2025 பட்ஜெட்: இந்திய வாகனத் துறைக்கு என்ன கிடைத்தது?
bikramjit ஆல் பிப்ரவரி 01, 2025 11:02 pm அன்று மாற்றியமைக்கப்பட்டது செய்யப்பட்டது
- 84 Views
- ஒரு கருத்தை எழுதுக
பட்ஜெட் 2025 நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு பெரிதாக எந்த மேம்பாட்டையும் கொடுக்காது என்றாலும் கூட புதிய வரி விதிப்பு விகிதம் சற்று ஆறுதலை அளிக்கும் வகையில் உள்ளது. மேலும் இது உங்களது கனவு காரை வாங்குவதற்கும் கொஞ்சம் உதவலாம்.
-
வருமான வரி விலக்கு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
35 EV பேட்டரி உற்பத்தி பொருட்களுக்கு சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
-
PLI திட்டத்திற்கு ரூ.2,819 கோடி ஒதுக்கீடு.
-
கிராமப்புறங்களில் வாகன தேவையை அதிகரிக்க தன்-தான்ய கிரிஷி யோஜனா திட்டம் அறிமுகம்.
-
வாகனத் துறையில் MSME -களுக்கு எளிமையான் கடன் அணுகல்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்திய யூனியன் பட்ஜெட் 2025 -ல் இந்தியாவின் வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரி சீர்திருத்தங்கள் முதல் EV -களுக்கான ஊக்க தொகைகள் மற்றும் உற்பத்திக்கான ஆதரவு வரை, பட்ஜெட்டில் தொழில்துறைக்கு சில நல்ல விஷயங்கள் உள்ளன. இந்திய வாகனத் துறையின் வளர்ச்சி இந்த பட்ஜெட்டில் எப்படி திட்டமிடப்பட்டுள்ளது என்பதை இங்கே தொகுத்துள்ளோம்:
2025 பட்ஜெட் வாகனத் தொழிலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ?
வருமான வரி விலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், பயணிகள் கார்கள் மற்றும் பிற வாகனங்கள் ஆகியவற்றில் மக்கள் செலவு/முதலீடு செய்ய ஊக்குவிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்களை அதிகரிப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்தப்படுகிறது. EV களின் விலையை குறைக்கும் முயற்சியாக EV -யின் பேட்டரியை உருவாக்குவதற்குத் தேவையான 35 மூலதனப் பொருட்களின் மீதான சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதோடு உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கித் திருப்ப உதவலாம்.
மேலும் படிக்க: Honda City அபெக்ஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம்
PLI திட்டம் என்பது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், விற்பனையை அதிகரிக்கவும் ஊக்கத் தொகைகளை கொடுக்கும் ஒரு திட்டமாகும். ஆட்டோமொபைல் துறையில் அதன் கவனம் எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் ஃபியூல் செல்-பவர்டு வாகனங்களை அவற்றின் பாகங்களுடன் உருவாக்கவும் இது ஊக்குவிக்கும். செலவைக் குறைப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் வலுவான விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவது ஆகியவற்றை இது அதன் நோக்கமாக கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஆட்டோ மற்றும் உதிரிபாக உற்பத்தி துறைக்கு அரசாங்கம் ரூ. 2,819 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.3,500 கோடியுடன் ஒப்பிடும் போது குறைவாகும். இருப்பினும் இது தொழில்துறைக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தில் மேலும் முதலீடு செய்ய உதவும். இது இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் ஒட்டுமொத்தமாக போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும்.
FDI, EMI மற்றும் இன்சூரன்ஸ் துறைக்கு ஊக்கம்
இந்த பட்ஜெட் நாட்டிற்கு நேரடியாக அன்னிய முதலீடுகளை (FDI) அதிகப்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது. வாகன உற்பத்தி மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் இது நிச்சயமாக உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களான டொயோட்டா, டெஸ்லா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகியவற்றில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை விரைவுபடுத்தவும் இது உதவும்.
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது எப்போதும் விரிவடைந்து வரும் இந்தியா சந்தையில் அதிக மூலதனத்தையும் நிபுணத்துவத்தையும் புகுத்த உதவும். அன்னிய நேரடி முதலீட்டின் அதிகரிப்பு, இந்தியாவில் மேம்பட்ட வாகனத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு மேலும் துணைபுரியும், இதனால் தொழில்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
மாதாந்திர தவணைகளுக்கான EMI ஆப்ஷன்கள் எளிதாக இருக்கும். எளிதான நிதியளிப்பு ஆப்ஷன்கள் வருவதால் கார்கள் மற்றும் பைக்குகளை சாமான்ய இந்தியர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றப் போகிறது. ஒரு வீட்டில் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பஜாஜ் பல்சர் ஆகியவற்றை உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலை குறைவான மாதாந்திர பணம் செலுத்தும் முறையிலேயே கிடைக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஆகவே சிறிய செடான்கள் முதல் மோட்டார் சைக்கிள்கள் வரை அனைத்தின் விற்பனையையும் அதிகரிக்கும்.
சொந்தமாக ஒரு ஸ்கோடா கைலாக் அல்லது யமஹா FZ ஆகியவற்றை எளிதான மாதாந்திர தவணைகள் மூலமாக பெற முடியும்.
கவனம் செலுத்தப்பட்டுள்ள மற்ற விஷயங்கள்
தன்-தான்ய கிரிஷி யோஜனா மற்றும் கிசான் கிரெடிட் கார்டு வரம்புகள் ஆகியவை கிராமப்புற வருமானத்தை அதிகரிக்கப் போகின்றன. எனவே டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வணிக வாகனங்கள் போன்ற வாகனங்களுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கும். இது கிராமப்புற வாகன சந்தைக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது.
MSME அதாவது சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோமொபைல்களின் விநியோகச் சங்கிலியில் மிகவும் முக்கியமான நிறுவனங்களாக இருப்பதால் அவை பட்ஜெட்டில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளன. கடன் உத்தரவாதங்களை மேம்படுத்துவது, வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்ஷிப்களின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும் நிதியுதவி அணுகலை எளிதாக்கும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் யூனியன் பட்ஜெட் 2025 ஆனது வரி விலக்கால் EV வளர்ச்சி, உள்ளூர் உற்பத்தி மற்றும் MSME -கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இதனால் வாகனத் தொழிலுக்கு வலுவான அடித்தளத்தை கிடைக்கும் மற்றும் இந்தியாவின் உலகளாவிய பங்களிப்பை அதிகரிக்கிறது. பட்ஜெட் 2025 பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன?
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.