல்லது அன்லாக் செய்யும் போது, தானியங்கி மடக்கக் கூடியORVM-கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்து, கூடுதல் சவுகரியத்தை அளிக்கிறது.
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
- சிறப்பான வசதிகள்
ஹூண்டாய் கிராண்டு ஐ10 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.
- அனைத்தும்
- பெட்ரோல்
- சிஎன்ஜி
- டீசல்
- ஆட்டோமெட்டிக்
கிராண்டு ஐ10 1.2 kappa ஏரா(Base Model)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல் | ₹4.98 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 எக்ஸென்ட் பிரைம் டி பிளஸ் சி.என்.ஜி.(Base Model)1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 18.9 கிமீ / கிலோ | ₹5.46 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 kappa மேக்னா bsiv1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹5.79 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 மேக்னா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹5.92 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 kappa ஸ்போர்ட்ஸ் option1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹5.96 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹6 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 மேக்னா பெட்ரோல் bsiv1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹6.01 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 kappa ஸ்போர்ட்ஸ் bsiv1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹6.14 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 சிஆர்டிஐ ஏரா(Base Model)1186 சிசி, மேனுவல், டீசல், 24 கேஎம்பிஎல் | ₹6.14 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ் பெட்ரோல் bsiv1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹6.36 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 kappa ஸ்போர்ட்ஸ் டூயல் டோன்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹6.41 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 kappa மேக்னா சிஎன்ஜி bsiv1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 18.9 கிமீ / கிலோ | ₹6.46 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 kappa மேக்னா ஏடி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹6.52 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 மேக்னா சிஎன்ஜி(Top Model)1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 18.9 கிமீ / கிலோ | ₹6.53 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 kappa ஆஸ்டா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹6.62 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 சிஆர்டிஐ மேக்னா1186 சிசி, மேனுவல், டீசல், 24 கேஎம்பிஎல் | ₹6.70 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 prime டீசல்1120 சிசி, மேனுவல், டீசல், 24 கேஎம்பிஎல் | ₹7 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 kappa ஸ்போர்ட்ஸ் ஏடி(Top Model)1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹7.06 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 சிஆர்டிஐ ஸ்போர்ட்ஸ் option1186 சிசி, மேனுவல், டீசல், 24 கேஎம்பிஎல் | ₹7.08 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 சிஆர்டிஐ ஸ்போர்ட்ஸ்1186 சிசி, மேனுவல், டீசல், 24 கேஎம்பிஎல் | ₹7.14 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 சிஆர்டிஐ ஸ்போர்ட்ஸ் டூயல் டோன்1186 சிசி, மேனுவல், டீசல், 24 கேஎம்பிஎல் | ₹7.39 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
கிராண்டு ஐ10 1.2 சிஆர்டிஐ ஆஸ்டா(Top Model)1186 சிசி, மேனுவல், டீசல், 24 கேஎம்பிஎல் | ₹7.59 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
ஹூண்டாய் கிராண்டு ஐ10 விமர்சனம்
Overview
இந்த கிராண்டுஐ10 காரை கூர்ந்து கவனித்தால், இப்போது கூட ஒரு இதமான, விசாலமான, அம்சங்களால் நிறைந்த நகர்புற பயணங்களுக்கான ஒரு குடும்ப ஹேட்ச்பேக் காராக இருப்பதை காணலாம்.
வெளி அமைப்பு
ஹூண்டாய் கிராண்டுஐ10 கார் பார்ப்பதற்கு அவ்வளவு கவர்ச்சிகரமாக தெரியவில்லை. ஆனாலும் அது கச்சிதமாகவே அமைந்துள்ளது. இந்த புதுப்பிப்பு மூலம், இந்த தயாரிப்பு நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு தன்மையை கிராண்டு ஐ10 கார் பிரதிபலிப்பதை காண முடிகிறது.
இந்த காரின் முன்பக்கத்தை பொறுத்த வரை, ஒரு புதிய காஸ்காடிங் கிரில் வடிவமைப்பு, மறுசீரமைக்கப்பட்ட மேற்புற கிரில் மற்றும் மறுவடிவமைப்பை பெற்ற பம்பர், புதிய ஃபேக் விளக்கை சுற்றிலும் அமைந்த புதியLED DRL-கள் உள்ளிட்ட அம்சங்கள் பெரிய மாற்றங்களாகத் தெரிகின்றன.பக்கவாட்டு பகுதியைப் பொறுத்த வரை, 14 இன்ச் அலாய் வீல்கள் மறுவடிவமைப்பு பெற்றுள்ளதோடு, முடிவு பெறுகிறது. பின்பக்கத்தில், வட்ட வடிவிலான எதிரொலிப்பான்கள் உடன் கூடிய கருப்பு நிறத்திலான ஒரு பெரிய உள்ளீடுகள் ஆகியவற்றை கொண்ட ஒரு புதிய பம்பரைப் பெற்றுள்ளது.
பின்பக்கத்தை பொறுத்த வரை, வட்ட வடிவிலான எதிரொலிப்பான்கள் உடன் கூடிய கருப்பு நிறத்திலான ஒரு பெரிய உள்ளீடுகள் ஆகியவற்றை கொண்ட ஒரு புதிய பம்பரைப் பெற்றுள்ளது. இந்த புதிய பின்பக்க பம்பர் வடிவமைப்பைக் குறித்து இரு வேறுகருத்துகள்ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கப்படாத நிலையில் இருந்த மாடலில்அளிக்கப்பட்ட அமைப்பே சிறப்பாக இருந்த நிலையில், அதை தேவை இல்லாமல் மறுவடிவமைப்பு செய்தது போன்ற உணர்வை அளிக்கிறது.
Exterior Comparison
Toyota Etios Liva | Hyundai Grand i10 | |
Length (mm) | 3884mm | 3765mm |
Width (mm) | 1695mm | 1660mm |
Height (mm) | 1510mm | 1520mm |
Ground Clearance (mm) | 170mm | 165mm |
Wheel Base (mm) | 2460mm | 2425mm |
Kerb Weight (kg) | 995kg | 1080 |
இந்த பிரிவிலேயே மிகவும் விசாலமான பூட் வசதியாக 256 லிட்டர், கிராண்டு ஐ20 காரில் வழங்கப்படுகிறது.
Boot Space Comparison
Hyundai Grand i10 | ||
Toyota Etios Liva | ||
Volume | - | - |
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, ஹூண்டாய் நிறுவனத்தின் மூலம் ஒரு நல்ல வடிவமைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலானோரை கவரும் என்பதோடு, குறையாக எதையும் கூற முடியும் என்று தெரியவில்லை.
உள்ளமைப்பு
இந்த காருக்குள் நுழைந்த உடன், கேபின் மிகவும் காற்றோட்டமாகவும் பிரிமியம் தன்மை கொண்ட உணர்வையும் அளிக்கிறது. அது சீட் கவர்களானாலும் சரி, டேஸ்போர்டில் உள்ள பிளாஸ்டிக் ட்ரிம் அல்லது டோர்கள், பட்டன்கள் மற்றும் டச் ஸ்கிரீன் செயல்பாடுகள் கூட என்று எதை எடுத்து கொண்டாலும் ஒரு நல்ல தன்மையை உணர முடிகிறது. காரின் உட்புறத்தில் உள்ள வடிவமைப்பில் எந்தொரு மாற்றத்தையும் ஹூண்டாய் நிறுவனம் செய்யவில்லை. இந்த புதிய பதிப்பு கூட இரட்டை-டோன் தீம், டேஸ்போார்டில் நான்கு பெரிய வட்ட வடிவிலான ஏசி திறப்பிகள், ஒரு ஆழமான செட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர், ஒரு மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உடன் கூடிய பெரிய பன்முக செயல்பாட்டை கொண்ட பட்டன்கள் மற்றும் மேலே ஏறி செல்லும் வகையிலான கியர் ஷிப்ட்டிங் லீவர் ஆகியவற்றை இதிலும் பெற முடிகிறது. சென்டர் கன்சோலில் சிறிய அளவிலான மாற்றம் தென்படுகிறது. ஆனால் இப்போது அதில் இரண்டு புதிய சேர்ப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அவையாவன: ஒரு பெரிய 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் ஒரு முழுமையான ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கன்சோல் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இப்படி ஸ்கிரீன் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில், அதை சுற்றிலும் உள்ள பட்டன்கள் அவசர கதியில் வடிவமைக்கப்பட்டது போன்ற உணர்வை அளிக்கிறது. இதனால் முந்தைய பதிப்பில் இருந்த தொடு உணர்வு இல்லாத இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பில் இருந்த அதே உணர்வை பெற முடிவதில்லை. இதில் உள்ள கிளைமேட் கன்ட்ரோல் கன்சோல் சேர்ப்பு பாராட்டத் தகுந்த விஷயம் ஆகும். இதன்மூலம் போட்டியாளர்கள் இடையே இந்த காருக்கு ஒரு நவீன தன்மை கிடைத்துள்ளது. .
இந்த காரின் முன்பக்க சீட்கள் மிகவும் இதமான அனுபவத்தை கொண்டுள்ளன. இதில் உள்ள குஷன் கடினமாகவும் இல்லை, மென்மையாகவும் இல்லை. சீட்களில் உள்ள மேற்புற வரிகள் மட்டும் பயணிகள் சற்று அசவுகரிய உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. ஓட்டுநர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி கூட அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இழப்பு என்றால், ஹெட்ரெஸ்ட் சீட் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இது கேபினில் இல்லாதது போன்ற உணர்வை அல்லது பிரிமியம் தோற்றம் / உணர்வை இழக்க செய்கிறது. மேலும் குள்ளமான மற்றும் உயரமான பயணிகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியாத நிலையை உருவாக்குகிறது.
கிராண்டு ஐ10 காரில் உள்ள பின்பக்க பயணிகளுக்கு, இதமான பயணத்தை அளிக்கும் வகையில், பின்பகுதியில் உள்ள இரண்டு சீட்களின் அமைப்பும் அமைந்துள்ளது. அதே நேரத்தில் மூன்று பயணிகளை ஏற்றக் கூடிய அளவில் கேபின் பொதுமான அளவில் விசாலமாக உள்ளது. நடுப்பகுதியில் உள்ள பயணிக்கு சற்று இடறலாக, கொஞ்சம் உயர்த்தப்பட்ட சென்டர் டன்னல் மற்றும் பின்பக்க ஏசி திறப்பி கன்சோல் கிரப் ரூம் ஆகியவை அமைந்துள்ளது. இதில் உள்ள ஹெட்ரெஸ்ட் (மற்ற இரண்டு பயணிகளுக்கும் மாற்றி அமைக்கக் கூடிய வகையில் உள்ளது) மற்றும் ஒரு தொடை பெல்ட் (மற்ற இரண்டு பேருக்கும் மும்முனை யூனிட்கள்) அளிக்கப்படாத நிலையில், நடுவில் அமர்வது அவ்வளவு பாதுகாப்பான இடமாக இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. முன்பக்கத்தில் உள்ள கால் இடவசதி, முட்டி இடவசதி ஆகியவை பயணிகளுக்கு போதுமான அளவில் அமைந்துள்ளது. முன்பக்கத்தில் உள்ள சீட்களில் 6 கால்கள் வைக்கக் கூடிய அளவில் இடவசதி உண்டு என்றாலும், அதன் பிரிவில் முன்னணி வகிப்பதாக இல்லை. உயரமான பயணிகள் கூட ஹெட்ரெஸ்ட் குறித்து எந்த குறையும் கூற முடியாது. பின்பக்க இருக்கைகளை கீழ் நோக்கி மடக்க முடியும். ஆனால் இரண்டாக பிரிக்க முடியாது. இது கொஞ்சம் வசதி குறைவான தன்மையாகத் தெரிகிறது. இதில் உள்ள சரக்கு இருப்பிடம் 256 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது. இக்னீஸ் காரில் இருப்பதோடு 5 லிட்டர் அதிகமாக முந்தைய பதிப்பில் இருந்த அளவில் இருந்து எந்தொரு மாற்றத்தையும் பெறாமல், இந்தப் பிரிவில் அதிகமாகவே தொடர்கிறது.
ொழிற்நுட்பம் மற்றும் சாதனங்கள்
இந்த கிராண்டு ஐ10 காரில் தற்போது எளிமையானLED DRL-கள் அளிக்கப்பட்டுள்ளன. இது முன்பக்க பம்பரின் கீழ் பகுதியில் உள்ள பனி விளக்குகளுடன் ஒட்டினாற் போல அமைக்கப்பட்டுள்ளன. இவை வெளிச்சமாக இருப்பதோடு, தங்களின் பணி செவ்வனே செய்கின்றன. இவை சந்தைக்கு அடுத்த யூனிட் ஆக தெரிகிறது. இந்த DRL குறித்த ஒரு சுவாரஸ்சியமான காரியம் என்னவென்றால், கார் இயக்கத்தில் உள்ள போதே நீங்கள் பார்க்கிங் பிரேக்கை போட்டால், இவை உடனே அணைந்துவிடும். இது சாலையில் செல்லும் மற்றவர்களுக்கு பயன்படும் ஒரு காரியமாக அமையும். ஏனெனில் இந்த விளக்குஎரியாத பட்சத்தில், உங்கள் வாகனத்தின் என்ஜின் இயக்கத்தில் இருந்தாலும், வாகனத்தை அசைக்க போவது இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
இந்த காரின் உட்புறத்தில் செய்யப்பபட்டுள்ள ஒரு மாற்றம் என்றால், புதிய 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனை கூறலாம். இதை ஸ்மார்ட்போனில் உள்ள மிரர்லிங் மூலம் இணைத்து கொள்ள முடிவதோடு, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவை இருப்பது கூடுதல் வசதியாக உள்ளது. இந்த கிராண்டு ஐ10 காரில் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனில் வழிகாட்டி காட்சி அமைப்பு உடன் கூடிய ஒரு பின்பக்க பார்க்கிங் கேமரா அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நான் சோதித்து பார்த்த கார்களில், ஸ்மார்ட்போன் இணைப்புகளில் எந்த வித தங்குதடையும் இல்லாமல் செயலாற்றும் முதல் காராக, ஹூண்டாய் கிராண்டு ஐ10 காரைசொல்ல முடியும்.இதன் டச் ஸ்கிரீன் பதிலளிப்பு வேகம், என்னை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்தது. ஸ்டீயரியங் வீல்லில் ஏறிச் செல்லும் கன்ட்ரோல்களில் இருந்து அளிக்கப்படும் கட்டளைகளுக்கு, இந்த இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு நன்றாக ஒத்துழைக்கிறது. மேலும் இந்த புதிய கிராண்டுஐ10 காரில் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பிற்கான வாய்ஸ் கமெண்ட் வசதி இருப்பதால், ஸ்மார்ட்போன் உடனான இணைப்பிற்கு பெரும் உதவியாக உள்ளது
பாதுகாப்பு
இந்த ஹூண்டாய் கிராண்டு ஐ10 காரில் ஓட்டுநர் பக்கத்தில் உள்ள ஏர்பேக், எல்லா வகைகளிலும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சோதித்து பார்த்த உயர் தர வகையான அஸ்டா காரில், இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள்,ABS, இம்பாக்ட் சென்ஸிங் டோர் அன்லாக், பின்பக்க டிஃபேக்கர் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள் மற்றும் கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்கள் காணப்படுகின்றன.
ஃபோர்டு பிகோ காரில் இருப்பது போல, அளிக்கும் பணத்திற்கு ஏற்ப பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை, ஹூண்டாய் கிராண்டு ஐ10 காரில் காண முடிவதில்லை. பாதுகாப்பை பொறுத்த வரை, ஃபோர்டு பிகோ காரில், 6 ஏர்பேக்குகள்,ABS மற்றும்EBD ஆகியவற்றை பெற்று, கிராண்டு ஐ10 காருக்கு போட்டியாக உள்ளது.
செயல்பாடு
இந்த ஹூண்டாய் கிராண்டுஐ10 காரில் இரண்டு விதமான என்ஜின் தேர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவையாவன: ஒரு1.2 லிட்டர் 4 சிலிண்டர், இயற்கையான முறையில் பெட்ரோல் மோட்டாராக அமைந்து, ஒரு 5 ஸ்பீடு மேனுவல்டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டது. புதிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் மோட்டார் உடன் கூடிய 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்ட காரை தான், நாங்கள் சோதித்து பார்த்தோம். காரின் இயக்கத்தை நிறுத்தும் போது மட்டுமே, என்ஜினில் இருந்து ஒரு திணறலை உணர முடிவதோடு, கேபின் அதிக அளவிலான அசைவை அனுபவிக்கிறது.
பெட்ரோல்
இந்த பிரிவில் உள்ள மறுசீரமைப்பை பெற்ற என்ஜின்களில், இந்த 1.2 லிட்டர் என்ஜினும் ஒன்று ஆகும். என்ஜினை நிறுத்துதல் மற்றும் அசைவில், அமைதியாகவும், சாந்தமாகவும் உணர முடிகிறது. அதிக அழுத்தத்தோடு நீங்கள் இயக்கும் போது மட்டுமே, என்ஜினில் திணறல் மற்றும் அசவுகரியத்தை நீங்கள் உணர முடிகிறது. இதன் துவக்க நிலை வகைகளில், மாருதி செலரியோ கார் அளவிற்கு உறுதியான தன்மையை காண முடிவதில்லை. பெரும்பாலான நேரங்களில், முதல் கியருக்கு நீங்கள் மாற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது. இடைப்பட்ட நிலையில் தான் இதன் செயல்பாடு அமைகிறது. இதன் முடுக்குவிசை பேண்டை சுற்றி அமைவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
நெடுஞ்சாலை பயணங்களில், மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்ல முடிகிறது. அதற்கு மேல் என்ஜினில் திணறலை உணர முடிகிறது. இந்த புள்ளியில், அழுத்தங்கள் ஏறக்குறைய சிவப்பு கோட்டை நெருங்கி விடுகின்றன என்பதை குறிப்பிட தேவையில்லை என்று நினைக்கிறோம். இதோடு என்ஜினில் இருந்து வித்தியாசமான சத்தங்களும் வெளியாக ஆரம்பிக்க, அதற்கு மேல் வேகத்தில் செல்லும் உங்கள் ஆசையை கைவிட நேர்கிறது.
இந்த என்ஜின் உடன் ஒரு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஒரு 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். எங்களைப் பொறுத்த வரை, மிகவும் லேசான தன்மையைக் கொண்ட கிளெச் கொண்ட மேனுவல் முறையை தான் சிறப்பாக உள்ளது. மேலும் சிறப்பான கியர்கினாப் கூட பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸில் முடுக்குவிசையை மாற்றங்கள் தகுந்த முறையில் நடைபெற்று, இயங்கும் சாதனங்களுடன் நல்ல பணியை ஆற்றுகிறது. நீங்கள் சாலை நெரிசலில் சிக்கும் போது, இதை விட ஒரு சிறப்பான தன்மை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், எப்போதும் பணப்பையை சந்தோஷமாக வைத்திருப்பது நல்லதல்ல என்று சொல்லுவார்கள். அதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
Performance Comparison (Diesel)
Toyota Etios Liva | Hyundai Grand i10 | |
Power | 67.04bhp@3800rpm | 73.97bhp@4000rpm |
Torque (Nm) | 170Nm@1800-2400rpm | 190.24Nm@1750-2250rpm |
Engine Displacement (cc) | 1364 cc | 1186 cc |
Transmission | Manual | Manual |
Top Speed (kmph) | 180 Kmph | 151.63 Kmph |
0-100 Acceleration (sec) | 17.5 Seconds | 13.21 Seconds |
Kerb Weight (kg) | 995kg | 1080 |
Fuel Efficiency (ARAI) | 23.59kmpl | 24.0kmpl |
Power Weight Ratio | 67.37bhp/ton | - |
டீசல்
பழைய கார்களில் பயன்படுத்தப்பட்ட 1.1 லிட்டர் என்ஜினின் அடிப்படையில் அமைந்த ஒரு மறுசீரமைக்கப்பட்ட ஒரு பதிப்பாக, இந்த டீசல் என்ஜின் அமைந்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம்160Nm இல் இருந்து 190Nm வரையிலான உயர் முடுக்குவிசை வெளியீடு மற்றும்71PS இல் இருந்து75PS வரையிலான அதிகபட்ச ஆற்றல் வெளியீடு ஆகியவற்றை பெற சாத்தியமாகி உள்ளது. இதன்மூலம் நகர்புற சாலைகளில் ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக மாறியுள்ளது.இந்த புதிய 1.2 லிட்டர்'U2 CRDi' மோட்டார் மூலம்1,750rpm என்ற மிகவும் குறைந்த நிலையில் இருந்து190Nm என்ற அதிகபட்சத முடுக்குவிசையை பெற முடிகிறது. இதன்மூலம் கிராண்டு ஐ10 இது வரை இல்லாத ஒரு சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. நெடுஞ்சாலை பயணங்களில் கூட, கிராண்டு ஐ10 காரின் ஒப்பீடு நிலையாக உள்ளது.4,000rpm என்ற நிலையை தாண்டினால்,ஆற்றல் அளவு சரிய ஆரம்பித்து, மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேக கடந்தால் செயல்பாடு குறைகிறது. இந்த கிராண்டு ஐ10 டீசல் கார் 0 இல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகம் என்ற வேகத்தை அடைய 17.32 வினாடிகளை எடுத்து கொள்கிறது. இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தான்.
இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டு, அவசரகதியில் நீங்கள் இதை பயன்படுத்தினாலும் சிறப்பாக செயல்படுகிறது. இதில் உள்ள பின்நோக்கி இழுக்கும் வகையிலான கியர் லாக், மென்மையாக செயல்படுவதோடு, பிடிப்பதற்கு தகுந்ததாகவும் உள்ளது.
இந்த கிராண்டுஐ10 காரில் உள்ள புதிய டீசல் என்ஜின் கூட சிறந்தசெயல்பாட்டை கொண்டது ஆகும். இதில் நகர்புற சாலைகளில் லிட்டருக்கு 19.23 கி.மீ., நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 22.19 கி.மீ. மைலேஜ் அளிப்பதாக, எங்கள் சாதனங்களைப் பயன்படுத்திய சோதனைகளில் தெரிகிறது.
Performance Comparison (Petrol)
Hyundai Grand i10 | Toyota Etios Liva | |
Power | 73.97bhp@4000rpm | 67.04bhp@3800rpm |
Torque (Nm) | 190.24nm@1750-2250rpm | 170Nm@1800-2400rpm |
Engine Displacement (cc) | 1186 cc | 1364 cc |
Transmission | Manual | Manual |
Top Speed (kmph) | 151.63 Kmph | 180 Kmph |
0-100 Acceleration (sec) | 13.21 Seconds | 17.5 Seconds |
Kerb Weight (kg) | 1100 | 1010kg |
Fuel Efficiency (ARAI) | 24.0kmpl | 23.59kmpl |
Power Weight Ratio | - | 66.37bhp/ton |
பயணம் மற்றும் கையாளும் தன்மை
நகர்புற சாலைகளின் பயன்பாட்டிற்காக, ஹூண்டாய் கிராண்டு ஐ10 காரில் உள்ள சஸ்பென்ஸன் டியூன் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் மென்மையாவும் இல்லை, மிகவும் கடினமாகவும் இல்லை. இது இடைப்பட்ட நிலையில் சரியாக உள்ளது. இந்த சஸ்பென்ஸன் எப்போதும் சத்தம் இல்லாமல் செயல்படுகிறது. மிகவும் கடினமான குண்டும் குழியிலும் சென்றால் மட்டுமே சத்தம் கேட்க முடிகிறது. ஏற்றுக் கொள்ளக்கூடியதன்மையும்,ஏற்க முடியாததன்மையும்இணைந்தாற் போல அமைந்துள்ளதால், பயணத்தில் அசவுகரியமாக எப்போதும் உணர
முடிவதில்லை. இதன் உடன் குறைந்த அளவிலான என்ஜின் சத்தம் மற்றும் அதிர்வுகள், கிராண்டுஐ10 கேபினை சிறந்த இருப்பிடமாக அமைக்கிறது.
இதன் ஸ்டீயரிங் வீல் பயன்படுத்த மென்மையாகவும், மிகவும் நெருக்கமான வளைக்கும் ஆரமும் சேர்ந்து, கிராண்டு ஐ10 காரை நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றி உள்ளது. நெடுஞ்சாலை பயணத்திலும் மென்மையான ஸ்டீயரிங் உங்கள் நம்பிக்கை குலைத்து விடுகிறது. ஆனால் சஸ்பென்ஸன் மற்றும் பிரேக்குகள் (ABS கொண்டது) சிறப்பாக செயல்படுகின்றன.
வகைகள்
இந்த ஹூண்டாய் கிராண்டு ஐ10 காருக்கு ஆற்றல் அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கீழ், மொத்தம் 6 வகைகளில் கிடைக்கிறது. அதே நேரத்தில் கிராண்டு ஐ10 காரை இயக்கும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின், 4 வகைகளில் அளிக்கப்படுகிறது.
இந்த காரின் துவக்க வகையான இரா காரில், முன்பக்க பவர் விண்டோக்கள், மேனுவல் ஏர் கண்டீஷனிங், ஓட்டுநர் பக்கத்தில் உள்ள ஏர்பேக் மற்றும் கியர் மாற்ற குறிப்பு உணர்த்தி ஆகியவை அளிக்கப்படுகின்றன. மேக்னா வகையில், மேற்காணும் அம்சங்கள் உடன் சேர்த்து, முன்பக்க ஃபேக் லெம்ப்கள், கீலெஸ் என்ட்ரி, முழு வீல் கவர்கள் மற்றும் பின்பக்க ஏசி திறப்பிகள் ஆகியவை உள்ளன. அடுத்தப்படியாக ஸ்போர்ட்ஸ் வகையில், மேற்கண்ட அம்சங்கள் உடன் பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள், பின்பக்க டிஃபோக்கர், ஒரு குளிர்ந்த கிளெவ்பாக்ஸ் மற்றும் 5.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.இந்த அம்சங்கள் உடன் கூடுதலாக ஸ்போர்ட்ஸ்(O) வகையில், 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் உடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ,LED DRL-கள் மற்றும் 14 இன்ச் ஆலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த வரிசையில் வரும் உயர் தர வகையான அஸ்டா காரில், மேற்கண்ட அம்சங்களுடன்ABS, புஸ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒரு பின்பக்க ஸ்பாயிலர் ஆகியவை உள்ளன.
இதன்மூலம் ஸ்போர்ட்ஸ்(O) வகை உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படுகிறது. ஒப்பீட்டில் பார்க்கும் போது, குறைந்த வகைகள் மிகவும் தரம் தாழ்ந்ததாக தெரிகிறது. இதிலும் குறிப்பாக, இரா மற்றும் மேக்னா போன்ற வகைகளில் ஒரு மல்டிமீடியா சிஸ்டம் கூட தயாரிப்பு நிலையத்தில் இருந்து அளிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அஸ்டா வகையில் மட்டுமே ABS அளிக்கப்படும் நிலையில், அதை வாங்குவது சிறந்ததாகத் தெரிகிறது.
வெர்டிக்ட்
இந்த பிரிவில் அளிக்கும் பணத்திற்கு மதிப்பு கொண்ட ஒரு காராக, ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிலை நிற்க, இந்த புதுப்பிப்பு உதவுகிறது.இந்நிலையில் வெளிப்புற வடிவமைப்பில் குறிப்பிட்ட அளவிலான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. கார் உள்ளே அளிக்கப்பட்டுள்ள வசதிகளில் குறிப்பிடத்தகுந்த மேம்பாடுகளைக் காண முடிகிறது. குறிப்பாக புதிய 1.2 லிட்டர் டீசல் என்ஜின் அளிக்கப்பட்டுள்ளது.இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், இதில் பெரும்பாலான மேம்பாடுகளை உயர்தர வகைகளில் மட்டுமே காண முடிகிறது.
“இந்த கிராண்டுஐ10 காரை கூர்ந்து கவனித்தால், இப்போது கூட ஒரு இதமான, விசாலமான, அம்சங்களால் நிறைந்த நகர்புற பயணங்களுக்கான ஒரு குடும்ப ஹேட்ச்பேக் காராக இருப்பதை காணலாம்.”
ஆனால் போட்டியாளர்களுக்கு இடையில் இது நிலை நிற்க தவறுகிறது. குறிப்பாக, மாருதி சுஸூகி இக்னீஸ் கார் உடன் ஒப்பிட முடிவதில்லை.
ஹூண்டாய் கிராண்டு ஐ10 இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- ஸ்மார்ட்போன் பொருத்தக் கூடிய புதிய இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு (உயர் தர வகையான அஸ்டா காரிலாவது அளிக்கப்பட்டுள்ளது), மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது.
- விசாலமான பயணிகள் மற்றும் சரக்கு வைப்பு இடவசதி. சவுகரியமான அம்சங்கள் குறித்து மிகவும் ஆலோசித்து அமைக்கப்பட்டுள்ளது.
- சந்தையில் இருப்பதில் உயர்தர கேபின் கொண்ட உணர்வு. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, உயர்தர தயாரிப்பாக விளங்குகிறது.
- சிறப்பான டீசல் என்ஜின்– இதில் உள்ள கூடுதல் முடுக்குவிசை மூலம் நகர்புற சாலைகளில் எளிதாக சுற்றி வர முடிகிறது.
- முன்பக்க சீட்களில் அளிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தன்மை, பயன்பாட்டை குறைப்பதாக உள்ளது.
- துவக்க நிலை வகைகளில், ஆடியோ சிஸ்டம் தரமானதாக இல்லை.
- துவக்க நிலை வகைகளில் ஓட்டுநர் பக்க ஏர்பேக் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது, ABS வசதி இல்லை. மாருதி இக்னீஸ் காரில் இரட்டை ஏர்பேக்குகள் மற்றும்ABS வசதிகள் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தABS வசதி, உயர் தர வகையான அஸ்டாவில் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கிராண்டு ஐ10 car news
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
ஸ்பை ஷாட்கள் வெளிப்புற வடிவமைப்பை காட்டுகின்றன. இது புதிய அலாய் வீல்களுடன் ஷார்ப்பான டீடெயிலிங்கை பெறுகிறது.
2017 கிராண்ட் ஐ 10 இந்தியாவில் ஹூண்டாய் சமீபத்திய 'அடுக்கு' குடும்ப கிரில் அறிமுகம் பார்க்கும். எலைட் i20 மற்றும் க்ரீடா உள்ளிட்ட அனைத்து ஹூண்டாய் பிரசாதங்களையும் இது விரைவில் ஏற்றுக் கொள்ளும்.
Grand i10 Facelift Vs Ignis Vs Figo Vs Swift: Variant-To-Variant Feature Comparison
கிராண்ட் ஐ 10 நான்கு வகைகளில் கிடைக்கிறது: எரா, மாக்னா, ஸ்பார்டஸ் மற்றும் ஆஸ்தா
2015 நவம்பர் மாத விற்பனையில், B செக்மெண்ட் ஹாட்ச்பேக் பிரிவில் மிகச் சிறப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் காரை பின் தள்ளி, ஹுண்டாய் கிராண்ட் i10 கார் முந்தியிருப்பது, ஒரு சாதனையாக கருதப
மாருதி சுஜூகி இன்கிஸ் போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக எப்படி
ஹூண்டாய் கிராண்டு ஐ10 பயனர் மதிப்புரைகள்
- All (914)
- Looks (179)
- Comfort (301)
- Mileage (263)
- Engine (151)
- Interior (118)
- Space (121)
- Price (100)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- Verified
- Critical
- Simply சூப்பர்ப் And Great To Have
Great car with high millage and low maintenance. For middle class families it's good to suggest. Coming to the services across India is communicated. Thanks to hyundai for the car.மேலும் படிக்க
- FacingPick அப் Problem Ground Clearness.
Good but not better performance. Facing pickup problem.
- சிறந்த Ever Car
The car is great. I have traveled a lot the miles are great. Looks great, great performance. This is the first car ever I bought. The car is amazing. I want to tell is the car is amazing.மேலும் படிக்க
- Excellent Car
Nice car in hatchback from Hyundai India. Good average, great performance, and looks
- Good Car With Lesser மைலேஜ்
Mileage worst, Safety bad, engine pickup not up to the mark, front grill too delicate, high service cost,மேலும் படிக்க
கிராண்டு ஐ10 சமீபகால மேம்பாடு
நவீன மேம்பாடு: கிராண்டு ஐ10 காரில் இப்போதுABS மற்றும் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகளை பொதுவான அம்சமாக, ஹூண்டாய் நிறுவனம் வழங்கி வருகிறது. முன்னதாக, கிராண்டுஐ10 காரின் ஈரா மற்றும் மேக்னா போன்ற வகைகளில், இந்த அம்சங்கள் வழங்கப்படவில்லை. இந்த மேம்பாட்டிற்கு பிறகு, மேற்கண்ட வகைகளின் விலை 15 ஆயிரம் ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கிராண்டு ஐ10 விலை நிலவரம் மற்றும் வகைகள்: ஹூண்டாய் ஐ10 காரின் விலை 4.91 லட்சம் ரூபாய் முதல் 7.51 லட்சம் (எக்ஸ் ஷோரூம் டெல்லி) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கிராண்டு ஐ10 காரின் பெட்ரோலில் இயங்கும் ஐந்து வகைகள் உள்ளன. அவையாவன: ஈரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் டயல் டோன் மற்றும் ஆஸ்டா. அதே நேரத்தில் டீசலில் இயங்கும் கிராண்டு ஐ10 கார்கள் நான்கு வகைகளில் அளிக்கப்படுகின்றன. அவையாவன: ஈரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா.உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக விளங்கும் வகையைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம், கிராண்டு ஐ10 வகைகள் குறித்த காரியங்கள், இங்கு விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் கிராண்டுஐ10 என்ஜின் மற்றும் மைலேஜ்: இந்த கிராண்டு ஐ10 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் அதே அளவிலான டீசல் என்ஜின் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. இவை ஒரு ஐந்து ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் நான்கு ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்ட நிலையிலும் கிடைக்கிறது.இந்த கிராண்டு ஐ10 காரின் எரிபொருள் சிக்கனத்தை பொறுத்த வரை, பெட்ரோல் மற்றும் டீசல் மேனுவல் வகைகள், முறையே லிட்டருக்கு 18.9 கி.மீ மற்றும் 24 கி.மீ என்ற அளவில் மைலேஜ் அளிக்கின்றன. பெட்ரோல் ஆட்டோமேட்டிக்பொறுத்த வரை, இதன் மேனுவல் கூட்டாளி வகையை விட சற்று குறைவாக, அதாவது லிட்டருக்கு 18.9 கி.மீ. என்ற அளவிலான மைலேஜ் அளிக்கிறது.
ஹூண்டாய் கிராண்டுஐ10 அம்சங்கள்: இந்த கிராண்டு ஐ10 காரில், ஒரு 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உடன் பின்பக்க ஏசி திறப்பிகள், மின்னோட்ட முறையில் மடக்கக்கூடிய மற்றும் மாற்றி அமைக்கக் கூடியORVM- கள், புஸ் பட்டன் ஸ்டார்ட், பின்பக்க பார்க்கிங் கேமரா உடன் சென்ஸர்கள், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங் போன்ற அம்சங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது தவிர, கிராண்டு ஐ10 காரின் ஸ்போர்ட்ஸ் வகைக்கு மட்டும் சிறப்பாக, ஒரு இரட்டை டோன் வெளிப்புற பெயிண்ட் திட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் அளித்துள்ளது. இந்த கிராண்டு ஐ10 காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்து வரை, என்ஜின் மொபைலைஸர் மற்றும் ஓட்டுநர் பக்கத்தில் உள்ள ஏர்பேக் ஆகியவை எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது. உயர் தர வகைகளில் பயணிகள் பக்க ஏர்பேக் மற்றும்ABS ஆகிய வசதிகள் கூட வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கிராண்டுஐ10 போட்டியாளர்கள்: இந்த கிராண்டு ஐ10 கார் உடன் மாருதி சுஸூகி இக்னிஸ், மாருதி சுஸூகி ஸ்விஃப்ட், நிசான் மைக்ரா, ஹோண்டா பிரையோ, டாடா டையகோ, ஃபோர்டு ஃபிகோ மற்றும் மஹிந்திராKUV100 NXT போன்ற கார்கள் போட்டியிடுகின்றன.
ஹூண்டாய் கிராண்டு ஐ10 படங்கள்
ஹூண்டாய் கிராண்டு ஐ10 -ல் 48 படங்கள் உள்ளன, ஹேட்ச்பேக் காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய கிராண்டு ஐ10 -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.
ஹூண்டாய் கிராண்டு ஐ10 உள்ளமைப்பு
ஹூண்டாய் கிராண்டு ஐ10 வெளி அமைப்பு
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) For the availability, we would suggest you to please connect with the nearest au...மேலும் படிக்க
A ) Hyundai Grand i10 Nios AMT Sportz is powered by a 1197 cc engine which is availa...மேலும் படிக்க
A ) Hyundai Grand i10 Nios Magna doesn't feature Anti-Theft Alarm or Anti-Theft Devi...மேலும் படிக்க
A ) For that, we'd suggest you please visit the nearest authorized service center as...மேலும் படிக்க
A ) Hyundai offers the Grand i10 BS6 in only two petrol-MT variants: Magna and Sport...மேலும் படிக்க