டெஸ்லா மோட்டார்ஸ் – ஒரு தலைமுறை முன்னோடி
published on அக்டோபர் 01, 2015 09:12 am by cardekho
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: வாகனங்களின் தயாரிப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு படிபடியாக உயர்ந்து வருகிறது. மேலும், தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலம் மேம்படுத்தப்படும் சாப்ட்வேர்களுக்கு (வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாடு), வாகன தயாரிப்பாளர்கள் இடையே அதிக கிராக்கி உள்ளது. இது போன்ற ஒரு போக்கு ஏற்பட காரணமாக அமைந்தது வேறு யாருமல்ல, டெஸ்லா மோட்டார்ஸ் தான்.
இந்த நிறுவனத்தை தலைமை வகித்து நடத்தும் திரு.எலன் மஸ்க் என்பவர், ஸ்பேஸ்X நிறுவனத்தின் CEO மற்றும் சோலார்சிட்டி நிறுவனத்தின் நிறுவுனரும் ஆவார். இவர், எரிச்சலூட்டுவதற்கு நன்றாக தயாராகி உள்ளார் என்று மேம்பட்ட ஆட்டோமொபைல் தொழில்நுட்ப துறையில் உள்ள போட்டியாளர்கள் கூறுகின்றனர். இந்த கார் தயாரிப்பாளர், ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்களை அளிக்கும் அரங்கில் முன்னோடியாக இருப்பதால், அதில் ஒரு அபரிமித வளர்ச்சியை பெற்றுள்ளார். OTA-வின் அப்டேட்கள் வேலைச் செய்வது, ஒரு ஐபோனின் செயல்பாடுகளை ஒத்திருக்கிறது. சில பட்டன்களை தட்டுவதன் மூலம் பயனீட்டாரால், எளிமையான முறையில் அப்டேட் செய்துக் கொள்ள முடியும். இந்நிலையில், OTA மூலம் ஓடும் வாகனங்களுக்கான ஒரு ஹேண்ட்ஸ்-ஃப்ரீ குரூஸ் கன்ட்ரோலை, டெஸ்லா நிறுவனம் இந்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்மூலம் எலக்ட்ரிக் மாடல் S சேடன்கள், இனிமேல் தாங்களாகவே ஓட்டும் திறமையை பெறும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
இது குறித்து மூலோபாய பகுப்பாய்வு ஆலோசகர் ரோஜர் லேன்ட்டாட் கூறுகையில், OTA-வின் தன்மையை உயர்த்தும் வகையில், டெஸ்லா நிறுவனம் பல சிறப்பான முன்னேற்றங்களை கொண்டு வந்து, அதில் எந்த மாதிரியான அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளது என்பதை காட்டி, எப்படியோ ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்திற்கு கொண்டுள்ளது” என்றார்.
ஒரு வேகத்துடன் தனது கார்களில் இன்கார்பரேட் OTA-களுக்கு நகர்ந்துள்ள டெஸ்லா நிறுவனம், மற்ற பிராண்ட்களையும் இந்த தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளி உள்ளது. இது டெஸ்லாவின் போட்டியாளர்களுக்கு, மிகப்பெரிய இடைஞ்சலாக அமைய போகிறது. ஏனெனில் இன்டர்னல் கம்ப்யூஷன் என்ஜின்களுக்கு ஏற்ற சாப்ட்வேர்களை எப்படி தயாரிப்பது என்பது ஒரு பெரிய சவால் ஆக உள்ளது. தற்போதைக்கு இதை அவர்கள் செய்யும் பட்சத்தில், கார்களின் சர்வீஸ்களில் டீலர்களுக்கு உருவாகும் வருமானத்தின் நஷ்டத்திலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
இது குறித்து ஹோண்டா செய்தித்தொடர்பாளர் மாத் ஸ்லாவ்ஸ்டர் கூறுகையில், “தொழில்நுட்பத்தின் தேவையோடு, அதனிடத்திற்கு செல்லும் போது, ஒரு வாகன தயாரிப்பாளரின் மொத்த மனப்போக்கும் மாற்றம் அடைகிறது” என்றார். இந்த துறையில் அதிகரித்து வரும் முதலீடு மற்றும் கூட்டுமுயற்சியின் காரணமாக, இது போன்ற தொழில்நட்ப நிறுவனங்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ரெட்பெண்டு நிறுவனத்தை 170 மில்லியன் டாலர்களுக்கும், சிலிக்கான வெலி-யை அடிப்படையாக கொண்ட மற்றொரு நிறுவனமான சிம்போனி டிலிகா-வை, 780 மில்லியன் டாலர்களுக்கும், ஹார்மென் இண்டர்நேஷனல் இன்டஸ்ட்ரீஸ் வாங்கியது. இந்த இரு நிறுவனங்களும், ‘ஓவர் தி ஏர்’ அப்டேட்களை கொண்டிருந்தவை ஆகும். இது குறித்து, வயர்லெஸ் கேரியரான ஏரிஸ் நிறுவனத்தில், வாகன தயாரிப்புகள் மற்றும் மூலோபாயம் பிரிவின் VP மைக்கேல் ஏவரி கூறுகையில், “ஒரு ஒற்றை OEM (உண்மையான உபகரண தயாரிப்பாளர் - ஒரிஜினல் இக்யூப்மெண்ட் மெனிஃபேக்ச்சரர்) உடன் இன்னும் பேச வேண்டியுள்ளது. அவர் இந்த பகுதியில் தற்போது செயல்படும் நிலையில் இல்லை” என்றார். ஏற்கனவே OTA-யின் மூலம் 75 அம்சங்களுக்கு மேலாக, தனது கையில் வைத்து கொண்டிருக்கும் டெஸ்லா, ஒரு காரின் கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகப்படுத்துவதில் இருந்து முடுக்குவிசையை அதிகரிப்பது வரை கொண்டுள்ளது. இந்த வாகன தயாரிப்பாளர்களின் வளர்ச்சியில் குறுக்கிடும் ஒரே பெரிய பிரச்சனை என்னவென்றால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக தேவைப்படும் அதிகளவிலான ஆரம்ப கட்ட முதலீடு ஆகும். ஆரம்ப கட்ட தொனியை எழுப்பி வரும் டெஸ்லா நிறுவனத்திற்கு, ஆட்டோமொபைல் ஆர்வலர்களை பெறுவதற்கான போட்டி தயாராக வைக்கப்பட்டுள்ளது.