• English
  • Login / Register

நிஸ்ஸானின் ஜிடி அகாடமி தேசிய அளவிலான கார் பந்தைய இறுதிச்சுற்றில் 6 வெற்றி வீரர்களைத் தேர்ந்தெடுத்தது

published on ஜூலை 16, 2015 05:02 pm by bala subramaniam

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நிஸ்ஸான் நிறுவனம் சென்னையில் நடந்த எம்‌எம்‌எஸ்‌சி பந்தய போட்டியில் வெற்றி பெற்ற முதல் 20 வெற்றியாளர்களில் இருந்து 6 சிறந்த வீரர்களை இந்த வருட ஜி‌டி அகாடமி தேசிய போட்டியாளர்களாக இந்தியாவின் சார்பாக தேர்ந்தெடுத்து உள்ளது. இதன் மூலம் இந்த 6 வீரர்களும் லண்டனில் உள்ள சில்வெர்ஸ்டோன் என்ற இடத்தில் நடக்கவிருக்கும் ஜி‌டி அகாடமி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டு வீரர்களுடன் போட்டியிடும் வாய்ப்பை பெறுகின்றனர். இந்த 6 வெற்றியாளர்களில் இறுதி சுற்று வெற்றியாளர் துபாயில் நடக்கவிருக்கும் 24 மணி நேர நிகழ்ச்சியில் ஓட்டுனர் மேம்பாட்டு செயல்முறை திட்டத்தில் நிஸ்ஸான் நிறுவனம் சார்பாக போட்டியிடுவார்.

வெற்றியாளர்கள் -

  • அபிஷேக் திவர்க்னாத்
  • அனுஷ்  சக்ரவர்த்தி
  • ஆஸ்கய் குப்தா
  • துருவ் தயாள்
  • ஜெய்தீப் சாஹல்
  • சாந்தனு காலியன்புகர்

இந்தியாவில் ஜிடி அகாடமி வெற்றி விழாவில்,  நிசான் இந்தியாவின் முதல்வர் குல்லாமி சிகார்ட்,  “நாட்டு மக்களிடம் கார் பந்தயத்தை காண வளர்ந்து வரும் உற்சாகத்தை பார்த்து  மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் . ஒரு மாத காலத்தில், ஆயிரத்திற்கும்  மேலான போட்டியாளர்கள் முதலிடத்தை அடையும் நம்பிக்கையில் ஜிடி அகாடமி 2015 இல் போட்டியிட்டார்கள்," என்று கூறினார்.

"நாங்கள் இந்தியாவில் கார் பந்தயத்தைப் பிரபலப்படுத்தி  அனைவருக்கும் கொண்டு சேர்க்க முயன்றுகொண்டிருக்கிறோம். மேலும், பந்தய களத்தில் இறுதிப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு இன்று புது அனுபவத்தைக் கொடுப்பதில்  பெருமைபடுகிறோம். எங்கள் ஆறு வெற்றியாளர்களும் இப்போது சில்வர்ஸ்டோனில் நடக்க்க இருக்கும் சர்வதேச போட்டியின் சவாலை சந்திக்க தயாராக உள்ளனர்.  நாங்கள் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறோம் என்று நினைக்கையில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய இறுதி வெற்றியாளர்களை  திரு அருண் மல்ஹோத்ரா, நிர்வாக இயக்குனர், நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் அறிவிக்கையில்  ''ஜிடி அகாடமி மூலம் தன்னிகரற்ற வாய்ப்புகளை இந்நாட்டு மக்களுக்கு வழங்கி, அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் கடமையை நிஸ்ஸான் இந்தியா நிறுவனம் நிறைவேற்றி உள்ளது. இந்த வாய்ப்புகளை ஆர்வமிக்க போட்டியாளர் மற்றும் விளையாட்டு வீரர்களும் முழுமையாக  பயன்படுத்தி தங்கள் கனவுகளை உண்மையாக்குவதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," என்று அவர் கூறினார்.

ஆறு வெற்றியாளர்களும் ஜிடி அகாடமி இந்திய அணியின் ஆலோசகரான கருண் சந்தோக்குடன்  என்ப  ஒரு நாள் முழுவதும் செலவிட்டு பல பயனுள்ள தகவல்களை அவரிடம் இருந்துப் பெற்று  தங்களை சில்வர்ஸ்டோன் ரேஸ் கேம்பிற்கு  தயார் படுத்திக்கொள்ள  உள்ளார்கள்.

நிகழ்ச்சியின் நீதிபதிகளுள்  ஒருவரான கருண்  கூறுகையில், “எப்போதுமே புதிதாக அரும்பி வரும்  போட்டியாளர்களுக்கு  ஓட்டுனர் மேம்பாட்டு செயல்முறை திட்டமானது பெரும் உதவியாக இருக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன். ஜிடி அகாடமி கார் பந்தய போட்டியில் நுழைய, முக்கியமாக புதியவர்களுக்கும் கார் பந்தயதில் பங்கேற்க  வேறு எந்த ஆதரவும்,வழியும் இல்லாதவர்களுக்கும், ஒரு அற்புதமான நுழை வாயிலாக இந்த நிகழ்ச்சி  இருக்கிறது. எனது அடுத்த பணி, சர்வதேச அளவில் மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிட்டு ஜெயிக்க அந்த ஆறு வெற்றியாளர்களுக்கும் பயிற்சி கொடுப்பதேயாகும்" என்று கூறினார்.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience