• English
  • Login / Register

2016-ல் வெளிவர இருக்கும் அதிக காத்திருப்பை பெற்ற கார்கள்

published on டிசம்பர் 28, 2015 10:08 am by raunak

  • 19 Views
  • 2 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

புதுடெல்லி:

வரும் 2018 ஆட்டோ எக்ஸ்போ வரையிலான அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஒரு கூட்டம் கார்களை குறித்த தகவல்களை, வரும் பிப்ரவரியில் நாம் பெற்று கொள்ள உள்ளோம்.

வரும் பிப்ரவரியில் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அடுத்தாண்டு ஒரு அட்டகாசமான ஆண்டாக இருக்க போகிறது. இதில் அதிகளவிலான அறிவிப்புகள் வெளியிடப்படுவதோடு, பல அறிமுக ஆரவாரங்களும் நடைபெறும் என்பதால் தயாராக இருங்கள். அடுத்தாண்டு நம் முன்னே உலா வரும் என்று எதிர்பார்க்கப்படும் கார்களின் ஒரு பட்டியலை நாங்கள் இங்கே வெளியிடுகிறோம்.

மாருதி சுசுகி YBA

அறிமுகம்: 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ (எதிர்பார்க்கப்படுகிறது)

நம் நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர், சப்-4m SUV-க்கான பிரிவிற்குள் தாவி குதிக்கும் வகையில், அடுத்து வரவுள்ள YBA (குறியீட்டுப் பெயர்) என்ற வாகனத்தை வெளியிட உள்ளார். கடந்த 2012 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த வாகனத் தயாரிப்பாளரின் மூலம் காட்சிக்கு வைக்கப்பட்ட XA-ஆல்ஃபா தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு சாயல்களை, இந்த கச்சிதமான SUV பெற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை பொறுத்த வரை, சியஸில் உள்ள DDiS200 மைல்டு ஹைபிரிடை, YBA பெற்று கொள்ளலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பெட்ரோல் வகையில் பெலினோ / சுவிஃப்ட் ஆகியவற்றின் 1.2-லிட்டர் யூனிட்டை பெறலாம். பொதுவாக 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை பெற்றும், பெலினோ உடன் ஒத்ததுப் போல 1.2-லிட்டர் பெட்ரோலில் CVT-யையும் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இனோவா மற்றும் வயோஸ்

அறிமுகம்: 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ (எதிர்பார்க்கப்படுகிறது)

பெரும் வரவேற்பை பெற்ற இனோவா பத்தாண்டுகளுக்கு பிறகு, தனது இரண்டாம் தலைமுறைக்கான மேம்பாட்டை அடுத்தாண்டு பெறுகிறது. அடுத்து நடைபெற உள்ள எக்ஸ்போவில், 2016 இனோவாவின் வெளியீடு குறித்து டொயோட்டா நிறுவனம் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இதன் அடுத்தடுத்த அறிமுகங்களின் மூலம் அதை உறுதியாக கூற முடியும். இந்த இரண்டாம் தலைமுறை இனோவா, கடந்த மாதம் இந்தோனேஷியாவில் தனது உலக அரங்கேற்றத்தை கண்டது. இது தவிர புதிய இனோவாவிற்கு அடுத்தப்படியாக காத்திருப்பில் இருப்பது வயோஸின் அறிமுகம் ஆகும். இந்தாண்டின் துவக்கத்தில் வேவுப் பார்க்கப்பட்ட இவ்வாகனம், எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டோவர்

அறிமுகம்: ஜனவரி 19 ஆம் தேதி (அறிவிக்கப்பட்டது)

2016 எண்டோவர் ஒரு முற்றிலும் மாறுப்பட்ட உருவத்தை பெற்றாலும், ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்திலேயே தொடருகிறது. ஆனால் தற்போதைய மாடலில் இருப்பதை விட, அதிக தொழில்நுட்பம் மற்றும் ஏராளமான ஆடம்பரத் தன்மைகளை தாங்கி வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஃபோர்டு நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட எண்டோவர், ஒரு சில சிறப்பான தயாரிப்புகளும், என்ஜின் மேம்பாடுகளையும் கொண்டு ஏறக்குறைய பத்தாண்டுகளை கடந்து நிற்பதோடு, நம் நாட்டில் இன்னும் நல்ல வரவேற்புடன் தொடர்கிறது. இந்நிலையில், 2016 மாடலில் இப்பிரிவிலேயே முதல் முறையான டெர்ரெயின் மேனேஜிமெண்ட் சிஸ்டம் மற்றும் 6-ஸ்பீடு AT உடன் கூடிய ஒரு முடுக்குவிசையில் சிறந்த 5-சிலிண்டர் டீசல் போன்ற அம்சங்களோடு தற்போது அறிமுக விளிப்பை எட்டியுள்ளது. எனவே எண்டோவர் தனது வல்லமைமிக்க போட்டியிடும் தன்மைக்கான எல்லா காரியங்களோடும் வருகிறது. ஜனவரி 19 ஆம் தேதி இதன் அறிமுகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எண்டோவரை, நாங்கள் தாய்லாந்தில் ஓட்டி பார்த்தோம். எங்கள் மதிப்புரையை படித்து பாருங்கள்.

டாடா ஸீகா சேடன், ஹிசா மற்றும் நெக்ஸான்

அறிமுகம்: 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ (எதிர்பார்க்கப்படுகிறது)

இந்தியாவின் முதல் சப்-4m கச்சிதமான சேடனான இன்டிகொ CS, அடுத்த ஆண்டில் இருந்து கச்சிதமான சேடனான ஸீகா-வின் மூலம் முன்னோக்கி ஓட்டமெடுக்க உள்ளது. புதிய ஸீகா ஹேட்ச்சை குறித்து டாடா நிறுவனம் சமீபத்தில் வெளிப்படுத்திய நிலையில், அது தொழில்நுட்ப அடிப்படையில் இன்டிகாவிற்கு மாற்றாக அமையும். மேற்கூறிய இவ்விரண்டும், டாடா முத்திரை உள்ளிட்ட முந்தைய கார்களின் எந்த ஒரு கூறுகளையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஸீகாவில் உள்ள லோகோ கூட ஒரு புதிய 3D வகையை சேர்ந்தது என்கிறது டாடா நிறுவனம். ஹேட்ச்சிடம் இருந்து என்ஜின்களையும், அம்சங்களையும் இந்த சேடன் பகிர்ந்து கொள்கிறது. ஸீகாவின் ரோடு டெஸ்ட்டின் மூலம் ஒரு கண்ணோட்டத்தை காணலாம்.

புதிய கிராஸ்ஓவர்களை குறித்து பார்க்கும் போது, 2015 ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்நிறுவனம் மூலம் காட்சிக்கு வைக்கப்பட்ட ஹிசா கிராஸ்ஓவர் தொழில்நுட்பத்தின் தயாரிப்பு-மாதிரி பதிப்பை, டாடாவினால் அறிமுகம் / காட்சிக்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, கச்சிதமான SUV-யான நெக்ஸான் கார் தொழில்நுட்பத்தின் தயாரிப்பு பதிப்பை, இந்த எக்ஸ்போவில் வெளியிடப்படலாம் என்ற யூகம் நிலவுகிறது. சமீபகாலமாக இந்த கார் பல முறை வேவுப் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா BR-V

அறிமுகம்: 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ (எதிர்பார்க்கப்படுகிறது)

ஹூண்டாய் க்ரேடாவிற்கு எதிரான ஹோண்டாவின் தயாரிப்பாக வரும் BR-V-ல் 7 சீட்களை கொண்ட வடிவத்தை காண முடிகிறது. மொபிலியோவின் அடிப்படையை லேசாக தழுவியுள்ளதாக தோன்றும் இந்த கிராஸ்ஓவர், அதற்கென சில தனிப்பட்ட குணநலன்களை கொண்டுள்ளது. சிட்டி மற்றும் ஜாஸ் ஆகியவற்றில் உள்ள உட்புற அமைப்புகளை பெற்றுள்ள நிலையில், ஹோண்டாவின் உலகளாவிய SUV-களில் காணும் வெளிபுற அமைப்புகளை இதிலும் காண முடிகிறது. என்ஜின் தேர்வுகள் நேரடியாக சிட்டியில் இருந்து அப்படியே பெறப்பட்டது போல, 1.5-லிட்டர் i-VTEC மற்றும் 1.5-லிட்டர் i-DTEC ஆகியவற்றை கொண்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை குறித்து பார்த்தால், பொதுவானதாக 6-ஸ்பீடு மேனுவலையும், பெட்ரோல் அமைப்பிற்கு தேர்விற்குட்பட்ட ஒரு CVT-யும் அளிக்கப்படுகிறது. இந்த BR-V-யை சமீபத்தில் ஜப்பானில் நாங்கள் ஓட்டி பார்த்தோம். ஹோண்டா BR-V-யை குறித்த எங்களின் அறிக்கை மற்றும் சிறப்பான படங்களை கொண்ட பிக்சர் கேலரியை பாருங்கள்.

வோல்க்ஸ்வேகன் கச்சிதமான சேடன்

அறிமுகம்: 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ (வெளிப்படுத்தப்பட்டது)

இப்பகுதியில் கடைசியாக ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இருக்கும் என்று எல்லாரும் நினைத்திருந்தாலும், இங்கே அப்படியில்லை. போலோ / வென்டோ ஆகியவற்றின் பிளாட்பாமை அடிப்படையாக கொண்டு, குறிப்பாக இந்திய சந்தைக்கான கச்சிதமான சேடனை, வோல்க்ஸ்வேகன் கொண்டு வருகிறது. இந்த வாகனத்தின் உருவாக்கத்திற்கான முதலீட்டை, அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இயந்திரவியலில், போலோ ஹேட்ச்பேக்கின் என்ஜின் தேர்வுகளை, இது பகிர்ந்து கொள்வதோடு, வென்டோ / ரேபிட் வாகனங்களின் வெற்றியை கருத்தில் கொண்டு, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மூலம் இதில் DSG ஆட்டோ உடன் கூடிய டீசல் என்ஜின் பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாட்சன் ரெடி-கோ மற்றும் கோ-கிராஸ்

அறிமுகம்: 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ (எதிர்பார்க்கப்படுகிறது)

அடுத்து நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் ரெடி-கோவின் தயாரிப்பு பதிப்பை, டாட்சன் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த எக்ஸ்போவில் இதன் தொழில்நுட்ப பதிப்பை, இவ்வாகன தயாரிப்பாளர் வெளியிட்டார். ரெனால்ட் க்விட்டை போலவே, ரெடி-கோவும், ரெனால்ட்-நிசான் கூட்டுறவில் அமைந்த CMF-A பிளாட்பாமை அடிப்படையாக கொண்டதாகும். க்விட்டில் உள்ள அம்சங்கள் மற்றும் பவர்ட்ரெயின் ஆகியவற்றை இவ்வாகனம் பகிர்ந்து கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெடி-கோவை தவிர, கடந்த 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் உலக அரங்கேற்றம் கண்ட, கோவின் கிராஸ்-பதிப்பையும் இந்நிறுவனம் காட்சிக்கு வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience