சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

உச்ச நீதி மன்ற உத்தரவு: டெல்லியில் இயங்கும் அனைத்து டாக்ஸிக்களும் CNG மூலம் இயங்கவேண்டும்

sumit ஆல் டிசம்பர் 17, 2015 12:39 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

SC Orders Taxis to Run on CNG

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை தடுக்கும் நடவடிக்கையாக, இந்திய உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்புகளை நேற்று காலை பிறப்பித்தது. 2016 மார்ச் 31 –ஆம் தேதிக்குள், டெல்லி NCR பகுதியில் இயங்கும் அனைத்து டாக்ஸிகளும் கண்டிப்பாக CNG (எரிவாயு) மூலம் மட்டுமே இயங்கவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தவிர, 2000 cc மற்றும் அதற்கும் அதிகமான திறன் கொண்ட டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட கார்களுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் டெல்லியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மேற்சொன்ன இரண்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே, டெல்லி அரசாங்கம் சமீபத்தில் கொண்டு வந்த, கார்களை தடை செய்யும் புதுமையான ஆட்-ஈவென் திட்டம், வாகன தொழில்துறையை கடுமையாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. டெல்லி அரசாங்கத்தின் ஆட்-ஈவென் திட்டத்தின் படி, திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒற்றைப்படை பதிவு எண் கொண்ட கார்கள் மட்டும் சாலைகளில் இயங்க வேண்டும், அதே போல, இரட்டைப் படை எண் கொண்ட கார்கள் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே சாலைகளில் இயங்க வேண்டும். கார்களுக்கான இந்த புதிய தடை உத்தரவு, காலை 8 மணியில் இருந்து மாலை 8 மணி வரை செல்லுபடியாகும். ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டும் இந்த தடை உத்தரவில் இருந்து விதிவிலக்கு உண்டு. டெல்லி உயர் நீதிமன்றம், ‘டெல்லியில் வாழ்வது என்பது ஒரு எரிவாயு அறைக்குள் வாசிப்பது போல இருக்கிறது' என்று தனது கருத்தைப் பதிவு செய்த பின்னர், இத்தகைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆட்-ஈவென் தடை உத்தரவு, 2016 ஜனவரி 1 -ஆம் தேதி முதல் நடைமுறை படுத்தப்படும். தற்போது, டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, பொதுத்துறை போக்குவரத்து அமைப்புக்கு தனது பேராதரவைத் தெரிவித்து வருகிறது.

இது தவிர, சில நாட்களுக்கு முன்னர், டில்லியில் டீசல் கார்களை பதிவு செய்வதை ஜனவரி 6, 2016 வரை நிறுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) உத்தரவு பிறப்பித்தது. மேலும், சில மாதங்களுக்கு முன்னர், மிக அதிகமாக காற்று மாசுபாட்டை விளைவிக்கும் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் பழமையான டீசல் கார்களை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று NGT பரிந்துரை செய்துள்ளது. எனினும், இந்த பரிந்துரை இது வரை செயல்படுத்தப்படவில்லை.

மேலும் வாசிக்க

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
பேஸ்லிப்ட்
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை