பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சரிந்தன
published on டிசம்பர் 03, 2015 12:55 pm by manish
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்தியாவில் சமீபகால எரிபொருள் விலை ஏற்றத்தை தொடர்ந்து, தற்போது மீண்டும் சரிந்துள்ளது. இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் மேற்கொள்ளப்பட்டு, டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. டீசல் விலையில், லிட்டருக்கு 25 பைசாவும், பெட்ரோல் விலையில், லிட்டருக்கு 58 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பின் விளைவாக, புதுடெல்லியில் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.46.55 எனவும், பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.60.48 எனவும் விற்பனை செய்யப்படும். சமீபகாலமாக எரிபொருள் விலையில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கு சாதகமாகவே தொடர்வது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எரிபொருள் விலைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை திருத்தப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தாழ்வுகளுக்கு, அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய் பரிமாற்ற விகிதமே, முக்கிய காரணியாக அமைகிறது.
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 50 பைசா குறைக்கப்பட்டாலும், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்தது. அதன்பிறகு, கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 36 பைசாவும், டீசல் 87 பைசாவும் ஏற்றம் கண்டது. இந்நிலையில் டொயோட்டா காம்ரி போன்ற டீசல் ஹைபிரிட்களின் அறிமுகமும், மாருதியின் பிரிமியம் சேடன்களான சியஸ் போன்றவற்றில் SHVS தொழிற்நுட்பமும் கொண்டுவரப்பட்ட நிலையில், இந்த எரிபொருள் விலை குறைப்பும் நிகழ்ந்துள்ளதால், நீங்கள் விரும்பும் கார்களை வாங்கும் முடிவை எடுப்பதற்கு, இது ஊக்கம் அளிக்கும் காரணிகளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
0 out of 0 found this helpful