2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், சேடன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன

published on பிப்ரவரி 15, 2016 03:24 pm by manish

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ, இந்தாண்டு (2016) இப்போது நடைபெற்று வருகிறது. வாகனங்களால் பொங்கி வழியும் குவியல்களுக்கு இடையே, திருப்தி அளிக்காத வகையில் நிறுத்தப்பட்ட தொழிற்நுட்பங்கள் மற்றும் ஆட்டோமோட்டிவ் கலையின் பாகங்களை, சில சமரசமான சந்தோஷத்தோடு அதை மீண்டும் பழுது பார்த்து கொள்ள முடியும் என்ற நிலையில், அதை உங்கள் அருகில் ஓட்டிக் கொண்டு வரும் போது, இது போன்ற ஒரு காரியம் நடக்குமா என்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடும். எனவே, பிரபலமடைந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் சமீபத்தில் காட்சிக்காக வைக்கப்பட்ட முக்கியமான 5 சேடன்களின் பட்டியலை, நாங்கள் கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். இதை படித்து பாருங்கள்.

செவ்ரோலேட் பீட் இஸ்சென்டா

பீட் ஹேட்பேக்கின் அடுத்த தலைமுறை தொழிற்நுட்பத்தை வெளியிட்டுள்ள இந்த அமெரிக்கன் வாகன தயாரிப்பாளர், ஹேட்ச்பேக்கின் மறுஉருவாக்கமான இந்த சப் 4-மீட்டர் கச்சிதமான சேடனையும், ‘இஸ்சென்டா’ என்ற புனைப்பெயரில் காட்சிக்கு வைத்துள்ளது. இந்த செவ்ரோலேட் பீட் இஸ்சென்டாவில், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை பெற்றுள்ளது. ஆற்றலகத்தின் தேர்வுகளை பொறுத்த வரை, தற்போதைய டீசல் மற்றும் பெட்ரோல் யூனிட்கள் கொண்ட லைன்அப்-பே தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சில யூகங்களின் அடிப்படையில், சர்வதேச சந்தையில் பயன்பாட்டில் உள்ள ஸ்பார்க் ஹேட்ச்பேக்கின் 1.4-லிட்டர் ஈகோடெக் மோட்டாரின், ஒரு தரம் குறைக்கப்பட்ட 1.0-லிட்டர் பெட்ரோல் யூனிட், இந்த அடுத்து வரவுள்ள கச்சிதமான சேடனில் அமைய பெறலாம் என்று கூறப்படுகிறது.

வோல்க்ஸ்வேகன் பாஸ்அட் GTE

இந்த எக்ஸ்போவில், தனது பாஸ்அட் சேடனின் பிளெக்-இன் ஹைபிரிடு பதிப்பை, ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் காட்சிக்கு வைத்துள்ளார். இந்த காரில் ஒரு 1.4-லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து செயலாற்ற உள்ளது. இதன்மூலம் இந்த ஹைபிரிடு அமைப்பினால், ஒரு ஒருங்கிணைந்த ஆற்றல் வெளியீடான 215bhp-யை அளிக்க முடிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்யப்பட்டால், 50 கி.மீ. வரை ஓடும் திறன் கொண்டது. இது முழு டேங்க் எரிபொருளுடன் இணைந்து செயலாற்றினால், இந்த ஹைபிரிடு அமைப்பு மூலம் ஒரு அதிகபட்ச அளவான 1040 கி.மீ. வரை பயணிக்க முடியும். இதற்கு மேலும் டீசல்கேட் டேமேஜ் கன்ட்ரோல் குறித்து யாராவது நினைப்பார்களா?

ஜாகுவார் XE

தனது கச்சிதமான சேடனான XE-யை, ரூ.39.90 லட்சம் என்ற விலை நிர்ணயத்தில் ஜாகுவார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் இரு 2.0-லிட்டர் பெட்ரோல் ஆற்றலகங்களை கொண்டு, முறையே 200PS மற்றும் 240PS என்ற இரு அளவுகளில் ஆற்றல் வெளியிடப்படுகின்றன. செயல்திறன் அம்சங்களை குறித்து பார்க்கும் போது, இந்த சேடனின் செயல்திறனை, இதன் அலுமினியம் எக்ஸ்டென்ஸீவ் லைட்வெய்ட் சேஸிஸ் மூலம் மேலும் அதிகரிக்கப்படுகிறது. இதன்மூலம் இக்காரின் போட்டியாளர்களான BMW 3-சீரிஸ் மற்றும் ஆடி A4 ஆகியவற்றை விட அதிக சக்திவாய்ந்தது என்பதோடு, அதன் ஒட்டுமொத்த எடை கணிசமான அளவு குறைவாகவும் காணப்படுகிறது.

BMW 7-சீரிஸ்

தனது முன்னணி ஆடம்பர சேடனான BMW 7-சீரிஸை, ரூ.1.1 கோடி விலை நிர்ணயத்தில் BMW நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் என்ற இரு வகைகளிலும் கிடைக்கப் பெறும் இந்த ஆடம்பர சேடனில், ஒரு 3.0-லிட்டர் டீசல் மில் மூலம் 265PS ஆற்றல் கிடைக்கிறது. அதே நேரத்தில் 3.5-லிட்டர் மற்றும் 4.4-லிட்டர் என்ற இரு வேறு பெட்ரோல் மில்கள் அளிக்கப்பட்டு, அவை முறையே 326bhp மற்றும் 444bhp என்ற அளவுகளில் ஆற்றலை வெளியிடுகின்றன.

ஹூண்டாய் சோனாட்டா பிளெக்-இன் ஹைபிரிடு

ஈக்கோ-பிரென்ட்லி ஹைபிரிடுகளை குறித்து பார்க்கும் போது, இந்த பிரிவிற்குள் ஹூண்டாய் நிறுவனம் தனது போட்டியாளரான ஹூண்டாய் சோனாட்டா பிளெக்-இன் காரை களமிறக்கி உள்ளது. அதிகம் கவனிக்கப்படாத சில நுட்பமான விஷயங்களையும் சற்று ஆராய்ந்து பார்க்கும் போது, இந்த சேடன் ஒரு 2.0-லிட்டர் GDI 4-சிலிண்டர் பெட்ரோல் ஆற்றலகம் மூலம் இயக்கப்பட்டு, இதனோடு 360V எலக்ட்ரிக் மோட்டாரும் இணைந்து செயல்படுகிறது. இந்த ஹைபிரிடு அமைப்பு மூலம் ஒரு ஒருங்கிணைந்த ஆற்றல் வெளியீடாக 202bhp பெறப்படுகிறது. இது மேலே குறிப்பிடப்பட்ட ஜெர்மன் நிறுவன தயாரிப்பின் வெளியீடு உடன் ஒப்பிட்டால், சற்று குறைவானது ஆகும். அதே நேரத்தில் அழகியல் தன்மைகளை பொறுத்த வரை, சோனாட்டா பிளெக்-இன் ஹைபிரிடு, ஹூண்டாயின் ஃப்ளூய்டிக் 2.0 வடிவமைப்பு அணுகுமுறையை சார்ந்ததாக உள்ளது.

டாடா கைட் 5

ஸீகா ஹேட்ச்பேக்கின் வெளியீட்டிற்கு பிறகு, நம் நாட்டின் ஆட்டோமோட்டிவ் சமூகத்தினரிடமும், சமீபத்தில் பிரபலமடைந்த ஆட்டோ எக்ஸ்போவிலும், டாடா நிறுவனத்திற்கு பெரும் பாராட்டு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஸீகாவின் ஒரு கச்சிதமான சேடன் பதிப்பை ‘கைட் 5’ என்ற குறியீட்டு பெயருடன் காட்சிக்கு வைத்து, தனது நிலையை டாடா இன்னும் சிறப்பாக உயர்த்தியுள்ளது. ஸீகாவில் உள்ள எல்லா அம்சங்களும் இந்த காரில் இருப்பதோடு, கூடுதலாக நடைமுறைக்கு ஏற்ற வகையிலான ஒரு பூட்டையும் கொண்டுள்ளது. கிரியேச்சரின் இதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை, ஹார்மேன் மூலம் ஆற்றலை பெறும் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், எட்டு ஸ்பீக்கரை கொண்ட சவுண்ட் சிஸ்டம், பாடி-நிறத்திலான AC திறப்பிகள், ABS மற்றும் இரட்டை ஏர்பேக்குகள் ஆகியவை தரமானவை ஆக அளிக்கப்படலாம். ஸீகா ஹேட்ச்பேக்கின் அறிமுகத்தை தொடர்ந்து, இந்த சேடன் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இதிலும் அதே என்ஜின் தேர்வுகளையே கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience