சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்த வாரத்தின் முதல் நிலையில் இருக்க கூடிய 5 காரைப் பற்றிய செய்திகள்: ஹூண்டாய் கிரெட்டா 2020, ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட், டொயோட்டா எட்டியோஸ் மற்றும் பல கார்கள்

published on மார்ச் 17, 2020 05:17 pm by sonny

வாரத்தின் மிகச் சிறந்த வாகன செய்திகளில் முக்கிய செய்தியாக ஹூண்டாயின் புதிய கார்களைப் பற்றியே இருக்கின்றது

படங்களில் ஹூண்டாய் கிரெட்டா 2020: ஹூண்டாய் மார்ச் 16 ஆம் தேதி புதிய தலைமுறை கிரெட்டாவை அறிமுகப்படுத்தவுள்ளது. இங்குள்ள சிறந்த எஸ்எக்ஸ் வகைகளிலிருந்து இரண்டாவதாக இருப்பதை உன்னிப்பாகக் காணலாம். இது வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை, 10.25 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு மற்றும் புளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் போன்ற சிறப்பம்சங்களைப் பெறுகிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது: ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்டின் இந்திய-சிறப்பம்சம் பொருந்திய பதிப்பு இறுதியாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இது வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. மேலும் இதனுடைய முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதன் புதிய வடிவமைப்பு மற்றும் இயந்திர விருப்பங்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டா 2020 வகைகளின் விவரங்கள்: புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டாவின் வகைவாரியான சிறப்பம்சங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்துள்ளன. இது ஐந்து வகைகளில் வழங்கப்படுகிறது - இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) பலவிதமான இயந்திர மற்றும் ஆற்றல் இயக்கி விருப்பங்களுடன் உள்ளது. மார்ச் 16 அன்று அறிமுகப்படுத்தப்படும் போது விலைகள் அறிவிக்கப்படும் அதே வேளையில் உங்களுடைய விருப்பத்தை எந்த வகை நிறைவு செய்கிறது என்பதைக் கண்டறியவும்.

டொயோட்டா எட்டியோஸ் மாதிரிகள் நிறுத்தப்பட உள்ளது: டொயோட்டா கார்களின் எட்டியோஸ் வகைகள் ஏப்ரல் 2020 க்குள் தயாரிப்பு நிறுத்தப்படும். இதில் எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக், எட்டியோஸ் கிராஸ் கிராஸ்ஓவர் மற்றும் எட்டியோஸ் பிளாட்டினம் செடான் ஆகியவை அடங்கும், ஏனெனில் அவற்றின் எந்த இயந்திரங்களும் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளை எதிர்கொள்ளும் வகையில் புதுப்பிக்கப்படவில்லை. எட்டியோஸ் மாதிரிகள் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே தெரிந்து

புதிய இன்னோவா லீடர்ஷிப் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: டொயோட்டா பிரீமியம் எம்பிவி லீடர்ஷிப் பதிப்பு எனப்படும் புதிய வரையறுக்கப்பட்ட பதிப்பு ஒப்பனை வடிவமைப்பு வகையைப் பெறுகிறது. இது கறுப்பு-வண்ண விவரங்கள் மற்றும் உட்புற அமைவு முழுவதும் கருப்பு வண்ணத்தைப் பெறுகிறது. நீங்கள் இதை வாங்குவதற்கு ஆர்வமாக இருந்தால், விலைகள் மற்றும் அம்ச விவரங்களை இங்கே காணலாம்.

மேலும் படிக்க: இறுதி விலையில் ஹூண்டாய் வெர்னா

s
வெளியிட்டவர்

sonny

  • 52 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
பேஸ்லிப்ட்
Rs.67.65 - 71.65 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.19.77 - 30.98 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை