'ஸ்னேக்பூட்' டெஸ்லா மாடல் S ஐ மின்னூட்டுகிறது [ஆச்சரியமூட்டும் திரை காட்சி]
published on ஆகஸ்ட் 10, 2015 02:40 pm by raunak
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெஸ்லா மோட்டார்ஸ் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. ஏனெனில், இவர்கள் மாடல் S இன் மின்னணு பகுதியில் தொடர்ந்து அடுத்து அடுத்தாக புதுமையான செயல்திட்டங்களை வெளியிட்டவாறு உள்ளனர். டெஸ்லாவின் மாடல் S ஐ, மிகச் சிறந்ததாகவும், அறிவியல் பூர்வமாக தரம் உயர்ந்ததாகவும், மிகவும் நவீனமானதாகவும், இன்றைய தேதியில் மிக சரியான பண மதிப்பு வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு புதுமைகளை புகுத்துகின்றனர்.
டெஸ்லா மோட்டார்ஸ் தனித்தியங்கி சார்ஜர் மூலம் மாடல் S மின்னூட்ட படுவதை காட்டும் புதிய ஒளித்திரை காட்சியை இணைய தளத்தில் அவர்களது அதிகார பூர்வமான யூ-ட்யூப் வழிதடத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். டெஸ்லாவின் உரிமையாளர் எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அற்புதமான சார்ஜரை 'ஸ்னேக்பூட்'! என செல்லமாக குறிப்பிட்டுள்ளார்.
இயந்திர தானியங்கி சார்ஜர் போலவே உள்ள இந்த இரும்பு பாம்பு, திரை காட்சியில் காண்பது போலவே மாடல் S காரின் மின்னூட்டு மாட்டியை தானாகவே கண்டறிந்து முழுவதும் தனித்தியங்கியாக செயல்படுகிறது வியப்பாக இருந்தாலும், இது உண்மை. இந்த இரும்பு பாம்பு பார்பதற்கு ஏறக்குறைய ஸ்பைடர் மேன் 2 திரை படத்தில் வரும் டாக்டர் ஆக்டோபஸ் போலவே உள்ளதாக எனக்கு தென்படுகிறது.( கீழே படத்தில்). இந்த நிறுவனம், இது வெறும் முன்மாதிரி மட்டுமே, இதன் இறுதியான விலையும், தயாரிப்பதற்கு ஏற்ற சரியான வடிவமைப்பும் கிடைப்பதற்கு நாம் சற்று காத்திருக்க தான் வேண்டும், என கூறியுள்ளது.
டெஸ்லா நிறுவனம் சமீபமாக மாடல் S காரை உயர் தரமான மாடல் S P85D புதிய லூடீக்ரெஸ் முறையை கொண்டு மேம்படுத்தியுள்ளது. இந்த லூடீக்ரெஸ் முறையானது, அதே P85D இன் இரு மின் மோட்டார்கள் மூலம் முரட்டுத்தனமான 762 குதிரை திறனை அள்ளித் தருவதில் வல்லமை மிக்கதாக உள்ளது. இன்சன் முறைக்கு பிறகு வந்த இந்த லூடீக்ரெஸ் முறையானது, 3 வினாடிகளுக்கு அதிகமான கால அவகாசத்தில் 100 கிமீ/ம அளவை அதிவேகத்தில் அடைந்து, மாடல் S காரை சூப்பர் கார் தரத்திற்கு இணைத்துள்ளது- இப்போது லூடீக்ரெஸ் முறை மூலம் 100 கிமீ/ம அளவை 2.8 வினாடிகளிலேயே எட்ட முடியும்.
0 out of 0 found this helpful