• English
  • Login / Register

டெஸ்லா நிறுவனம் மாடல் X காரின் சிறப்பம்ஸங்களை அழைப்பிதழ் விடுத்தவர்களிடம் வெளிப்படுத்தியது

published on செப் 03, 2015 07:41 pm by manish

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், தன்னை ஒரு தனித்தன்மையின் மறுவடிவம் என்பதை நிரூபிக்க, தனது சிக்னேச்சர் வரிசைகளில் முதல் வெளியீடான மாடல் X  க்ராஸ் ஓவர் காரை முன் பதிவு செய்ய, வாடிக்கையாளர்களை தானே முடிவு செய்து அழைக்கிறது. பரம இரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்த காரின் சிறப்பம்ஸங்களை, இந்நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மட்டுமே வெளியிடப்படும். சிறப்பம்ஸங்கள் முதல் இதன் விலைப் பட்டியல் வரை அவர்களிடமே தெரிவிக்கப்படும்.

இங்கே, நாங்கள் கொடுத்திருக்கும் டெஸ்லாவின் சிறப்பம்ஸங்கள், இந்த புதிய காரை கட்டமைப்பு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்த ஒரு டெஸ்லாவின் வாடிக்கையாளர்  வெளியிட்டதாகும். டெஸ்லா நிறுவனத்தின் அழைப்பின் பெயரில் சென்றவர்களுக்கு மட்டுமே, இதன் கட்டமைப்பின் ரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார், இரண்டு விதமான வகையில் செலுத்து தொகுதியைக் (ட்ரைவ் லைன்) கொண்டுள்ளது. அதாவது, எப்போதும் நடை முறையில் உள்ள இதன் 90 KWh மோட்டார், 259 bhp குதிரைத் திறனை முன்புற சக்கரங்களுக்கும், 503 bhp குதிரைத் திறனை பின் சக்கரங்களுக்கு செலுத்தவல்லதாக உள்ளது. மேலும், EPA -வால் நிரூபிக்கப்பட்ட சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாமல் 240 மைல் தரவல்லதாக இருக்கிறது. இந்த முறையின் மூலம், டெஸ்லாவின் புதிய காரில், 3.8 வினாடிகளுக்குள், மணிக்கு 0 –விலிருந்து 100 கிலோ மீட்டர் வரை வேகத்தை அதிகரிக்க முடியும். மேலும், மிக அதிகமான வேகமாக, மணிக்கு 155 மைல்கள் வரை செல்ல முடியும். இந்த வேகம் உங்களுடைய தாகத்தை தணிக்க முடியாது என்றால், உங்களுக்காகவே டெல்சா மேலும் ஒரு அருமையான லூடிக்ராஸ் மோட் என்ற வேகத்தை மேம்படுத்தும் திறனை, கூடுதலாக 10,000 அமெரிக்க டாலர் விலையில் தருகிறது. இந்த விருப்பத்திறன் மூலம், நீங்கள் மணிக்கு 0-விலிருந்து 100 கிலோ மீட்டர் வரை வேகத்தை 3.2 வினாடிகளுக்குள் அதிகரிக்கச் செய்ய முடியும், என்று டெஸ்லா குறிப்பிடுகிறது. 7 இருக்கைகளைக் கொண்ட க்ராஸ் ஓவர் ரகமான டெஸ்லாவின் இந்த புதிய காரில், இத்தகைய அசாத்தியமான அம்ஸங்களைப் பொறுத்தப்பட்டுள்ளது மிகவும் ஆச்சர்யமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.

இந்த காரில் உள்ள பிற விருப்பத் தெரிவுகள் என்னவென்றால் – 750 அமெரிக்க டாலருக்கு வரும் சிறப்பான டோயிங்க் தொகுப்பாகும். இதன் மூலம் 5000 பவுண்டுகளை இந்த காரில் இழுத்து சென்றாலும், தடுமாறாமல் இருப்பதற்கு டோயிங்க் மோட் மற்றும் இரண்டு அங்குல ஹிட்ச் ரிசீவர் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்,  பூஜ்ய டிகிரீக்கும் குறைவாக வெப்பநிலையை குறைக்கக் கூடிய சப்ஃஜீரோ வெதர் ஆப்ஷன், 1,000 அமெரிக்க டாலர் விலையில் கிடைக்கிறது. இந்த ரகத்தில், இதமான சூட்டில் உள்ள ஒட்டுச்சக்கரம் (ஸ்டியரிங்); தூசி சகதியை துடைக்கும் வாஷர் நாஸில்; மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இருக்கை வரிசைகள் வரை அனைத்து இருக்கைளும் சூடாக்கப்பட்டிருக்கும் அம்ஸமும் பொருத்தப்பட்டுள்ளன.

மிகவும் குறைந்த காலத்திற்கு அளவான எண்ணிக்கையில் வெளியிடப்படும் மாடல் X  காரில், அல்ட்ரா ஹை பிடிலிட்டி ஒலி அமைப்பு; GPS  திறனுடன் வரும் அதி நவீன ஏர் சஸ்பென்ஷன்; உட்புறத்தில் உள்ள உயர்தரமான அமைப்புகள்; மற்றும் வேகத்தை கட்டுப்படுத்த செமி அட்டானமஸ் ஆட்டோ பைலட், ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. குறைந்த காலத்திற்கு, அளவான எண்ணிக்கையில் மட்டுமே வர உள்ள இந்த மாடலின் விலை சுமார் 132,000 அமெரிக்க டாலருக்கு இருக்கும் என்று தெரிகிறது. இது, விரைவில் சந்தைக்கு வரவிருக்கிற நிலையான ரகத்தை விட சுமார் 25,000 அமெரிக்க டாலர்கள் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. குறைந்த காலத்திற்கு அளவான எண்ணிக்கையில் வெளிவரவிருக்கிற இந்த அழகிய காரை முன்பதிவு செய்ய 40,000 அமெர்க்க டாலர்களை முன்பணமாக கட்ட வேண்டும். ஆனால், டெஸ்லா மாடல்களை விரும்பி வாங்குகின்ற வழக்கமான வாடிக்கையாளகள் 5,000 அமெரிக்க டாலர்களை மட்டுமே இன்று செலுத்தினால் போதும், அவர்களுக்கு 2016 ஆண்டின் தொடக்கத்தில் கார் ஒப்படைக்கப்படும்.

சாதாரமான மாடல் X,  கார் பின்புறத்தில் இறக்கைகளைப் போல திறக்கும் பால்கான் விங் கதவுகளுடன் வருகிறது. கார் நிறுத்தும் கராஜின் உயரத்திற்கு ஏற்றவாறு இசைந்து கொடுக்கும் வண்ணம், இதன் உள்ளே சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த ரகத்தில், மடிக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள்; சூப்பர் சார்ஜர் நெட்வொர்க் மூலம் எளிமையாக சார்ஜ் செய்யும் வசதி; மற்றும் கணக்கிலடங்கா மைலேஜ் தரும் 8 வருட பேட்டரி வாரண்ட்டி போன்றவை உள்ளன. இத்தகைய அருமையான செயல்திறன்களைக் கொடுக்கும் டெஸ்லாவின் அம்சங்கள், நிச்சயமாக தற்போது உள்ள எரிவாயு மூலம் இயங்கக் கூடிய SUV ரக போட்டியாளர்களான போர்ஷ் கேயேன் டர்போ மற்றும் BMW வின் X5M  போன்ற கார்களுக்கு கடுமையான சவால் விடுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience