ஷெல் இந்தியா நிறுவனம் அகமதாபாத்தில் உள்ள தனது எரிபொருள் நிரப்பு நிலையத்தை (பெட்ரோல் பங்க்) மீண்டும் திறக்க உள்ளது
published on ஜூலை 22, 2015 11:58 am by sameer
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: ஷெல் இந்தியா நிறுவனம் அகமதாபாத்தில் உள்ள தனது ரக்கியால் எரிபொருள் நிரப்பு நிலையத்தை (பெட்ரோல் பங்க்) மீண்டும் திறக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையும் சேர்த்து இந்தியாவில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையத்தின் மொத்த எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. இவைகளில் குஜராத்தில் 20 நிலையங்கள் உள்ளன. அகமதாபாத்தில் மட்டும் 10 நிலையங்கள் உள்ளன. குஜராத்தை தவிர ஆந்திரா, அஸ்ஸாம் மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் தமிழகம் உட்பட மேலும் ஐந்து மாநிலங்களில் ஷெல் பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. உலகத்தரம் வாய்ந்த எரிபொருளை கொடுப்பதிலும் வாடிக்கையாளர் சேவையிலும் ஷெல் நிறுவனம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது..
இந்த நிகழ்ச்சியில் பேசும் பொது ஷெல் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. ரவி சுந்தர்ராஜன் பின்வருமாறு கூறினார். “ இன்றைய சூழலில் கூடிக்கொண்டே போகும் விதிமுறைகள் எரிபொருள் சில்லறை வர்த்தகத்தை சவாலாக மாற்றி உள்ளது அதுவும் குறிப்பாக கடந்த ஆண்டு டீசல் விற்பனையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகு இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ரக்கியால் எரிபொருள் நிலையத்தை மீண்டும் திறந்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் எங்கள் வளர்ச்சி திட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக குஜராத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள இந்த ரக்கியால் எரிபொருள் நிலையம் அமையும்" என்று கூறினார். மேலும் அவர் " இந்த பகுதியில் வசிப்பவர் மட்டுமல்லாது பொது மக்கள் மற்றும் வெகுதூரம் பயணிப்பவர் என அனைவரும் இந்த எரிபொருள் நிலையத்தால் மிகுந்த பயன் அடைவர் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
இந்த ரக்கியால் எரிபொருள் நிலையம் ரக்கியால் சாலையில் தேசிய நெடுஞ்சாலை - 8ற்கு அருகாமையில் அமைந்துள்ளது. மேலும் இந்த சாலை ஒதவ் மற்றும் கத்வடா தொழிற் பேட்டையுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
பொதுவான பெட்ரோல் மற்றும் டீசலைத் தவிர சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷெல் வி - பவர் பெட்ரோலும் இந்த ரக்கியால் நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தவிர இரு சக்கர வாகனங்களுக்கு இலவச ஆயில் சர்வீஸ் வசதியும் இங்கே அறிமுகப்படுதப்படுள்ளது..
தனது எரிபொருள் நிலையங்கள் அமைக்கபெற்ற சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ள ஷெல் நிறுவனம், இந்த முறை மாற்று திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கி அவர்கள் சிரமமின்றி பணியாற்ற ஏதுவான சூழலையும் உருவாக்கி தந்துள்ளது.