கார் டீலர்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதே எங்கள் நோக்கம்: அமித் ஜெய்ன், CarDekho

published on பிப்ரவரி 08, 2016 04:40 pm by cardekho

  • 4 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

  • CarDekho –வின் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம், டீலர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது
  • டிஜிட்டல் முறையில் வாகனத்துறையினர் செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்த, 9 –வது வாகன உச்சி மாநாட்டில் (ஆட்டோ சம்மிட்) FADA (ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ்) –வுடன் கூட்டணி.

‘டிஜிட்டல் டீலர் – ஆக்சிலரேட் ஆப்பர்ச்சூனிட்டீஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒன்பதாவது வாகன உச்சி மாநாட்டை, இந்தியாவின் முன்னணி வாகன வலைதளமான CarDekho.com, FADA –வுடன் இணைந்து நடத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில், ‘இன்றைய வாகன வர்த்தகத்தில், டிஜிட்டல் மயமாவதின் முக்கியத்துவம்’ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இந்த உச்சி மாநாட்டில், விர்ச்சுவல் ஷோரூம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரியாலிட்டி வலைதளங்கள் போன்ற பல்வேறு B2C வர்த்தக முறைக்கான தொழில்நுட்பங்கள்; மற்றும் லீடு மானேஜ்மென்ட் சிஸ்டம், வர்த்தக தீர்வுகள், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் க்லௌட் சல்யூஷன்ஸ் போன்ற பல்வேறு B2B வர்த்தக முறைக்கான தொழில்நுட்ப தீர்வுகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு இந்த உச்சி மாநாடு நடைபெற்றது. 

வாகனத்துறை டீலர்கள் மற்றும் OEM –கள் ஆகியோர் தங்களது தொழில்களை திறமையாக நடத்திச் செல்வதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும், தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் மிகப் பெரிய மாநாடுகளில் ஒன்றாக, வாகன உச்சி மாநாடு 2016 கருதப்படுகிறது. வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் நாமே டிஜிட்டல் முறைக்கேற்றவாறு நமது செயல்களை மாற்றி அமைத்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே, இந்த வருடத்தின் மையக் கருத்தாக (தீம்) இருந்தது. இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்த கிட்டத்தட்ட 600 வாகன டீலர்கள் மற்றும் ஏராளமான OEM தயாரிப்பாளர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்திய அரசாங்கத்தின் மதிப்பிற்குரிய நிதித்துறை இணை அமைச்சரான திரு. ஜயந்த் சின்ஹா ஒன்பதாவது வாகன உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து,  வரவேற்புரையாற்றினார். அதன் பின்னர், மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் தலைவரான திரு. R. C. பார்கவா; கூகுள் தென் கிழக்கு ஆசிய மற்றும் இந்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான திரு. ராஜன் ஆனந்தன்; SIAM & ED டாடா மோட்டார்ஸ், CVBU –வின் துணைத் தலைவரான திரு. ரவி பிஷார்டி; FADA –வின் தலைவரான திரு. K. V. S. பிரகாஷ் ராவ்; மற்றும் 2016 ஆட்டோ சம்மிட்டின் தலைவரான டாக்டர். கைலாஷ் குப்தா ஆகியோர் உரையாற்றினர். 
போட்டிகள் நிறைந்த இந்த டிஜிட்டல் மற்றும் தகவல்தொடர்பு யுகத்தில், டீலர்கள் மற்றும் வாகனத்துறையில் உள்ள அனைவரும், தங்களது தொழில் முறையை தாங்களாகவே முன்வந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றிக் கொள்வதற்கான அவசியத்தை, மாநாட்டில் உரையாற்றிய அனைவரும் எடுத்துரைத்தனர். 

இந்திய அரசாங்கத்தின் மதிப்பிற்குரிய நிதித்துறை இணை அமைச்சரான திரு. ஜெயந்த் சின்ஹா, வாகன தொழில் துறையைப் பாராட்டி, இந்தியாவில் GST –யின் முக்கியத்துவத்தை உணர்த்தி, வாகன துறையில் உள்ள ஏராளமான வரி தொடர்பான முரண்பாடுகளைக் களைய GST மிகவும் உதவியாக இருக்கும் என்று உரையாற்றினார். 
FADA –வின் தலைவரான திரு. KVS பிரகாஷ் ராவ் தனது வரவேற்புரையில், வாகனத்துறையின் சில்லறை வணிகத்திற்கு இந்திய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார். அவர், “அரசாங்க நிறுவனங்கள், அனைத்து துறைகளிலும் உள்ள சில்லறை வணிகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அதே போல, மிக அதிகமான வேலை வாய்ப்பை வழங்கும், குறிப்பிடத்தக்க வருவாயை பெற்றுத் தரும் வாகனத்துறையின் சில்லறை வணிகத்திலும் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வாகன சந்தை தற்போது வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. எனவே, இதில் பங்கு பெரும் அனைத்து தயாரிப்பாளர்கள், OEM- கள், டீலர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்ற அனைவரையும் பாராட்ட வேண்டியது அவசியமாகிறது,” என்று கூறினார். 
கூகுள் தென் கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா நிறுவனத்தின் VP மற்றும் MD பதவிகளை வகிக்கும் திரு. ராஜன் ஆனந்தன், “மென்பொருள் உபயோகம், தொழிற்சாலைகளை புதிய பரிமாணத்தில் மேம்படுத்தும். இன்னும் ஒரு சில ஆண்டுகளில், டிஜிட்டல் தயாரிப்புகளைக் கையாளாத வணிக துறைகளிலும் இணையத்தின் தாக்கத்தைப் பார்க்க முடியும். இணையம் மூலம், நுகர்வோரின் அனுபவத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் வரும். OEM –களான நாம், நமது டீலர்ஷிப் சர்வீஸ் அனுபவத்தையும் புதிய தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம் மாற்றி அமைக்க வேண்டும். கார் வாங்குவதற்கு முன், 75 சதவிகித வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவையை நாடுகின்றனர். ஆன்லைனில் ஆய்வு செய்த பிறகு, 54 சதவிகிதம் நபர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொள்கின்றனர். அவர்கள், தங்களது பணவசதிக்கேற்ற சிறந்த கார், சிறந்த டீலர்ஷிப் மற்றும் சிறந்த சேவை போன்றவற்றை இணையத்தில் தேடுகின்றனர். எனவே, இணையத்தின் சேவையை நாம் உபயோகப்படுத்திக் கொள்வது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது,” என்று பேசினார். 
உயரிய பத்ம பூஷன் விருதைப் பெற்ற மாருதி சுசுகியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவரான திரு. RC பார்கவா, ‘இந்தியாவில் தயாரிக்க வேண்டும்’ என்ற ‘மேக் இன் இந்தியா’ கொள்கையின் முன்னோடியாக வாகனத் தொழில்துறை திகழும்’, என்று கருத்து தெரிவித்தார். ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், வாகனப் புகை வெளியீடு மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளைக் களைய தகுந்த முயற்சிகளை வாகனத்துறை எடுத்துக் கொண்டிருக்கிறது,’ என்றும் அவர் கூறினார். 

CarDekho.com வலைதளத்தின் MD மற்றும் CEO –வான திரு. அமித் ஜெய்ன் அவர்கள், டிஜிட்டல் மீடியாவின் நம்பகத்தன்மை மற்றும் திறனைப் பற்றிய விரிவான விளக்கம் அளித்தார். அவர், “எங்களது இலக்கு, முழுமையான டிஜிட்டல் முறையை நோக்கி உள்ளது. எனவே, OEM –கள் மற்றும் வாகன டீலர்கள் ஆகியோர் தங்களது செயல்களை டிஜிட்டல் முறையில் மாற்றிக் கொள்ள நான் அழைப்பு விடுக்கின்றேன். டிஜிட்டல் முறையில் இயங்குவது மூலம், ஒவ்வொரு செலவும் கணக்கிலிடப்படுவது மட்டுமல்லாமல், சிறந்த வருவாயும் ஈட்ட முடிகிறது. மேலும், வழக்கமான அச்சு ஊடகங்கள் மற்றும் மார்கெட்டிங் முயற்சிகள் மூலம் புது லீடுகளை உருவாக்க ஆகும் செலவுடன் ஒப்பிடும் போது, டிஜிட்டல் மீடியாவை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் செலவு சுமார் 10 முதல் 12 மடங்கு குறைவாக உள்ளது. ஆன்லைன் டீலர்ஷிப்களின் செயல்திறன் மூலம், நாங்கள் ஏராளமான பகுதிகளை, எந்தவித மூலதன செலவும் இன்றி இணைத்துள்ளோம்,” என்று விவரித்தார். 

டச் ஸ்கிரீன் மூலம் காரை உணர்ந்து பார்க்கும் விதம், 3டி மாடலிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விர்ச்சுவல் ஷோரூம் மற்றும் மொபைல் செயலிகள் (ஆப்) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரான தனித்துவமான தீர்வுகள் மூலம், வாகன டீலர்கள் புதிய வாடிக்கையாளர்களை கவரும் திறனை வியத்தகு முறையில் அதிகரிப்பதை திரு. அமித் ஜெய்ன் அவர்கள் எடுத்துக் காட்டிய போது, அங்கு இருந்த பார்வையாளர்கள் அனைவரும் ஆர்பரித்தனர். 

CarDekho வலைதளத்தின் பிரெஸிடெண்ட்டான திரு. உமங்க் குமார், “எங்களது வலைதளத்துடன் தொடர்பு கொண்டுள்ள டீலர்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றி, அவர்களது விற்பனை மற்றும் இலாபத்தை அதிகப்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். FADA –வுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். ஏனெனில், இந்தியாவில் உள்ள வாகன டீலர்களை, FADA –வுடன் இணைந்து டிஜிட்டல் முறைக்கு எளிதாக மாற்ற முடியும். அதன் மூலம், மாறுபட்ட நுகர்வு அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது மற்றும் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பது போன்ற செயல்களுக்கு உதவும் தொழில்நுட்பங்களை டீலர்களின் மத்தியில் நடைமுறைப் படுத்த முடியும்,” என்று கூறினார். 

மாநாட்டில் பங்கேற்றவர்களின் மனதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய தலைப்புகளைக் கொண்ட தீம்களில், மாநாட்டில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டிருந்தன. ‘தி டிஜிட்டல் டீலர்’ – ஒரு தொலைநோக்குப் பார்வை’, ‘எனது லீடுகள் எங்கே?’ ‘டிஜிட்டல் மார்கெட்டிங்’, மற்றும் ‘டிஜிட்டல் முறையில் டீலரின் இலாபத்தை அதிகப்படுத்துதல்’ போன்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாபாரத்தை விருத்தி செய்வது, கார் வாங்குபவர்களுக்கான எளிய தேடுதல் வசதிகளை ஏற்படுத்துவது, லீடுகளை உருவாக்குவது, மற்றும் விற்பனை மற்றும் சேவை பிரிவைத் தொடர்பு கொள்வது போன்ற அனைத்து பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் முறையின் முக்கியத்துவத்தைப் பற்றி இம்மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளும் எடுத்துரைத்தன. 

மேலும் வாசிக்க கார்தேக்கோவின் எதிர்காலத்திற்குரிய விர்ச்சூவல் மேப்பிங் டெக்னாலஜி மூலம் ஆட்டோ எக்ஸ்போ 2016 உயிரோட்டம் பெற்றது!

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி
×
We need your சிட்டி to customize your experience