வர்த்தக வாகனங்கள் வாங்கும் போக்கை மாற்றுவதற்கு TrucksDekho.com எத்தனிக்கிறது

published on டிசம்பர் 31, 2015 06:04 pm by cardekho

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வேகமடைந்துள்ள பொருளாதார நிலை, புதிதாக உருவான டிரக் நிதி நிறுவனங்களின் எளிதான கடன் வசதிகள், துரிதமடைந்துள்ள நெடுஞ்சாலை கட்டுமான பணிகள், சிறந்த முறையில் இயங்கும் புதிய டிரக்குகள் மற்றும் டிரக்குகளில் அதிகமாக சுமை ஏற்ற உச்ச நீதிமன்றம் (SC) விதித்துள்ள தடை, ஆகிய அணைத்து காரணிகளும் இணைந்து, டிரான்ஸ்போர்ட்டர்களை புதிய கமர்ஷியல் வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கின்றன.

தற்போது போக்குவரத்து தேவைகள் மிக வேகமாக அதிகரித்து வந்தாலும், இதுவரை டிரக் வாங்குபவர்கள் தங்களின் தேவைக்கேற்ப ஒரு சிறந்த வாகனத்தை தேர்ந்தெடுக்க உதவும் விதத்தில் எந்தவித பிளாட்பார்மும் இல்லை என்பதே உண்மை. பல வேளைகளில், டிரான்ஸ்போர்ட்டர்களும் தனிப்பட்ட டிரக் உரிமையாளர்களும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று, டிரக்குகளைப் பற்றிய ப்ரோசர்கர்களை வாங்கி ஒப்பீடு செய்ய வேண்டியுள்ளது. பல ஆன்லைன் இணையதளங்களும் திறனற்றதாக உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள மல்காபுரில் வசிக்கும் அபாய் தாகா என்ற பஞ்சு வியாபாரி டிரக் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த போது, அவர் பல சோசியல் மீடியா இணையதளங்களில் உள்ள விளம்பரங்கள், உள்ளூர் செய்தித் தாள்களில் உள்ள விளம்பரங்கள் மற்றும் டீலர்களின் வலைதளங்கள் என பலவிதத்திலும் அலைந்து, தனக்கு வேண்டிய விவரங்களைத் திரட்டினார். எனினும், இவை அனைத்திலும் வர்த்தக வாகனங்களைப் பற்றிய முழுமையான, விரிவான விவரங்கள் இல்லை. மேலும் சிலவற்றில் இருந்த தகவல்கள் உண்மையானதாக இல்லை என்பது வருத்ததைத் தருவதாக உள்ளது.

தாகா போன்ற பல்லாயிரக் கணக்கானவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, இந்தியாவிலேயே சிறந்த வாகன இணையதளங்கலான CarDekho.com, Gaadi.com மற்றும் ZigWheels.com போன்றவற்றின் மூல நிறுவனமான கிர்னர் சாஃப்ட் நிறுவனம், TrucksDekho.com என்னும் புதிய வலைதளத்தை துவங்கி உள்ளது. கடந்த வருடம் மட்டும், இந்தியாவில் 6 லட்சம் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. TrucksDekho –வின் பயனர்கள் சிறிய நகரங்களான அவுரங்காபாத், அஹ்மத்நகர், சிரோகி போன்றவற்றிலும், மற்றும் பெருநகரங்களான மும்பை, புனே, பெங்களூரு மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களிலும் உள்ளனர். எனவே, இரண்டு விதமான மக்களையும் திருப்தி செய்யும் விதத்தில், இந்த வலைத்தளம் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வருகிறது.

“நான் TrucksDekho.com வலைதளத்திற்கு மாறியதன் மூலம், என்னுடைய வியாபார தேவைகளுக்கு ஏற்ற சிறந்த வாகனங்களை எளிதாகத் தேர்ந்தெடுக்க முடிகிறது. அது மட்டுமல்ல, நான், எனது விருப்பத்திற்கேற்ற சேவை மையத்தை கண்டுபிடிக்கவும் இந்த வலைதளத்தைப் பயன்படுத்துவேன்,” என்று தாகா உற்சாகமாக குறிப்பிடுகிறார்.

TrucksDekho –வின் ஆரம்பகாலமாக இது இருக்கின்ற போதிலும், ஆறு மாதமே ஆன இந்த ஆன்லைன் பிளாட்பார்ம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா முழுவதிலும், நவம்பர் மாதத்தில் மட்டும் 75,000 வருகைகளும், டிசம்பர் மாதத்தில் 80,000 வருகைகளும்; மற்றும் 2,600 தனிப்பட்ட லீட்களும் பதிவாகி உள்ளன.

TrucksDekho –வின் பிசினஸ் டெவலப்மெண்ட் அண்ட் ஸ்ட்ராடஜி பிரிவின் வைஸ்-பிரெஸிடெண்ட்டான திரு. ராபின் கௌபா, இந்த இணையதளம் உருவானதன் பின்னனியில் உள்ள நோக்கத்தைப் பற்றி பேசும் போது, “இந்திய பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் வளர்ந்து கொண்டிருப்பதால், வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய சிறந்த தீர்வுகள் தேவைப்படும். அதனால்தான், நாங்கள் புதிய TrucksDekho.com என்னும் இணையதளத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் இறுதி பயனரின் (எண்ட்-யூசர்) கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து, மிகவும் புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிரக்கை வாங்குபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் டிரக்குகளைப் பற்றிய தெளிவான, உண்மையான தகவல்களை, அனைவருக்கும் நன்றாகப் புரியும் விதத்தில் வழங்குகிறோம்,” என்று கூறினார்.

வாடிக்கையாளர்கள், சமீபத்தில் வெளிவந்துள்ள அனைத்து வர்த்தக வாகனங்களின் விவரங்களையும் இந்த வலைதளத்தின் மூலம் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அவற்றை ஒப்பீடு செய்து பார்க்கவும் இது உதவியாக இருக்கிறது. வீடியோக்கள், செய்திகள் மற்றும் விமர்சனங்கள், மற்றும் ப்ரோச்சர் டவுண்லோட் ஆகியவை, வாடிக்கையாளர்கள் சிறந்த முடிவெடுக்க உதவியாக இருக்கிறது. மேலும், TrucksDekho.com பயனர்கள் அவர்களுக்கு அருகில் உள்ள டீலர்களிடம், இதன் மூலம் விலை மேற்கோள் கேட்கலாம். அது மட்டுமல்ல, உங்களின் இருப்பிடத்திற்கு அருகே உள்ள சர்வீஸ் சென்டர்களின் விவரத்தையும், இந்த வலை தளத்திலேயே சேகரித்துக் கொள்ளலாம்.

TrucksDekho.com தற்போது EMI கால்குலேட்டர் மற்றும் கடன் வசதிகளை துவங்கி உள்ளது. “சிறிய முதலீடு செய்து வியாபாரம் செய்யும் அன்ஆர்கனைஸ்டு செக்டரில் உள்ளவர்களே, கணிசமான அளவிலான டிரக்குகளை வாங்குகின்றனர். ப்ளீட் ஆபரேட்டர்களை ஒப்பிடும் போது, இவர்கள் அதிகமான வட்டி செலுத்த வேண்டியுள்ளது. மேலும், வட்டி விகிதத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதால், இவர்களின் பொருளாதார நிலைகளில் சரிவு ஏற்படுகிறது. எனவே, நாங்கள் அனைவருக்கும் சமமான மற்றும் நியாயமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம்,” என்று திரு. ராபின் கூறினார்.

பெரிய நிறுவனங்களான டாடா, இசுசூ, மஹிந்த்ரா, ஃபோர்ஸ், பியாக்கிஓ, அசோக் லேலண்ட் மற்றும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின், 72 விதமான M&H மற்றும் SCV –க்களைப் பற்றிய தகவல்களை TrucksDekho வலைதளத்தில் நீங்கள் திரட்டிக் கொள்ளலாம். மேலும், டிரக் உரிமையாளர்கள், ப்ளீட் ஆபரேட்டர்கள், சிறிய மற்றும் பெரிய தொழில்கள்; லோட் ஏற்றிச் செல்பவர்கள் மற்றும் ஒரு டிரக்கை வாங்கி, இயக்கி, மற்றும் பராமரிக்க விரும்பும் தனி நபர்கள் என அனைத்து விதமான வாடிக்கையாளர்களும், தங்களுக்குத் தேவையான தகவல்களை TrucksDekho வலைதளத்திலேயே சேகரித்துக் கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience