பேன்ட்லே கார்கள்
4.5/552 மதிப்புரைகளி ன் அடிப்படையில் பேன்ட்லே கார்களுக்கான சராசரி மதிப்பீடு
இந்தியாவில் இப்போது பேன்ட்லே நிறுவனத்திடம் 1 எஸ்யூவி, 1 கூப் மற்றும் 1 செடான் உட்பட மொத்தம் 3 கார் மாடல்கள் உள்ளன.பேன்ட்லே நிறுவன காரின் ஆரம்ப விலையானது பென்டைய்கா க்கு ₹ 5 சிஆர் ஆகும், அதே சமயம் பிளையிங் ஸ்பார் மிகவும் விலையுயர்ந்த மாடலாக ₹ 7.60 சிஆர் இருக்கிறது. இந்த வரிசையில் லேட்டஸ்ட் மாடல் பிளையிங் ஸ்பார் ஆகும், இதன் விலை ₹ 5.25 - 7.60 சிஆர் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பேன்ட்லே கார்கள் விலை பட்டியல் இந்தியாவில்
மேலும் படிக்க
பேன்ட்லே கார் மாதிரிகள்
பிராண்ட்டை மாற்றுபேஸ்லிப்ட்
![பேன்ட்லே பென்டைய்கா பேன்ட்லே பென்டைய்கா](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
VS
![கான்டினேன்டல் vs பேண்டம் கான்டினேன்டல் vs பேண்டம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பேன்ட்லேகான்டினேன்டல்Rs.5.23 - 8.45 சிஆர் *
ரோல்ஸ் ராய்ஸ்பேண்டம்Rs.8.99 - 10.48 சிஆர் *
VS
![பென்டைய்கா vs டிபிஎக்ஸ் பென்டைய்கா vs டிபிஎக்ஸ்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
பேன்ட்லேபென்டைய்காRs.5 - 6.75 சிஆர் *
ஆஸ்டன் மார்டின்டிபிஎக்ஸ்Rs.3.82 - 4.63 சிஆர் *
பேன்ட்லே செய்தி
இங்கிலாந்து நாட்டின் க்ரூவ்-வில் உள்ள பென்ட்லி நிறுவனத்தின் தலைமையகத்தில், அந்நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் SUV-யான பென்டைய்கா-வின் தயாரிப்பு துவக்கப்பட்டுள்ளது. பென்ட்லி நிறுவனத்தின் முதல் SUV தயாரிப்பான பென்டைய்காவின் விநியோகம், வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவக்கப்படும். £840 மில்லியன் முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள பென்டைய்காவின் தயாரிப்பு, க்ரூவ் தயாரிப்புத் தொழிற்சாலையில் முழுவீச்சில் நடைபெற உள்ளது என்று அந்த வாகன தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், பெண்ட்லி நிறுவனம் பெண்டேகா SUV காரை வெளியிடப்பட்ட போது, நம் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடியது. மேலும், நாம் வெளியிட்டது போலவே முதல் காருக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II உரிமையாளரானார் என்பதும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால், அத்துடன் இந்த காரின் விற்பனை முடிவடைந்துவிட்டது என்ற செய்தி கேட்டவுடன் அனைவரின் உற்சாகமும் வடிந்து விட்டது. மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் பெண்டெகா SUV அனைத்து சாலைகளிலும் வலம் வரும் என்ற நமது நம்பிக்கை ஒளி வேகமாக சிதறடிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை. எனினும், இந்த கார் தயாரிப்பாளர் நம்மை கவலையில் இருந்து மீட்டெடுக்க, முதலில் தயாரான கார்களை ‘ஃபர்ஸ்ட் எடிஷன்’ என்று பெயரிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கொண்டுவந்துள்ளார்.
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பென்ட்லீயின் பென்டேகா SUV காரில், எலெக்ட்ரானிக் டர்போ சார்ஜர் கொண்ட டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியூட்டும் செய்தியை இந்நிறுவனத்தின் முதன்மை பொறியாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். தற்போது வெளிவரவுள்ள, சொகுசு வசதிகள் மேம்படுத்தப்பட்ட SUV –யில் பொருத்தப்படவுள்ள மோட்டார், ஆடி Q7 ரகத்தின், அதிக செயல்திறன் வாய்ந்த இரண்டாம் ஜெனரேஷன் மாடலில் பொருத்தப்பட்டதாக இருக்கும்.
By அபிஜித்அக்டோபர் 23, 2015
இது ஒரு SUV-களின் காலம். 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில், பென்ட்லி நிறுவனம் தனது முதல் SUV-யான பென்ட்லி பென்டைகாவை காட்சிக்கு வைத்துள்ளது. பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான பென்ட்லியை பொறுத்த வரை, உலகிலேயே அதிக வேகமான, மிகவும் சக்தி வாய்ந்த, அதிக ஆடம்பரமான மற்றும் மிகவும் பிரத்யேகமான SUV என்றால், அது பென்டைகா தான். பென்டைகாவில், புதிய ட்வின்-டர்போ சார்ஜ்டு 6.0-லிட்டர் W12 என்ஜின் மூலம் 608 PS ஆற்றலையும், 900 Nm என்ற அதிக முடுக்குவிசையும் கிடைப்பதால், அதை எதிர்த்து வாதாட முடியாது. மேற்கூறிய ஆற்றல் கூடத்தை கொண்டுள்ள இந்த SUV, 4.1 விநாடிகளில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 301 கி.மீ. வேகம் வரை செல்ல முடிகிறது.
By bala subramaniamசெப் 16, 2015