• English
  • Login / Register

சென்னயில் விண்டேஜ் கார் கண்காட்சி: பழமையான கார்களின் அணிவகுப்பு

published on ஆகஸ்ட் 24, 2015 02:36 pm by manish

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்:

பிரபல அமெரிக்க நடிகர் எடி ஆல்பர்ட் ரோமானிய விடுமுறை நாட்களில் ஓட்டிய வரலாற்று புகழ்மிக்க  டோபோலினோ 500B கார்களை சென்னை நகர சாலைகளில் பார்க்க நேர்ந்தால் ஆச்சரியம் அடைய வேண்டாம். இந்த ஞாயிற்று கிழமை சென்னை வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தாஜ் கனிமாரா ஹோட்டலில் நடத்தப்பட்ட  பழமையான கார்களின் அணிவகுப்பில் தான் இந்த  டோபோலினோ 500B கார் மற்றும் சுமார் 30 இதர பழமையான கார்கள்  அணிவகுத்து தங்களது பிரம்மிக்கத்தக்க அழகில் சென்னை நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த நிகழ்வில் வயது வித்தியாசம் இன்றி ஏராளமான வல்லுனர்கள் குழுமி இருந்தனர். பல கார் பந்தயங்களில் கலந்து கொண்டவரும் ஒரே பெண் பழைய கார் உரிமையாளருமான  அனிதா சுப்ரமணியம் தனது பாட்டனார் வைத்திருந்த ஆஸ்டின் 16  காருடன் வந்திருந்தார்.  அவர் அந்த காரைப் பற்றி கூறுகையில், “ வெறும் பழமையான கார் என்பதால் மட்டும் அல்ல இது எனக்கு உணர்வு பூர்வமாகவும் மிக நெருக்கமானது. என் பாட்டனார் என்னை இந்த  காரில் தான் பள்ளிக்கு அழைத்து செல்வார். அந்த இனிய நினைவுகள் இன்னும் என் நினைவில் நிழலாடுகின்றன"என்று கூறினார்.

இந்த கண்காட்சியில் பங்கேற்ற கார்களில்   மிகவும் பழமையானதான 1926 ஆம் ஆண்டு தயாரிப்பான ஆஸ்டின் சம்மி, 1959 முதல் 1970 வரை பிரபலமாக இருந்த நிறைய மெர்சிடீஸ் பென்ஸ் கார்கள், 1930 ஆம் ஆண்டு தயாரிப்பான செவர்லே க்பீடன் கார்,  செவர்லே வின் மற்றுமொரு தயாரிப்பான ப்ளீட்மாஸ்டர் மற்றும் டாட்ஜ் நிறுவனத்தின் கிங்க்ஸ்வே என ஏராளமான கார்களை பார்க்கமுடிந்தது. இந்த கண்காட்சியின் தொடர்ச்சியாக இந்த கார்களின் அணிவகுப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி எக்மோர் டான்பாஸ்கோ பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த காரின் வடிவமைப்பும் தயாரிக்கப்பட்ட உத்திகளும் புத்திசாலிதனத்திற்கு கிடைத்த வெற்றி என்றே கொள்ளவேண்டும் ஏனெனில் அந்த கால கட்டத்தில் இந்த கார்கள் சிறிய கார்களின் தோற்றத்தை முழுதும் மாற்றிய பெருமை கொண்டவையாகும். மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் க்ளபின் உடைய காரியதரிசி திரு. வி எஸ் கைலாஸ் கூறுகையில், “  விமான பொறியாளர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட டோபோலினோ 500B கார் மிகச் சிறிய 500 c c என்ஜின் பொருத்தப்பட்டுள்ள காராகும். அந்த எஞ்சினும் காரின்  ஆக்ஸலுக்கு முன்புறம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி ரேடியேடர் எஞ்சினுக்கு பின்புறம் பொருத்தப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது". அவரிடம் இது போல் 7 பழமையான கார்கள் உள்ளது என்பது கூடுதல் செய்தி.  இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கார்கள் அனைத்தும் சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள மேசன் ஹால் கொண்டு செல்லப்பட்டு  இந்த விழாவின் ஒரு பகுதியாக  கைவிடப்பட்ட குழந்தைகளின் பார்வைக்காக பிரத்யேகமாக வைக்கப்பட இருக்கிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஎன்டபில்யூ எம்3
    பிஎன்டபில்யூ எம்3
    Rs.1.47 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • க்யா கார்னிவல்
    க்யா கார்னிவல்
    Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • க்யா ev9
    க்யா ev9
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • நிசான் மக்னிதே 2024
    நிசான் மக்னிதே 2024
    Rs.6.30 - 11.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • பிஒய்டி emax 7
    பிஒய்டி emax 7
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
×
We need your சிட்டி to customize your experience