• English
  • Login / Register

அமேசானின் புதிய கார் ஷோவில் ஜெர்மி கிளார்க்சன், ரிச்சார்டு ஹேமண்ட் மற்றும் ஜேம்ஸ்

published on ஜூலை 31, 2015 04:40 pm by nabeel

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: நீண்ட சர்ச்சைகள் மற்றும் யூகங்களுக்கு பிறகு, ஜெர்மி கிளார்க்சன், ரிச்சார்டு ஹேமண்ட் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் கொண்ட மூவர் கூட்டணி, அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சர்வீஸ் வழங்கும் புத்தம் புதிய மோட்டார் ஷோவில், கலந்து கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த ஷோ, அடுத்தாண்டு முதல் ஒளிப்பரப்பாகும். தற்போதைக்கு மூன்று சீசன்கள் கொண்ட ஷோவில் கலந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்த மூவர் கூட்டணியின், காட்சி படப்பிடிப்பு இந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தை குறித்து இதற்கு மேல் எந்த தகவலும் அமேசான் தரப்பில் வெளியிடப்படாத நிலையில், உள்ளே உள்ள ஒருவர் கூறுகையில், “இதற்காக குறிப்பிடத்தக்க முதலீடு செய்துள்ளோம்”. இந்த ஷோவை, ஜெர்மி கிளார்க்சனின் பழைய நண்பரும், முன்னாள் டாப் கியர் தயாரிப்பாளருமான என்டி வில்மேன் தயாரிக்கிறார். முன்னதாக 27 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென பிபிசியில் இருந்து கிளார்க்சன் வெளியேறினார். அவரை தொடர்ந்து ரிச்சார்டு ஹேமண்டு மற்றும் ஜேம்ஸ் மேயும் வெளியேறினர். இந்த ஒப்பந்தம் திடீரென ஒரு முக்கிய முடிவை எட்ட மேற்கண்ட மூவர் கூட்டணியின் இந்த துணிகர முடிவே ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

பிசிசியில் இருந்து வெளியேற துவக்கத்தில் மனவருத்தம் மற்றும் சோகத்தோடு காணப்பட்ட ஜெர்மி கிளார்க்சன், தற்போது உற்சாக மனத்தோடு, “ஒரு விமானத்தில் இருந்து இறங்கி, விண்கலத்திற்குள் நுழைந்தது போல உணர்கிறேன்” என்று ட்விட் செய்துள்ளார். இந்த புதிய துணிகரமான நடவடிக்கையில் உற்சாகமாக காணப்படும் ரிச்சார்டு ஹேமண்டு கூறுகையில், “அமேசானா? அதுவா, நான் ஏற்கனவே அங்கே தான் இருந்தேன். என்னை ஒரு புல்லட் எறும்பு கடித்துவிட்டது” என்றார்.

‘கேப்டன் ஸ்லோ” அல்லது ஜேம்ஸ் மே கூறுகையில், “புதிய தலைமுறையை சேர்ந்த ஒரு ஸ்மார்ட் டிவியின் ஒரு பகுதியாக நாங்கள் இணைந்துள்ளோம். முரண்பாடாக இருக்கிறது இல்லையா?” என்றார். பணம் தொடர்பான விஷயங்களை காட்டிலும், தாங்கள் வழங்க உள்ள இந்நிகழ்ச்சியை புதுமையாகவும், தனிப்பட்ட சொந்த படைப்பாற்றலை பயன்படுத்தி தங்கள் விருப்பம் போல நடத்தலாம் என்றும் அமேசான் அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து நிகழ்ச்சியை வழங்க உள்ள இம்மூவரும் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.

அமேசான் ப்ரைம் வீடியோ ஐரோப்பாவின் துணை தலைவரான ஜேய் மரைன் கூறுகையில், “இந்த அணியை திரும்பவும் திரையில் பார்க்க வேண்டும் என்று நுகர்வோர் எங்களிடம் தெரிவித்தனர். அதை செயலில் கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறோம். ஏற்கனவே லட்சக்கணக்கான ப்ரைம் உறுப்பினர்கள், நாங்கள் வழங்கும் புதுமையான ஒரிஜினல் ஷோக்களை கண்டு ரசிக்கிறார்கள். இந்நிலையில் ஜெர்மி, ரிச்சார்டு, ஜேம்ஸ் மற்றும் குழுவினர் வழங்க உள்ள ஷோவை காண எங்களால் காத்திருக்க முடியவில்லை. ஏனெனில் வரும் 2016ம் ஆண்டின் உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷோவாக அது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இது தொலைக்காட்சி பெட்டியின் ஒரு பொற்காலம் ஆகும். மேலும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் கதை கூறுபவர்களுக்கு இது ஒரு சிறந்த காலமும் கூட. எங்களை பொறுத்த வரை நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு படைப்பு சுதந்திரம் அளித்து, அவர்களின் விருப்பம் போல நிகழ்ச்சியை புதுமையாக உருவாக்க அனுமதிக்கும் அணுகுமுறையை கொண்டுள்ளோம். இது வெறும் ஒரு தொடக்கமே, இன்னும் உலகின் முன்னணி திறமையாளர்கள் மற்றும் பெரிய நிகழ்ச்சிகளை, ப்ரைம் வீடியோவில் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றார்.

அமேசான் வீடியோ என்ற மொபைல் ஆப் மூலம் அமேசான் ப்ரைம்மை கண்டு களிக்கலாம்.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி atto 2
    பிஒய்டி atto 2
    Rs.விலை க்கு be announcedகணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா ev
    ஹூண்டாய் கிரெட்டா ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience