• English
  • Login / Register

பிரபல டெஸ்லா நிறுவனம் தனது பேட்டரி தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்கலாம் என்று தெரிகிறது.

published on அக்டோபர் 29, 2015 04:56 pm by manish

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

Elon Musk Iron Man wallpaper pics

பாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிகான் வேலி பகுதியில் அமைந்துள்ள டெஸ்லா கார் தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். அதற்கு பிறகு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்கும் என்பது போன்ற ஏராளமான யூகங்கள் உலாவரத் தொடங்கின. ஆப் - கிரிட் மின்சார சக்தி சார்ந்த தொழில்நுத்பத்தை இந்தியாவில் கொண்டுவருவது தான் பிரதமரின் டெஸ்லா பயணத்தின் முக்கிய நோக்கமாகும். டெஸ்லா நிறுவனமும் ஆசிய காண்டத்தில் கால் பதிக்க கடந்த சில காலங்களாகவே தீவிரமாக யோசித்து வருவதுடன் சீனாவில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான சாத்திய கூறுகளை வெளியிட்டிருந்தது. இந்த அமெரிக்க மின்சார கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவிலும் தங்கள் மின்சார கார்களுக்கு தேவையான பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை துவக்க திட்டமிட்டுள்ளது. டெஸ்லா தயாரிக்கும் கார்களில் லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகிறது. இதே லித்தியம் அயான் பேட்டரிகள் தான் செல் போன்களிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் செய்தியாகும். இத்தகைய பேட்டரிகளை தயாரிக்கும் தொழிற்சாலை 'கிகாபாக்டரி' என்று அழைப்பதுண்டு.

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஒ திரு. இலான் மஸ்க், “ பெருகிவரும் பேட்டரி தேவைகளை பார்க்கும் போது இந்தியாவில் ஒரு தொழிற்சாலை தொடங்குவது ஒரு நல்ல நீண்ட கால திட்டமாக இருக்கும் " என்று கூறினார்.

சீனாவில் டெஸ்லா தொழிற்சாலை தொடங்குவது பற்றிய யூகங்களுக்கு ட்விட்டரிலும் நேரிலும் விளக்கம் அளித்த மஸ்க், இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு பிறகே சீனாவில் தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும் அதே சமயத்தில் அனைவரும் வாங்கும் விதத்தில் கச்சிதமான விலையுடன் டெஸ்லா 3 மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெளிவு படுத்தினார்.

டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளையும் சாதனைகளையும் நிகழ்த்தி வரும் நிறுவனமாகும். சமீபத்தில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய டெஸ்லா S கார்கள் இந்திய மதிப்பில் ரூ. 60 லட்சதிற்கு விற்பனை ஆகி வருகின்றன. இப்போது இந்த S மாடல் காரில் மென்பொருள் மேம்படுத்தல்கள் ( சாப்ட்வேர் அப்டேட்) செய்யப்பட்டு புதிய ஆட்டோபைலட் செயல்பாடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் காரை 90 சதம் வரை தன்னிச்சையாக செயல்பட வைக்கிறது என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இதையும் படியுங்கள் :

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience