சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாடல் X-யை வெளிக்காட்டி, புதுமைகளை விளக்குகிறது டெஸ்லா

cardekho ஆல் அக்டோபர் 01, 2015 05:45 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

ஜெய்ப்பூர்:

Tesla Model X

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், தனது X மாடல் காரை, காலிபோர்னியாவில் உள்ள பிரிமண்ட் தொழிற்சாலையில் திரைவிலக்கி வெளியிட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு இதன் தொழில்நுட்பம், முதல் முதலாக காட்டப்பட்டது. இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் CEO எலன் மஸ்க், இந்த காரை திறந்து வைத்த போது, காரில் உள்ள சில புதுமையான அம்சங்களில் உட்படும், பக்கத்தில் இருக்கும் பொருட்களை கண்டறியும் தன்மையுடன் கூடிய அல்ட்ராசோனிக் சென்சார்களைக் கொண்ட டிரேடுமார்க் ‘ஃபால்கன் விங்' கதவுகள் குறித்தும் விளக்கப்பட்டது. காரின் வேகத்திற்கு ஏற்ப தானே சரிப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்ட ஒரு ஸ்பாய்லரை, பின்புறத்தில் கொண்டுள்ளது. விண்டுஷில்டிற்குள் நுழைந்து சென்று அதோடு சேர்ந்து கொள்ளும் பனோராமிக் ரூஃப், மற்றொரு புதுமையான அம்சமாகும்.

உள்புற அமைப்பை பொறுத்த வரை, ஒரு S மாடல் காரின் தீம்மைப் போலவே, X-ன் கேபினும் ஒத்ததாக காணப்படுகிறது. மேலும் டெஸ்லா கார்களின் தரக்குறியீடாகவே அமைந்துவிட்ட, ஒரு பெரிய 17-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இந்த மாடலின் நடு வரிசையில் தனிப்பட்ட முறையில் மாற்றக்கூடிய 3 சீட்கள் உட்பட, மொத்தம் 7 பேர் உட்காரும் வசதி உள்ளது. கடைசி வரிசையில் உள்ள 2 சீட்கள் மட்டமாக விரிக்க (பிளாட்-ஃபோல்டிங்) தக்க வகையில் உள்ளதால், இடவசதிக்கான தேர்வுகள் அதிகமாக உள்ளது. S மாடலை போல, இந்த புதிய மாடலிலும் பூட்ஸின் எண்ணிக்கை 2 ஆகும்.

Elon Musk Unveils Model X

டேஸ்போர்டில் காணப்படும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட HEPA ஃபில்ட்டர் அமைப்பு மூலம் வெளியே எந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டாலும், காருக்குள் மருத்துவ தரம் வாய்ந்த காற்று கிடைக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இரட்டை-எலக்ட்ரிக் மோட்டார் மெக்கானிசத்தில், முன்பகுதியில் உள்ள மோட்டார் 255bhp-யையும், பின்பகுதியில் உள்ள மோட்டார் 496bhp-யையும் தயாரித்து, மொத்தமாக 751bhp ஆற்றல் மற்றும் 98.57kgm முடுக்குவிசையும் வெளியிடுகிறது.

இந்த வாகனத்திற்கு 0-வில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டி சேர 3.2 விநாடிகள் மட்டுமே தேவைப்படுகிறது. அதேநேரத்தில் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ. வேகம் வரை செல்லலாம். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால், ஓட்டுநருக்கு 400 கி.மீ வரை பயணிக்க முடியும். உலகில் எந்த வாகனத்திலும் இல்லாத பாதுகாப்பு அம்சங்களான தன்னாட்சி அவசர நிறுத்தம் (ஆட்டோநோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங்), பக்கவாட்டு மோதல் கண்டறியும் அமைப்பு (சைடு கோலிஷன் டிடெக்ஷன் சிஸ்டம்), முன்னோக்கி-பார்க்கும் (ஃபர்வேர்டு-ஃபேஸிங்) கேமரா, ரேடார் மற்றும் சோனார் சென்ஸர்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால், பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 ஸ்டார்களை பெற, இந்த வாகன தயாரிப்பாளர் எதிர்பார்க்கிறார்.

இதன் விலை இன்னும் வெளியிடப்படாத நிலையில், வட அமெரிக்காவில் மட்டுமாவது மாடல் S-ன் விலையை ஒத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை