வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி 2024: புதிய காருக்கு ரூ.20,000 வரை தள்ளுபடியை பெறலாம்
published on ஆகஸ்ட் 30, 2024 07:14 pm by yashika
- 84 Views
- ஒரு கருத்தை எழுதுக
உங்கள் பழைய, சுற்றுசூழலுக்கு மாசுபடுத்தும் வாகனங்களை நீங்கள் ஸ்கிராப் செய்தால் தள்ளுபடியை வழங்க கார் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான நிபந்தனைகள் உள்ளன. மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) உடனான சமீபத்திய சந்திப்பில், போக்குவரத்து துறை அமைச்சரான திரு. நிதின் கட்கரி, உங்களின் பழைய காரை ஸ்கிராப் செய்தால், புதிய காரை வாங்கும் போது அதில் தள்ளுபடியை வழங்க வாகன உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.
ஆனால் நீங்கள் அதற்காக திட்டமிடுவதற்கு முன், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சில முக்கிய விஷயங்கள் இதோ:
-
செய்தி அறிக்கைகளின்படி, தள்ளுபடியானது வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 1.5% அல்லது ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனத்திற்கு ரூ.20,000, எது குறைவோ அது பொருந்தக்கூடியதாக இருக்கும்.
-
வாகனம் கடந்த 6 மாதங்களுக்குள் ஸ்கிராப் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது அதற்க்கு முன்னரே ஸ்கிராப் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் தள்ளுபடிக்கு தகுதி பெற மாட்டீர்கள்.
-
சலுகை 1 வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். இருப்பினும், கார் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு சலுகையை நீட்டிக்க அல்லது மாற்றிக்கொள்ளலாம்.
-
மாருதி சுசுகி, டாடா, மஹிந்திரா, ஹூண்டாய், கியா, ஹோண்டா, டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் MG போன்ற வாகன உற்பத்தியாளர்கள் இந்த தள்ளுபடிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த பிராண்டுகளின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.
-
மெர்சிடிஸ் பென்ஸ் ஆனது ரூ. 25,000 பிளாட் தள்ளுபடியை வழங்குவதாகக் கூறப்படுகிறது, இது முன்னர் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச தள்ளுபடியான ரூ. 20,000-ஐ விட அதிகமாகும்.
உங்கள் பழைய காரை ஸ்கிராப் செய்வதன் மூலம் நீங்கள் பெறக்கூடிய வேறு சில சலுகைகளும் உள்ளன:
-
ஸ்கிராப்பிங் சென்டர்களில் இருந்து ஸ்கிராப் மதிப்பு: ஸ்கிராப்பிங் சென்டர்களில் இருந்து புதிய வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 4 முதல் 6% வரை நீங்கள் பெறலாம்.
-
வாகனப் பதிவுக் கட்டணம்: புதிய கார்களுக்கான பதிவுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
-
மாநில அரசு சலுகைகள்: மாநில அரசுகள் மோட்டார் வாகன வரியில் 25% வரை சலுகைகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த ஸ்கிராப்பேஜ் நன்மைகள் 15 ஆண்டுகளுக்கு மேல் பழைய தனியார் வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த காலகட்டத்திற்கு அப்பால் உங்கள் காரை வைத்திருக்க விரும்பினால், அது கட்டாய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உங்கள் வாகனம் சோதனையில் தோல்வியுற்றால், தேவையான பழுதுபார்ப்புகளைச் செய்த பிறகு நீங்கள் மீண்டும் சோதனைக்கு அனுமதிக்கப்படுவீர்கள். மீண்டும் தவறினால், வாகனத்தை நீங்கள் கண்டிப்பாக அந்த காரை ஸ்கிராப் செய்தாக வேண்டும்.
மேலும் படிக்க: புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா ? உங்களிடம் உள்ள பழைய காரை ஸ்கிராப் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?
A post shared by CarDekho India (@cardekhoindia)
வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி என்றால் என்ன?
ஆகஸ்ட் 2021 -ல் சாலைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை படிப்படியாக அகற்றும் முயற்சியை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தூய்மையான மற்றும் பாதுகாப்பான வாகனங்களைக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பை படிப்படியாக உருவாக்குவதே இக்கொள்கையின் குறிக்கோள். தன்னார்வ வாகனம்-தொகுதியை நவீனமயமாக்கல் திட்டத்தின் கையேட்டின் படி, கொள்கை பின்வரும் நோக்கங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது:
-
காற்று மாசுபாட்டைக் குறைத்தல்: தகுதியற்ற கார்களை அகற்றுவது காற்று மாசுபாட்டை 15-20% குறைக்க உதவும், இது 'கார்பன் இல்லாத தேசத்தின்' இலக்குக்கு பங்களிக்கும்.
-
வேலைவாய்ப்பு உருவாக்கம்: ஸ்கிராப்பிங் மையங்களை உருவாக்குவதன் மூலம் அது அதிக அளவு வேலை வாய்ப்புக்களை உருவாக்க உதவக்கூடும்.
-
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு: கடுமையான பாதுகாப்பு தரநிலைகள் காரணமாக புதிய வாகனங்கள் பொதுவாக பாதுகாப்பாக இருக்கும்.
-
பொருளாதார நன்மை: இந்த புதிய ஸ்கிராப் கொள்கை புதிய வாகனங்களுக்கான தேவையை அதிக அளவில் உருவாக்கும், இது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்.
-
குறைந்த மாசுபாடு: நவீன உமிழ்வு தரநிலைகளை கடைபிடிக்கும் புதிய வாகனங்கள் மாசுபாட்டை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி அறிக்கையின்படி, வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் சலுகைகள் குறித்து உங்கள் எண்ணங்கள் என்ன என்பதை கீழே உள்ள கருத்துக்கள் பகுதியில் பகிரவும்.
மேலும் படிக்க: புதிய MG ஆஸ்டர் (ZS) சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்தியா-ஸ்பெக் மாடலுக்கான புதுப்பிப்பைப் பற்றி அறிந்துகொள்வோம்
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful