• English
  • Login / Register

பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 50 பை மற்றும் 46 பை குறைக்கப்பட்டது.

published on டிசம்பர் 17, 2015 11:25 am by sumit

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Petrol, Diesel Prices Slashed

ஜெய்பூர் : எண்ணை மார்கெடிங் நிறுவனங்கள் (OMC) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே 50 பை மற்றும் 46 பை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்புக்கு பின் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் சந்தையில் முறையே ரூ. 59.98 மற்றும் ரூ. 46.09 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாதம் இருமுறை எண்ணை நிறுவனங்கள் செய்யும் விலை நிர்ணயம் சம்மந்தமான முடிவுகளின் விளைவாக இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

“ சர்வதேச சந்தையில் தற்போது நிலவும் பெட்ரோல் , டீசல் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (INR - USD) ஆகியவற்றின் அடிப்படையில் தான் நுகர்வோருக்கு இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எப்படி விலை மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாறிக்கொண்டிருப்பதும் தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அதற்கேற்றார் போல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எதிர்காலத்தில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் " என்று இந்தியாவின் மிகப்பெரிய எண்ணை நிருவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஆகிய இவ்விரண்டும் தான் பெட்ரோல்/டீசல் ஆகியவற்றின் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கான முக்கியமான காரணிகள் ஆகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளதே இந்த விலை குறைவுக்கு காரணமாகும். இரு வாரங்களுக்கு முன் ரூ. 2725 ஆக இருந்த கச்சா எண்ணையின் விலை இப்போது வெகுவாக குறைந்து ரூ. 2304 ஆகியுள்ளது. இந்த தருணத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடையாமல் இருந்திருந்தால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்னும் அதிகமாகவே குறைக்கப்பட்டிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.21 என்று சில தினங்களுக்கு முன் இருந்தது . இப்போது 67 என்ற அளவுக்கு இறங்கியுள்ளது.

மேலும் வாசிக்க

மஹிந்த்ரா நிறுவனம் - பல வகையான புதிய பெட்ரோல் இஞ்ஜின்களை விரைவில் வரவிருக்கும் S101 காரில் அறிமுகம் செய்யவுள்ளது

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience