புதிய அபோல்லோ 4G டயர்கள் இப்போது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரை ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
published on ஜூலை 24, 2015 04:43 pm by nabeel
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் உள்ள அதிகப்படியான தேவையை மனதில் கொண்டு அபோல்லோ டயர்ஸ் நிறுவனம் ஒரு லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமாக ஓடக்கூடிய டயர்களை இப்போது தயாரித்து உள்ளது. அமேசர் 4G லைப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை டயர்கள் சென்னையில் உள்ள குளோபல் ஆர் & டி மையம் மற்றும் நெதர்லாந்தின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த டயர்கள் ஆறு அடுக்குகள் கொண்டு மிக உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் புது வித வேதியியல் சேர்மம் ( டிரெட் காம்பவுண்ட்) பயன்படுதப்படுள்ளதால் எளிதில் இந்த டயர்கள் காயப்படவோ பஞ்சர் ஆகவோ செய்யாது. மேலும் இது டயரின் ஆயுளை ஒரு லட்சத்திற்கு மேல் ஓடும் அளவிற்கு நீட்டித்து விடுகிறது.
அபோல்லோ டயர்ஸின் ஆசிய பசிபிக் மற்றும் மதிய கிழக்கு நாடுகளின் தலைவர் திரு. சதீஸ் ஷர்மா பேசுகையில் பின்வருமாறு கூறினார்.” எங்கள் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர்களின் இடைவிடாத டயர்கள் சந்தை பற்றிய இரண்டு வருடத்திற்கு மேலான ஆய்வின் முடிவில் டயர்கள் சந்தையில் நிலவி வரும் இடைவெளியை எங்களால் தெளிவாக கணிக்க முடிந்தது. தேவைக்கும் சப்லைக்குமான இடைவெளி மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் முதலியவைகளை கூர்ந்து கேட்டு எங்கள் ஆர் &டி அணி தொழில்நுட்ப ரீதியாக அதி நேர்த்தியுடன், நீண்ட நாட்கள் உழைக்கும் வண்ணம் அதுவும் குறிப்பாக கரடு முரடான இந்திய சாலைகளை மனதில் கொண்டே இந்த டயர்களை வடிவமைத்துள்ளது. எங்கள் பரிசோதனைக்கூடத்தில் வெற்றிகரமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான கி ,மீ கடந்து தந்து சக்தியை நிரூபித்து உள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பாசெஞ்சர் கார் பிரிவு 6.1 7 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆக இந்த அமேசர் 4g டயர்கள் சிக்கனத்தை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்றே தயாரிக்கப்படுள்ளது என்று சொன்னால் மிகை இல்லை.
0 out of 0 found this helpful