பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் சரிவு
sumit ஆல் பிப்ரவரி 02, 2016 04:50 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தம் செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில், லிட்டருக்கு முறையே 4 பைசா மற்றும் 3 பைசா என்று குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, இந்த விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்திற்கு பிறகு டெல்லியில், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் தரப்பில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.59.95 எனவும், டீசல் லிட்டருக்கு ரூ.44.68 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து IOC வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சர்வதேச அளவிலான தயாரிப்பு விலைகள் மற்றும் ரூபாய்-அமெரிக்க டாலர் பரிமாற்ற விகித உத்தரவாத விலையில் சரிவு ஆகியவற்றின் விளைவுகளை, இந்த விலைத் திருத்தத்தின் மூலம் அப்படியே நுகர்வோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவிலான எண்ணெய் சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்கள் மற்றும் ரூபாய்-அமெரிக்க டாலர் பரிமாற்ற விகிதம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சந்தையில் ஏற்படும் வளர்ச்சி நிலைகள், எதிர்காலத்தின் விலை மாற்றங்களில் எதிரொலிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, கடந்த 2015 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இதுவரை 5வது முறையாக விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேற்கூறியது போல அதே நிலைக்கு ஏற்ப இந்த விலைக் குறைப்பு செய்யப்படாமல், எண்ணெய்களின் மீதான சுங்க வரியை அரசு அதிகரித்துள்ளது. பெட்ரோலின் மீதான சுங்க வரியை லிட்டருக்கு ரூ.1-யும், டீசலின் மீதான சுங்க வரியை இன்னும் கடினமாக லிட்டருக்கு ரூ.1.50-யும் உயர்த்தப்பட்டுள்ளது. நிதியாண்டில் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த சுங்க வரி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.