அதிகாரபூர்வ பெராரி விற்பனை பொருட்கள் இப்போது பிரத்யேகமாக மைந்தரா ஆப் மூலம் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
published on ஆகஸ்ட் 31, 2015 01:19 pm by akshit
- 15 Views
- ஒரு கருத்தை எ ழுதுக
டெல்லி: மீண்டும் ஒரு முறை இந்திய சந்தையில் நுழைந்த பிறகு பெராரி நிறுவனம் தன்னுடைய கார் அல்லாத பிற பொருட்களை மைந்தரா இ - காமர்ஸ் வலை தளத்துடன் செய்து கொண்ட பிரத்யேக வியாபார ஒப்பந்தத்தின் அடிப்படையில் மைந்தரா மூலம் மட்டும் இந்தியா முழுதும் விற்பனை செய்ய உள்ளது.
மைந்தரா வலைத்தளத்தில் உள்ள பெராரி ஆன்லைன் ஸ்டோர் மூலம் பலதரப்பட்ட கேசுவல் உடைகள் மற்றும் அதனுடன் இணைந்த உபரி பொருட்கள், டி- ஷர்ட், போலோ மற்றும் ரவுண்ட் நெக் டி - ஷர்ட், ஜாக்கெட், ஸ்வெட்டர், பேன்ட், தொப்பிகள், சன்கிளாஸ் என்று 120 க்கும் மேற்பட்ட வகை வகையான பொருட்கள் ரூ. 2,399 முதல் ரூ. 12,300 வரையிலான விலைகளில் கிடைக்கிறது.
சீனாவிற்கு பிறகு மிக வேகமாக வளர்ந்து வரும் சொகுசு மற்றும் ப்ரீமியம் பொருட்களுக்கான சந்தையாக இந்தியா மாறி இருக்கிறது என்று பெராரி நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்தியர்கள் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆன்லைன் வர்த்தகத்தில் $35 பில்லியன் அளவுக்கு செலவிடுவார்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. இது 2012 வருடத்திய $8 பில்லியன் அளவுடன் ஒப்பிடும் போது சராசரியாக வருடத்திற்கு 25% வளர்ச்சி இருந்துள்ளதை நாம் அறியலாம்.
இந்த அறிமுக விழாவில் பேசிய மைந்தரா வலைதளத்தின் இ - காமர்ஸ் பிரிவு தலைவர் பிரசாத் கொம்பள்ளி பின்வருமாறு கூறினார்.” இந்தியா முழுக்க பரவலாக உலகத்தின் பல்வேறு ப்ரீமியம் ப்ரேன்ட்கள் மீதான ஆர்வமும் தேவையும் வளர்ந்து வருகிறது. குறுகிய 12 மாத காலகட்டத்தில் நாங்கள் 24 ப்ரீமியம் ப்ரேன்டின் பொருட்களை எண்கள் வலைத்தளத்தில் அறிமுகம் செய்துள்ளோம். இப்போது இந்த பிரத்யேகமான பெராரி ஸ்டோரை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாடெங்கிலும் உள்ள ஏராளமான வாகன பந்தய பிரியர்களுக்கு அவர்கள் வீட்டு வாசல் வரை வந்து அவர்களுக்கு பிடித்த புத்தம் புதிய பொருட்களை அளிக்கிறோம்.”
0 out of 0 found this helpful