ஃபார்முலா E ரேஸிங்கை, மஹிந்திரா இந்தியாவிற்கு கொண்டு வருகிறது
published on பிப்ரவரி 12, 2016 12:37 pm by sumit
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவிற்கு ஃபார்முலா E ரேஸிங்கை கொண்டு வருவது தொடர்பாக, மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.பவன் கோயின்கா, 6 மத்திய அமைச்சர்களுடனான ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரபலமான ஃபார்முலா 1 ரேஸ்களை நடத்தும் பெடரேஷன் இன்டர்நேஷ்னலே டி எல் ஆட்டோமொபைல் (FIA)-ன் அங்கீகாரம் கொண்ட ஃபார்முலா E ரேஸிங் போட்டி, பிரத்யேகமாக மின்னூட்டத்தின் மூலம் ஆற்றல் பெற்று இயங்கும் ரேஸிங் கார்களுக்காக நடத்தப்படும் ஒரு போட்டி ஆகும்.
இது குறித்து திரு.கோயின்கா கூறுகையில், “இதை நடத்துவதற்கு FIA மிகவும் முனைப்புடன் உள்ளது. இங்கே ஃபார்முலா E ரேஸ் நடத்துவது சரியாக அமையுமா என்பது குறித்து முடிவு எடுக்கக் கூடிய சிலருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்” என்றார். ஃபார்முலா E குறித்த கூட்டத்தில், சுரேஷ் பிரபு, ரவி சங்கர் பிரசாத், அசோக் கஜபதி ராஜூ, நிதின் கட்காரி, பிரகாஷ் ஜாவாதிகர் மற்றும் ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்ட 6 மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டதாக, அவர் தெரிவித்தார். இதன்மூலம் எலக்ட்ரிக் வாகனங்களை குறித்து மக்களிடையே விழிப்புணர்வும், புரிந்துக் கொள்ளுதலும் ஏற்படும். வழக்கமான எந்த ஓடுத்தளத்திலும் (சர்க்யூட்) இந்த ரேஸ் நடத்தப்படாமல், இது சாலைகளில் நடத்தப்படும் தன்மைக் கொண்டது. எனவே ஒரு நகரத்தின் முக்கியமான பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் ஒரு நாள் முழுவதும் முடக்கி வைக்கப்படும். இதன்மூலம் பொதுமக்களுக்கு சில அசவுகரியங்கள் ஏற்படலாம். ஆனால் அதே நேரத்தில் உலகமெங்கும் உள்ள பார்வையாளர்களால் நம் நாட்டை பார்க்க வைக்க முடியும்.
அவர் மேலும் கூறுகையில், தென் அமெரிக்காவில் நடைபெற உள்ள டாகார் ரேலியில், மஹிந்திரா ரேஸிங் பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதன்மூலம் கரடுமுரடான பாதைகளில் ஸ்கார்பியோ மற்றும் XUV 5OO போன்ற அதன் பாரம்பரிய ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனங்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும், என்றார்.
திரு.கோயின்கா கூறுகையில், ரேஸிங் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கண்டறிய முடிகிறது. மேலும் இது போன்ற வாகனங்களுக்காக மேம்படுத்தப்படும் தொழிற்நுட்பங்களை, பிற்காலத்தில் சாதாரண வாகனங்களின் தயாரிப்பிலும் வாகன தயாரிப்பாளரால் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில் நிறுவனத்திற்கு இரு வகைகளில் இது பயனுள்ளதாக உள்ளது.
நம் நாட்டிற்கு ஃபார்முலா E கொண்டு வரப்படுவதன் மூலம் கூடுதலான ஒரு நன்மை என்னவென்றால், எலக்ட்ரிக் கார்களை குறித்த கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். தற்போதைய சூழ்நிலையில் ஒரு பேட்டரியினால் ஓடும் வாகனங்கள் மிகவும் குறைவு என்பதோடு, அவற்றை வாடிக்கையாளர்களும் வாங்குவதும் அரிதாக உள்ளது. இருந்தாலும், இந்த தொழிற்நுட்பத்தை தங்களின் வாகனங்களில் ஒரு நுட்பமான முறையில், வாகனத் தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்கிறார்கள். இதற்கான விலை அதிகம் என்பதால், அதன் வளர்ச்சி மிக மெதுவாகவே நடைபெறுகிறது. இந்திய சந்தையில் தற்போது மஹிந்திரா தரப்பில் e2o விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் அதன் E-வெர்டோவை காட்சிக்கு வைத்துள்ளது.
மேலும் வாசிக்க : டெல்லியில் மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை 1.9L mஹாக் என்ஜின்களை பெறுகின்றன
0 out of 0 found this helpful