மெக்லாரன் P1 காரின் தயாரிப்பு நிறுத்தப்படுகிறது
published on டிசம்பர் 14, 2015 09:32 am by raunak
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
உயர்ந்த தரத்தால் பிரபலமான மெக்லாரன் F1 காரின் நேரடி முன்னோடியான P1 ஹைபிரிட் ஹைப்பர் காரின் 375 –வது காரே இறுதியானது.
மெக்லாரன் நிறுவனம், தனது P1 மாடல் காரினை இதற்கு மேல் தயாரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. கார் பிரியர்களுக்கு இது மிகவும் சோகமான செய்தியாகும். மெக்லாரன் F1 மாடலுக்கு முன் வந்த P1 காரில், மொத்தமே 375 கார்கள் தயாரித்ததோடு, தனது தயாரிப்புக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டது. 2012 பாரிஸ் மோட்டார் ஷோவில், மெக்லாரன் தனது புதிய மாடலை அறிமுகப்படுத்தி, 2013 -ஆம் ஆண்டின் கோடை காலத்தில் இதன் உற்பத்தியை ஆரம்பித்தது. முதல் கார் கூட வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்படாத நிலையில், 375 கார்களும் விற்று முடிந்து விட்டது என மெக்லாரன் நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்லாரன் P1 மாடலின் முதலாவது கார் ஐஸ் சில்வர் நிறத்தில் பெயிண்ட் ஒர்க் செய்யப்பட்டிருந்தது. P1 -யின் கடைசி காரான 375 -வது கார் வித்தியாசமான பெர்ல்லெசண்ட் ஆரஞ்சு நிறத்தில் பெயிண்ட் ஒர்க் செய்யப்பட்டு மனதைக் கவரும் வகையில் இருந்தது. வல்கெனோ ஆரஞ்சு வண்ணத்தில் வந்த 64 -வது மற்றும் இறுதி மெக்லாரன் F1 ரோட் காரான சேஸிஸ் #075 காரின் வண்ணத்தை ஒத்து இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த வாகன தயாரிப்பு நிறுவனம் இத்தகைய மனம் வருடும் ஆரஞ்சு நிறத்தை 375 –வது P1 காரில் பெயிண்டிங் செய்துள்ளது.
மெக்லாரன் ஆட்டோமோட்டிவ் பிரிவின் சீஃப் எக்ஸிக்யூடிவ் ஆபிசரான மைக் பிளேவிட், “மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த முதல் பிரிவியூவிற்கு பின்னர், புதிய தலைமுறையின் சூப்பர் கார் என்ற பெருமையையும் மற்றும் மெக்லாரன் பிராண்ட் கார்களின் பெயரை, மெக்லாரன் P1 மாடல் உலகளவில் உயர்த்தி உள்ளது. உண்மையில், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக, இரு வேறு விதங்களில் மெக்லாரன் P1 மாடல் சாதித்துள்ளது,” என்று பெருமையுடன் கூறினார்.
உயர்ந்த தரத்தால் பிரபலமான மெக்லாரன் F1 காரின் முன்னோடியாகவும், புத்தம் புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட முதலாவது சூப்பர் கார் என்ற பெயரையும் தாங்கி வந்ததால், P1 காருக்கு இந்த பெருமைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்தது. எனினும், தனது வேலைகளை செவ்வனே செய்து வெற்றி மட்டும் பெறவில்லை, அதன் புகழ் எட்டுத்திக்கும் பரவும்படி செய்துள்ளது. உலக சந்தையில், பல ஆண்டுகளாக சாலைகள் மற்றும் டிராக்கில் ஓடும் கார்களை தயாரித்து நிலைபெற்றுள்ள போட்டியாளர்களுடன் களத்தில் இறங்கி மோத தனக்கு மித மிஞ்சிய தகுதி இருக்கிறது என்று நிரூபித்து, தான் ஒரு சிறந்த போட்டியாளர் என்பதை மெய்ப்பித்துள்ளது.
மெக்லாரன் F1 போல மிக உயர்ந்த அளவில் இல்லை என்றாலும் இந்த P1 மாடல் பிரமாண்டமான செயல்திறனை கொண்டுள்ளது. மிகவும் வலிமை வாய்ந்த 179 PS எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன், 3.8 லிட்டர் டிவின் டர்போ V8 பெட்ரோல் இஞ்ஜின் P1 மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் 916 PS @ 7300 rpm என்ற அளவில் சக்தி மற்றும் அதிகபட்சமாக 900 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் சக்தியுடன் உள்ளது. டர்போவின் பின்னடைவை ஈடு செய்யும் விதத்தில் அமைக்கப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் மூலம், 130 Nm டார்க்கை உடனடியாக உற்பத்தி செய்யவல்லதாக உருவாக்கப்பட்டுள்ளது. 100 km/h (62mph) வேகத்தை 2.8 வினாடிகளிலும், 200km/h வேகத்தை 6.8 வினாடிகளிலும், 300 km/h வேகத்தை 16.5 வினாடிகளிலும் இதன் ஹைபிரிட் பவர்டிரைன் மூலம் அடைகிறது. மொத்ததில், பாரம்பரிய மெக்லாரன் F1 காரை விட ஐந்து வினாடிகள் துரிதமாக செயல்பட கூடியதாக உள்ளது. உச்சகட்ட 350 km/h (217 mph) வேகம் வரை இந்த காரை வேகமாக செலுத்த முடியும்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful