2015-ல் தோல்வியடைந்த 5 முக்கிய மாடல்கள்

published on டிசம்பர் 28, 2015 02:54 pm by cardekho

புதுடெல்லி:

Tata Bolt

இந்தாண்டு ஆட்டோமோட்டிவ் துறையில் ஒரு சில வெற்றிகளையும், தோல்விகளையும் காண கிடைத்து, பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளது. கார்களை வாங்கும் நடைமுறையில் கூட இந்தாண்டும் சராசரியான மாற்றத்தை காண முடிகிறது. இதை தவிர, கச்சிதமான சேடன் பிரிவில் பல புதிய அறிமுகங்கள் வெளியிடப்பட்ட போதும், கடந்த சில ஆண்டுகளின் விற்பனையோடு ஒப்பிட்டால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் பிரபலமான பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவு, ஒரு புதிய உயரங்களை எட்டியுள்ளது. மேலும் கச்சிதமான கிராஸ்ஓவர்கள் / SUV-களின் வளர்ச்சி வழக்கம் போல முன்னேற்ற பாதையிலேயே தொடர்கிறது. இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது அதிக புத்திசாலிகளாக மாறியுள்ளதால், இனி அவர்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. இந்தாண்டு விற்பனையில் சிறப்பாக செயல்பாடாத சில கார் மாடல்கள் இருக்கின்றன. எனவே 2015 ஆம் ஆண்டு விற்பனையில் தோல்வியை தழுவிய முக்கிய 5 மாடல்களை குறித்து காண்போம்.

டாடா போல்ட்

டாடா செஸ்ட் காரின் இரட்டை ஹேட்ச்சான டாடா போல்ட், சந்தையில் ஒரு சிறப்பான செயல்பாட்டு தன்மைகளை கொண்டிருந்த போதிலும், விற்பனை சரியாக அமையவில்லை. டாடாவின் முதலீடுகளில் செஸ்ட் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பாக தெரிந்த போது, போல்ட் கார் ஏறக்குறைய முந்தைய இன்டிகா கார்களை ஒத்திருந்தது, ஒரு வேளை இதற்கான காரணமாக இருக்கலாம். இந்த ஹேட்ச்சில் பிரிம் முதல் எல்லாவற்றையும் பெற்று, ஒரு கச்சிதமான சேடனில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டிருந்த போதும், அந்நிறுவனத்தினால் அதை விற்றுத் தீர்ப்பதில் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கடந்த 2015 ஜெனீவா மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்ட போல்ட்டின் ஒரு ஸ்போர்ட்டியர் பதிப்பை, இந்த வாகனத் தயாரிப்பாளர் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, வதந்தி பரவி வருகிறது. இந்த முடிவு இக்காரின் விற்பனையை அதிகரிக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரெனால்ட் லாட்ஜி

Tata Bolt Sport

ரெனால்ட் லாட்ஜி ஒரு நல்ல தயாரிப்பாக இருந்த போதிலும், அதன் விற்பனை மாதந்தோறும் குறைந்து கொண்டே போகிறது. இப்பிரிவில் அதிக சக்திவாய்ந்த என்ஜின்களை கொண்டுள்ள ஒன்றான இந்த MPV, ஒரு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. அதிக இடவசதியை கொண்ட இந்த வாகனத்தில், டேடைம் ரன்னிங் லைட்கள், ரெனால்ட்டின் டச்ஸ்கிரீன் மீடியாNAV இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் சேட்டிலைட் நேவிகேஷன் போன்ற சிறந்த அம்சங்களை தாங்கி வருகிறது. மற்ற கார்களை வைத்து பார்க்கும் போது, பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் விற்பனையில் இருந்த பழைய பிளாட்பாமை இது கொண்டிருப்பதே, இதன் மோசமான விற்பனைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இயந்திரவியல் சிறப்பான தன்மைகள் மற்றும் பயனுள்ள உட்புற அமைப்பைக் கொண்டிருந்தும், லாட்ஜி சாந்தமாக தோற்றமளிப்பதால் ஒருவேளை வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க தவறி இருக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் வெர்னா

Renault Lodgy

ஹூண்டாயின் ஃப்ளூடிக் டிசைன் வடிவமைப்பு மற்றும் முடிவில்லா அம்சங்களின் பட்டியல் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட வெர்னா, ஒரு காலத்தில் மிட்-சைஸ் பிரிவில் முன்னணி வகித்தது. ஆயினும், ஹோண்டா சிட்டியின் 4வது தலைமுறையின் அறிமுகத்திற்கு பிறகு, டீசல் என்ஜினை பெற்று கூட, வெர்னாவின் விற்பனை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் இக்காரின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, கொரியன் வாகன தயாரிப்பாளர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட போதும், அவ்வளவாக பயன் அளிக்கவில்லை. ஏனெனில் பெரும்பாலானோருக்கு, புதுப்பிக்கப்பட்ட வெர்னாவின் 4S பதிப்பை விட, முந்தைய வெர்னாவின் தோற்றமே சிறப்பாக இருந்ததாக கருதுகின்றனர். எல்லா பிரிவுகளிலும் இருப்பது போன்ற வழக்கமாக துவக்கத்தை அளிக்கும் வகையில், இந்நிறுவனத்தின் மூலம் இக்காரில், டச்ஸ்கிரீன் நேவிகேஷன் போன்ற அம்சங்களின் பட்டியலில் மேம்பாடுகள் அளிக்கப்படவில்லை.

டாட்சன் கோ+

Hyundai Verna

கோ ஹேட்ச்பேக்கிற்கு மோதல் சோதனையில் (கிரஷ் டெஸ்ட்) ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, டாட்சன் கோ பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டாலும், அதன் மோசமான பாடி உருவத்தின் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தது. இயந்திரவியலில் அதே தன்மைகளை பகிர்ந்து கொண்ட கோ பிளஸ், நம் நாட்டின் முதல் மைக்ரோ MPV ஆகும். இந்நிறுவனத்தின் மூலம் கோ மற்றும் கோ பிளஸ் ஆகிய இரண்டிலும் தேர்விற்குட்பட்ட ஏர்பேக்குகள் அளிக்கப்பட்ட போதிலும், சந்தையில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கிடைக்கவில்லை. பின்புற சீட்கள் கண்டிப்பாக சிறு குழந்தைகளுக்கானது என்றாலும், அவற்றை மடக்குவதன் மூலம் ஏராளமான அளவில் அமைந்த இடவசதியை ஒரு A-பிரிவு ஹேட்ச்களின் விலையில் கிடைக்கிறது. இந்நிலையில் கோ பிளஸை சார்ந்த அடிப்படையை கொண்ட கோ-வின் கிராஸ்ஓவர் பதிப்பான கோ கிராஸை, இந்த வாகன தயாரிப்பாளர் அறிமுகம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. நம் சந்தையில் இது எந்தளவிற்கு பிரபலமடையும் என்பதை காண காத்திருப்போம்.

மாருதி சுசுகி S-கிராஸ்

Datsun Go Plus

மாருதியின் பிரிமியம் தரத்தில் அமைந்த டீலர்ஷிப்பில் இருந்து வெளியிடப்பட்டு, இத்தயாரிப்பாளரின் முதலீட்டில் தரமான முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் ABS இடம் பெறும் முதல் வாகனம் என்பதால் S-கிராஸின் மீது எல்லோருக்கும் ஒரு பெரியளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. அதே நேரத்தில் ஹூண்டாய் க்ரேடா, இந்த கிராஸ்ஓவரின் எதிர்காலத்தை தூள்தூளாக்கியது. S-கிராஸ் மட்டுமே இதற்கு பொறுப்பு என்று கூற முடியாது என்ற வகையில், இத்தயாரிப்பில் சிறப்பான அம்சங்களை பெற்று, ஃபியட்டிடம் இருந்து மிக அதிக சக்திவாய்ந்த 1.6-லிட்டர் டீசல் என்ஜினை பெற்றிருந்தாலும், விலை நிர்ணயத்தினால் பாதிப்பு ஏற்பட்டது. 1.3-லிட்டர் பதிப்பிற்கும், 1.6-லிட்டர் பதிப்புகளுக்குமான விலையில் பெரிய அளவிலான வித்தியாசம் காணப்படுகிறது. இது தவிர, இதன் அறிமுகத்தின் போது, இப்பிரிவிலேயே டீசல் ஆட்டோமேட்டிக் இதில் மட்டுமே காணப்பட்டது, க்ரேடாவிற்கு உதவுவதாக அமைந்தது. இந்நிறுவனம் மாதந்தோறும் 2-3 ஆயிரம் யூனிட் கிராஸ்ஓவர்களை விற்பனை செய்தாலும், இந்த வாகன தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு இது அல்ல என்று தோன்றுகிறது. மேலும் அவர்கள் 1.6-லிட்டர் DDiS320 பதிப்புகளுக்கு பெரியளவிலான தள்ளுபடிகள் வழங்குவதாக கூறப்படுகிறது.

Maruti S Cross

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience