ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகவுள்ள புதிய கார்கள்
modified on ஆகஸ்ட் 01, 2015 04:49 pm by அபிஜித்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜூலை மாதத்தில் அதிக அளவிலான சொகுசு ரக கார்களும், அதிக விற்பனை ரக கார்களும் அறிமுகப்படுத்தபட்டன. செல்வ செழிப்பு வாய்ந்த வாடிக்கையாளர்களின் மனதில் முதல் இடங்களை பெற்ற ஹுண்டாய் கிரேட்டா, ஹோண்டா ஜாஸ் ஆகியவற்றை தவிர மசேராட்டி கிப்ளி, குயாட்ரோபோர்ட் மற்றும் BMW X3, X6 ஆகிய கார்கள் பல தரப்பட்ட மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தவிர பல கார்களும் புதுப்பிக்க பட்டு வெளி வந்தன. மேலும் சேவீ யின் டிரைல்பிலேசர், ஸ்பின் ஆகிய இரண்டு மாடல்களைப் போல பலப் பல மாடல்கள் வரும் மாதங்களில் வெளிவரவுள்ளது. ஜூலை மாதத்தை போலவே ஆகஸ்ட் மாதத்திலும் புதிய கார்களின் பட்டியல் நீண்டு, அறிமுகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 4 கார்களும் ஆகஸ்ட் மாதத்தில் விமரிசையாக அறிமுகமாக வரிசை கட்டியுள்ளன.
ஃபோர்ட் பிகோ ஆஸ்பியர்
ஃபோர்ட் நிறுவனத்தின் முதல் அடியாக கச்சிதமான செடான் பிரிவில் பிகோ ஆஸ்பியர் மாடலின் உதவியுடன் அழுத்தமான முத்திரையை பதித்துள்ளது. இதன் வெளிப்புற தோற்றம் நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவராலும் புகழப்படுகிறது. அமெரிக்க மக்கள் பாதுக்காப்பு அம்ஸங்களில் அதிக கவனம் செலுத்துவதால், மேம்படுத்தபட்ட இரண்டு முன்புற காற்று பைகள் எல்லோரையும் ஈர்த்தன. மேலும் உயர் ரக 1.5 லிட்டர் தானியங்கி பெட்ரோல் வகைகளில் 6 காற்று பைகளும், ESP, TCS மற்றும் ஹில் லாஞ்ச் அஸ்சிஸ்ட் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முழு வடிவ பாகங்களும் சட்டங்களும் உயர்தர உறுதிமிக்க இரும்பினால் உருவாக்கபட்டு வலுவுடன் அமைந்துள்ளது.
ஃபோர்ட் பிகோ ஆஸ்பியர் - இன் முன்பதிவு ஏற்கனவே ஆரம்பித்து இருந்தாலும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் உத்தேசமாக 10 ஆம் தேதி இதன் அறிமுகம் நடத்தப்படவுள்ளது. இதன் விலை நிலவரம் ரூ 5.30 லட்சத்தில் இருந்து ரூ 7.5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி S – க்ராஸ்
உயர் ரக க்ராஸ் ஓவர் வகையான S க்ராஸ், அப்படி அழைப்பதையே மாருதி விரும்புகிறது, ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதன் முக்கிய கலந்தாய்வுகள் வெளிப்புற வடிவமைப்பை பற்றி கூட அல்லாமல், சிறப்பான 320 Nm முறுக்கு விசையை தரவல்ல ஃபியட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. க்ராஸ் ஓவர் பிரிவில் உள்ள அதிக அளவு போட்டிகளை சமாளிக்க இந்த புதிய வகை இஞ்ஜினுடன் S க்ராஸ் தயாராகவுள்ளது. மாருதியின் சிறப்பு மிக்க நெக்க்ஷா டீலர்களை வைத்து இந்த காரை சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், காரை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கார் வாங்கும் போதும், அதனை பரமரிப்பதிலும், தனித்துவமான உன்னத உணர்வை ஏற்படுத்தும் என்று மாருதி நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்த கார் உட்புறம் ஆடம்பர முறையிலும், வெளிபுறம் அழகிய பிரதிபலிக்கும் முகப்பு விளக்கு மற்றும் DRLs விளக்குகளுடன் மெருகேற்றப்பட்டுள்ளது.
“காம்பெடிஜோன். காம்பெடிஜோன். பையா! வெறும் இந்த வார்தையின் முழு மையான குளுமையை உங்களால் உணர முடியாது. அதாவது, இதை காதில் கேட்ட நாள் முதல் அதனை என்னுடையதாக்கிக் கொள்வதற்காக, ஒரு சிறு குழந்தையை போல நான் அதையே மந்திரம் போல திருப்ப திரும்ப உச்சரித்து கொண்டே இருக்கிறேன்."
அபார்த் 595 காம்பெடிஜோன்
“காம்பெடிஜோன். காம்பெடிஜோன். பையா! வெறும் இந்த வார்தையின் முழு மையான குளுமையை உங்களால் உணர முடியாது. அதாவது, இதை காதில் கேட்ட நாள் முதல் அதனை என்னுடையதாக்கிக் கொள்வதற்காக, ஒரு சிறு குழந்தையை போல நான் அதையே மந்திரம் போல திருப்ப திரும்ப உச்சரித்து கொண்டே இருக்கிறேன்."
அந்த வார்த்தையின் மேலுள்ள பிரம்மையை ஒதுக்கி வைத்து பார்த்தால், துடிப்பான மிடுக்கான அபார்த் நிறுவனத்தின் கார் இந்திய வாகனச் சந்தையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி 595 காம்பெடிஜோன் என்ற பெயரில் வெளியிட்டு, வலம் வரவுள்ளது.
இத்தாலியன் செயல்திறன் கொண்ட இந்த அபர்த் கார்கள் செயல் திறனில் மிகச்சிறந்தது என்று நீண்ட நாட்களாகவே நாம் அறிந்துள்ளோம். இந்தியா வாகன சந்தையில் முரட்டுதனமான செயல்திறன், மென்மையான அழகு இரண்டும் சரிவர கலந்த உற்சாகமூட்டும் கலவையை, இந்த 595 மாடல் நமக்குக் கொடுக்கவுள்ளது. பெரிய பந்தைய கார் சக்கரங்களும், மேம்படுத்திய வடிவமும், கம்பீரமான உட்புற தோற்றமும், நேர்த்தியாகப் பொருத்தபட்ட ஸ்கார்பியன் சின்ன அடையாளமும், சற்றே அச்சுறுத்தும் உறுமலும், இந்த கார் எல்லோரையும் கவர்ந்திழுக்க உறுதுணையாக இருக்கின்றன. இந்த அபார்த் 595 கார் 158 bhps விசையை உற்பத்தி செய்ய கூடிய 1.4 லிட்டர் T -ஜெட் இஞ்ஜின் கொண்டு சக்தியூட்டபட்டுள்ளது. மேலும் இது உத்தேசமாக 1050 கிலோ எடையை மட்டுமே இழுக்கும் தன்மையுடையது என்று தெரிகிறது.
புதிப்பிக்கப்படும் எர்டிகா
மாருதி நிறுவனத்தின் பிரபலமான MPV எர்டிகா அழகாக புதிப்பிக்கப்பட்டு, இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை சில முறை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டம் செய்து நடைமுறை ஆய்வு செய்து முடித்துவிட்டனர். சோதனை ஓட்டத்தின் பொது சில பிரச்சனைகளை கவனித்து அதற்கேற்ற சில மாறுதல்களைச் செய்துள்ளனர், அதன்படி, சிற்சில புதிய க்ரோமிய வேலைப்பாடுகளைச் சேர்த்து வலைத் தடுப்பை (கிரில்) அழகாக மாற்றியுள்ளனர். மேலும், புதிய முட்டுத்தாங்கியும் (பம்பர்) சேர்த்துள்ளனர். உட்புற வேலைப்பாடுகளில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம், ஆனால், இந்த காரின் செயல்திறன்மிக்க இயந்திரங்களை இந்நிறுவனம் மாற்றி அமைப்பதாக இல்லை. ஆகஸ்ட் 20 ஆம் தேதியில் இந்த காரைச் சந்தையில் எதிர்பார்க்கலாம்.
0 out of 0 found this helpful