மெக்ஸிகோ: இந்தியாவின் மிகப்பெரிய கார் இறக்குமதியாளர்.

published on ஆகஸ்ட் 20, 2015 11:36 am by manish

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்: இந்த நிதியாண்டில் இந்திய கார் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக மெக்ஸிகோ மாறிவருகிறது. இரண்டு நாடுகளும் வெவ்வேறு மூலையில், வெகுதூரத்தில் இருந்தாலும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐந்தில் ஒரு பங்கு கார்கள் இந்த மதிய அமெரிக்க நாடான மெக்ஸிகோ நாட்டிற்கு தான் எற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1.3 லட்சம் இந்தியாவில் தயாரான கார்களை மெக்ஸிகோ இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதன்மையான வெளிநாட்டு கார் சந்தையாக மெக்ஸிகோ மாறியிருக்கிறது. நமக்கு கிடைத்த தகவலின் படி மெக்ஸிகோ நாட்டுக்கான தற்போதய கார் ஏற்றுமதி 2015 – 16 ஆண்டில் 50 % வரை கூடி 1.32 லட்சமாக உயரும் என்று நம்பப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டு வெறும் 82,000 வாகனங்களே ஏற்றுமதி செய்யப்பட்டன. ஒரு எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் இருந்து 55 ஆயிரம் கார்களுக்கு மேல் மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்யும் என்றும் ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது வெற்றி பெற்ற சிறிய காரான பீட் கார்களை சுமார் 45000 கார்களுக்கு குறையாமல் ஏற்றுமதி செய்யும் என்றும் அந்த கார்களை பீட் என்ற பெயரில் இல்லாமல் ஸ்பார்க் என்ற பெயரில் அங்கு விற்பனை செய்யும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. போர்ட் நிறுவனத்தின் பீகோ, பீகோ ஆஸ்பயர், மாருதி நிறுவனத்தின் சியஸ் ஹயுண்டாய் நிறுவனத்தின் i10 க்ரேண்ட் மற்றும் எக்ஸ்சென்ட் கார்களும் மெக்சிகோவிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் பேசுகையில்,”வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக மெக்ஸிகோ திகழ்கிறது. 2014 ஆம் ஆண்டு 55 ,000 கார்களை எற்றுமட்னி செய்தோம். இந்த ஆண்டு அதை விட சற்று கூடுதலான எண்ணிக்கையில் ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கிறோம். மெக்சிகோவில் 20 – 30% வரை செலவு குறைவு என்பதால் போக்குவரத்து செலவு, 20 % இறக்குமதி வரி போன்றவைகளை கணக்கில் கொள்ளாமல் வோல்க்ஸ்வேகன் இந்தியா ,ஜெனெரல் மோட்டார்ஸ் இந்தியா மற்றும் என்ன பிற கார் தயாரிப்பாளர்கள் ஏராளமான கார்களை மெக்ஸிகோ நாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஐஎச்எ ஆடோமோடிவின் மூத்த ஆய்வாளர் கவ்ரவ் வங்கால் கூறுகையில் ,” மெக்ஸிகோகார் சந்தையில் தற்போது பெருகி வரும் இந்த தேவை மந்தமான விற்பனை காரணமாக தங்களது உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கும் கார் தாயாரிப்பாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்" என்று கூறினார். ஹயுண்டாய் மோட்டார் இந்தியாவின் விற்பனை மற்றும் மார்க்கெடிங் பிரிவின் மூத்த துணை தலைவர், திரு. ராகேஷ் ஸ்ரீவாத்சவ் மெக்ஸிகோ நாட்டிற்கான தங்களது ஏற்றுமதியை 37% அளவுக்கு 2015 ஆம் ஆண்டுக்குள் உயர்த்தி 12,500 க்கும் கூடுதலான கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதை தெரிவித்தார். நிஸ்ஸான் சன்னி, வோல்க்ஸ்வேகன் வெண்டோ, போர்ட் பீஸ்டா போன்ற நடுத்தர அளவு செடான் பிரிவு கார்களும் சுமார் 1.2 லட்சம் கார்களை விற்று மொத்த விற்பனையில் 10 % சந்தை பங்கைப் பெற்றுள்ளன. 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா ev9
    க்யா ev9
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • லேக்சஸ் யூஎக்ஸ்
    லேக்சஸ் யூஎக்ஸ்
    Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • போர்ஸ்சி தயக்கன் 2024
    போர்ஸ்சி தயக்கன் 2024
    Rs.1.65 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • டாடா altroz racer
    டாடா altroz racer
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • எம்ஜி குளோஸ்டர் 2024
    எம்ஜி குளோஸ்டர் 2024
    Rs.39.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
×
We need your சிட்டி to customize your experience