சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

வரும் 2016 ஆம் ஆண்டு முதல் நிஸ்ஸான், டாட்சன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்களின் விலையை 3% வரை உயர்த்துகிறது .

modified on டிசம்பர் 24, 2015 11:48 am by nabeel

ஜெய்பூர்

வரும் புது ஆண்டு முதல் நிஸ்ஸான், டாட்சன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்களின் விலையை உயர்த்துகிறது . இந்த விலை உயர்வு 1 முதல் 3 சதவிகிதம் வரை பல்வேறு மாடல்கள் மீது சுமத்தப்படுகிறது. நிஸ்ஸான் மற்றும் டாட்சன் தயாரிப்புக்கள் 1 முதல் 3 சதவிகிதம் விலை ஏற்றப்படுகிறது. அதே சமயம் ஸ்கோடா தயாரிப்புகள் 2 முதல் 3 சதவிகிதம் விலை உயர்த்தப்பட உள்ளன. முன்னதாக , மாருதி , டொயோடா , ஹயுண்டாய் மெர்சிடீஸ் - பென்ஸ் மற்றும் BMW நிறுவனங்கள் ஏற்கனவே ஜனவரி 2016 ஆம் ஆண்டு முதல் தங்கள் தயாரிப்புக்களின் விலையை உயர்த்தப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வாகன தயாரிப்புக்கான மூல பொருட்களின் விலை உயர்வே தாங்கள் இந்த விலையேற்றத்தைக் கொண்டு வந்திருப்பதற்கான காரணம் என்று தெரிவித்துள்ளது. இ வரியிலும் ந்த நிறுவனங்களின் புதிய விலை ஜனவரி 1 2016 ஆம் ஆண்டுமுதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இதன் காரணமாக தேர்ந்தெடுக்கப்படும் பல மாடல்கள் மற்றும் வேரியன்ட்களைப் பொறுத்து ரூ. 14,000 முதல் ரூ. 50,000 வரை இந்த விலை உயர்வு இருக்கும் என்று அறியப்படுகிறது. நிஸ்ஸான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் மல்ஹோத்ரா, “ இந்த விலை ஏற்றம் எதிர்மறையான தாக்கத்தை (நெகடிவ் இம்பேக்ட்) குறைத்து தொடர்ந்து எங்கள் தயாரிப்புக்களை சந்தையில் போட்டி மிகுந்ததாகவே வைக்கும் " என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் நிஸ்ஸான் நிறுவனத்தின் தயாரிப்பாக நிஸ்ஸான் டெரானோ வாகனங்கள் விளங்குகிறது. அதே போல் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் இந்நிறுவனத்தின் கார் என்ற பெயரை மைக்ரா கார்கள் பெற்றுள்ளது. மாருதி நிறுவனம் ரூ. 20,000 வரையிலும் ஹயுண்டாய் நிறுவனம் ரூ. 30,000 வரையிலும் தங்கள் தயாரிப்புக்களின் விலையை உயர்த்த உள்ளது. டொயோடா மற்றும் BMW கார்களின் விலை 3 சதவிகிதமும் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலை 2 சதவிகிதம் வரையிலும் அந்தந்த நிறுவனங்களால் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை ஏற்றதுடன் சேர்ந்து சமீபத்தில் டெல்லி அரசு கொண்டு வந்துள்ள டீசல் வாகனங்கள் பதிவின் மீதான தற்காலிக தடை மற்றும் டெல்லி அரசின் ஒற்றை /இரட்டை இலக்க கொள்கை போன்றவைகள் நம் தேசிய தலை நகர வாடிக்கையாளர்கள் ஒரு காரை சொந்தமாக்கிக் கொள்ள பெரிய சிரமங்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளி உள்ளது.

இதையும் படியுங்கள்

n
வெளியிட்டவர்

nabeel

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை