சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஓலா கேப்ஸ் ஒன்பிளஸ் X ஃபோனை டெலிவரி செய்கிறது

manish ஆல் டிசம்பர் 08, 2015 05:46 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

தற்போது, இந்தியாவில் அதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் டாக்ஸி தொழில் செய்யும் ஓலா கேப்ஸ் நிறுவனம், மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் பிரத்தியேகமான ஸ்மார்ட்ஃபோன் பிராண்ட்டான ஒன்பிளஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. புதிய இன்வைட்-ஒன்லி ஸ்மார்ட்ஃபோன் உங்கள் வீடு தேடி வருவதற்காக இந்த டீல் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதாவது ஓலா கேப் ஓட்டுனர் உங்களிடம் உங்களது புதிய ஃபோனைக் டெலிவரி செய்துவிட்டு, ‘கேஷ் ஆன் டெலிவரி' பணத்தை உங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வார்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்திய மார்கெட்டிங் பிரிவின் தலைவரான கரன் சரின், “மக்கள் எங்கள் தயாரிப்புகள் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். எனவே, எங்கள் தயாரிப்புகளை நேசிப்பவர்களுக்காக, புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஃபோனை வாங்கும் விதத்தை எளிதாக்கவும், வாங்கும் அனுபவத்தைப் புதுமையாக்கவும் இந்த புது வித்தையைக் கையாண்டுள்ளோம்,” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

இது எப்படி வேலை செய்கிறது?

கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஒன்பிளஸ் X மாடல் ஸ்மார்ட் ஃபோன் amazon.in என்ற வலைதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. மேலும், இந்த சீன செல் ஃபோன் தயாரிப்பாளர் உங்களை பிரத்தியேகமாக அழைத்தால் மட்டுமே இந்த ஃபோனை நீங்கள் வாங்க முடியும். இதுவே, இந்த புதிய ஃபோன் அறிமுகம் ஆன விதமாகும். ரூ. 16999 என்ற விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் X ஃபோன். கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டு, 5.0 அங்குல AMOLED அளவில் டச் ஸ்கிரீன் அமைப்புடன் வருகிறது. இதன் திரை முழுமையான HD க்வாலிட்டியுடன் 1080 x 1920 பிக்சல் ரெசல்யூசன் பெற்று வருகிறது. அதி நவீன ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட இந்த ஃபோனை இயக்க, 3 GB RAM கொண்ட Adreno 330 உள்ள 2.3 GHz க்ரைட் 400 கொண்ட குவாட்-கோர் க்வால்காம் ஸ்நாப்ட்ராகன் 801 பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இன்-பில்ட் மெமரியாக 16 GB என்ற அளவைக் கொண்டிருக்கும் இந்த போனில், மேலும் 128 GB வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. இது தவிர, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் காமெரா மற்றும் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் காமிரா என இரண்டு காமிராக்கள் செல்ஃபி பிரியர்களுக்காக பொருத்தப்பட்டுள்ளன. 2525 mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் இதற்கு மின்னாற்றல் கிடைக்கிறது.

ஓலா நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் வைஸ்-பிரெஸிடெண்ட்டான திரு. சுதர்சன் கான்கிரேட், “அழைத்தால் மட்டுமே வாங்க முடியும் என்ற ஸ்மார்ட்ஃபோனை ஓலாவின் ஆப் வழியாக வாங்க வகை செய்து, ஒரு சில நிமிடங்களில் அவர்களது வீடு தேடிச் சென்று அந்த ஃபோனை டெலிவரி செய்வதன் மூலம், எங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதுமையான அனுபவத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்,” என்று பெருமையுடன் கூறினார்.

இன்று முதல் இந்த புதிய ஃபோன் சந்தைக்கு வந்துவிடும். பதிவு செய்த 15 நிமிடத்திற்குள் இந்த ஃபோன் வீட்டில் டெலிவரி செய்யப்படும் என்று ஓலா நிறுவனம் உறுதி கூறுகிறது. இத்தகைய அற்புதமான எளிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி நேரத்திற்குள் ஓலா கேப்ஸ் ஆப்பை பயன்படுத்தி, அதில் உள்ள ‘OnePlusX' என்ற ஐகானை தொட்ட பின், வாங்குவதை உறுதி செய்ய ‘Ride Now' என்ற சொல்லின் மீது டாப் செய்தால் போதும், உங்கள் ஆர்டர் கன்பர்ம் ஆகிவிடும்.

உங்கள் ஆர்டரை பதிவு செய்த 15 நிமிடத்திற்குள் ஓலா கேப் ஒன்று உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கும். உங்களிடம் ரொக்கமாகவோ அல்லது கார்ட்டின் மூலமாகவோ ரூ. 16,999 பெற்றுக் கொண்டு, ஆர்டர் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஃபோன் உங்களிடம் டெலிவரி செய்யப்படும். இந்தியாவிலேயே, இப்போது தான் முதல் முறையாக இந்த புது விதமான சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட நகரங்களில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கிறது:

  • கொல்கட்டா
  • டெல்லி – NCR
  • அஹ்மதாபாத்
  • மும்பை
  • புனே
  • பெங்களூரு
  • ஹைத்ராபாத்

மேலும் வாசிக்க

வரும் 2021 ஆம் ஆண்டு BS-VI மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை, இந்தியா அமல்படுத்துகிறது

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.30.40 - 37.90 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.2.84 - 3.12 சிஆர்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.50 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை