• English
  • Login / Register

ஜே கே டயர்ஸ் இரண்டாவது காலாண்டு அறிக்கை : 55% வளர்ச்சி

published on அக்டோபர் 30, 2015 01:33 pm by konark

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி :

JK Tyre

30 செப்டம்பர் 2015 வரையிலான காலாண்டில் ரூ. 118 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது ஜேகே டயர்ஸ் நிறுவனம். இதற்கு முந்தைய காலாண்டின் நிகர லாபமான 76 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 55% கூடுதல் வளர்ச்சியாகும். அனைத்தையும் ஒருங்கிணைத்த டர்ன்ஓவர் ரூ. 1986 கோடி ரூபாய் என்றும் தனியே ஜேகே டயர்ஸ் என்று பார்க்கையில் டர்ன்ஓவர் ரூ. 1682 கொடிகள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல்பாட்டு லாபமும் இந்த காலாண்டில் 41% வரை உயர்ந்து இப்போது ரூ. 267 கோடியில் உள்ளது.

JK Tyre

டாக்டர். ரகுபதி சிங்கானியா , சேர்மன் & நிர்வாக இயக்குனர், ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட். பேசுகையில், "சீனாவில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப்படும் தரமற்ற டயர்கள் மற்றும் மிகவும் மெதுவாக வளர்ந்து வரும் வாகன தொழில் ஆகியவை கடும் சவாலான சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தாலும் எங்கள் நிறுவனம் தொடர்ந்து செயல்பாடுகளின் வேகத்தையும் திறனையும் கணிசமான அளவு உயர்த்திக் கொண்டுள்ளது. டயர்களுக்கான தேவை அதிகரித்து புத்துயிர் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதை ஒரு நல்ல விஷயமாக நாங்கள் பார்க்கிறோம்.”. மேலும் அவர், “ கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் (KIL) நிறுவனத்தின் லக்க்ஷர் யூனிட்டை கையகப்படுத்துவதற்கான பிணைப்பு ஒப்பந்தத்தையும் செய்துள்ளோம். இந்த நடவடிக்கை அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒன்று அல்லது இரண்டு மாத காலத்திற்குள் முழுமை பெறும்" என்று கூறினார். இந்த நடவடிக்கை , வேகமாக வளர்ந்து வரும் 2 மற்றும் மூன்று சக்கர டயர் பிரிவில் நுழைந்துள்ள ஜேகே டயர் நிறுவனத்தின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் . வோர்ல்ட் ப்ரேண்டிங் போரம் , டயர் பிரிவில் ' ப்ரேன்ட் ஆப் தி இயர் ' என்ற பட்டத்தை ஜேகே டயர் நிறுவனத்திற்கு வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் அக்டோபர் 6ஆம் தேதி புனே நகரில் நடந்த டாடா மோட்டார்ஸ் வெண்டார் கான்பரன்ஸ் நிகழ்வில் இந்த வருடத்திற்கான டாடா மோட்டார்ஸ் பெஸ்ட் சப்ளையர் விருதையும் ஜேகே டயர்ஸ் நிறுவனம் வென்றுள்ளது.

இந்த விருதுகள் மட்டுமின்றி கேடர்பில்லர் நிறுவனத்திடமிருந்து '2015 ஆண்டுக்கான சில்வர் லெவல் சர்டிபிகேஷனை சப்ளையர் குவாலிடி எக்ஸலன்ஸ் ப்ராசெஸிற்காக ஜேகே டயர்ஸ் பெற்றுள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience