• English
  • Login / Register

J.D பவர் 2015 ஆய்வில் - கார் வாங்கும் இந்தியர்களின் தற்போதைய போக்குகள்

published on அக்டோபர் 01, 2015 05:48 pm by manish

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

J.D.Power

நேற்று வெளியிடப்பட்ட J.D  பவர் –இன் 2015 இந்தியா எஸ்கேப்ட் ஷாப்பர் ஸ்டடி SM (ESS) என்ற ஆய்வின் படி, புதிதாக வாகனம் வாங்கும்போது, இந்தியர்கள், காரின் செயல்முறை, பயன்பாடு மற்றும் நடுத்தர அளவில் உள்ள கார்களையே மிகவும் நுட்பமாக கவனிக்கின்றனர், என்று தெரிகிறது. புதிய கார் அல்லது பயன்பாட்டு வாகனங்களை வாங்கிய 8,116 நபர்கள் மற்றும் வாங்காமல் நிராகரித்த 2,983 நபர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்த ஆய்வில், 2014 செப்டெம்பர் மாதத்தில் இருந்து 2015 ஏப்ரல் மாதம் வரை கார் வாங்கிய நபர்களையே உட்படுத்தி உள்ளனர்.

கடந்த நான்கு வருடத்தில், சிறிய ரக கார் வாங்கும் ஆர்வம் மிகவும் குறைந்துள்ளது, ஏனெனில், மக்கள் பெரிய கார் மாடல்களின் மீது, தற்போது மோகம் கொண்டுள்ளனர். 2012 -ஆம் ஆண்டில் கார் வாங்கும் எண்ணம் உள்ளவர்களின் மத்தியில், சிறிய காரை விரும்பும் நபர்களின் சதவிகிதம், 65 சதவிகிதமாக இருந்தது. தற்போது, இது 45 சதவிகிதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். மக்களின் விருப்பமும் எண்ணங்களும் மாறி வருவதால், பயன்பாடு அதிகம் உள்ள கார்களை வாங்க எண்ணுவோர் 12 சதவிகிதம் அதிகமாகி உள்ளனர். மேலும், நடுத்தர அளவு கார்களை வாங்கும் எண்ணம் உள்ளவர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

J.D பவர் –இன் நிர்வாக இயக்குனரான மோஹித் அரோரா இது பற்றி கூறும் போது, “தற்போது வாகன வகைகளுக்கு நடுவே உள்ள விலை இடைவெளி மிகவும் குறைந்துள்ளது. ஏனெனில், பல கார் தயாரிப்பாளர்கள் வித விதமான உருவ அமைப்புடன் வரும் கார் வகைகளை கிட்டத்தட்ட ஒரே விலையில் வழங்குகின்றனர். இத்தகைய நிலை, புதிதாக கார் வாங்கும் நபர்களுக்கு, பெரிய கார் வகைகள் உட்பட, பல விதமான வாகனங்கள் விருப்பத் தேர்வாக உள்ளன,” என்று கூறினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் எண்ணம் உடைய நபர்களின் எண்ணிக்கை, 2013 –ஆம் ஆண்டு 7 சதவிகிதம் மட்டுமே இருந்தது. ஆனால், 2015 – ஆம் ஆண்டில் இது 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. புதிய கார்களை வாங்கும் எண்ணத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முக்கிய காரணம், அதன் விலை. எனினும், 30 சதவிகிதம் மக்களிடம் புதிய காரை வாங்குவதற்கான ஊகிகமூட்டும் காரணி எதுவும் இல்லை. மேலும், 21 சதவிகிதம் நபர்களுக்கு வெளிப்புற வடிவமைப்பு பிடிக்கவில்லை. 18 சதவிகிதத்தினர் எரிபொருள் சிக்கனம் இல்லாததை காரணம் காட்டினர்.

இந்த ஆய்வின் படி, கார் வாங்கும் எண்ணமுடையவர்கள் முதலில் கருதும் கார் தயாரிப்பு நிறுவனம், மாருதி நிறுவனமே. இத்தகைய பெருமையை, இந்நிறுவனம் 11 –வது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 40 சதவிகித நபர்கள், மாருதி நிறுவனத்தின் கார் வகைகளை வாங்கவே விரும்புகின்றனர். எனினும், இத்தகைய நிலையை தக்க வைத்துக்கொள்ளும் திறன் மாருதி நிறுவனத்திற்கு, 2014 –ஆம் ஆண்டு 38 சதவிகிதம் இருந்தது. ஆனால், தற்போது உள்ள அனல் பறக்கும் போட்டியால், இது 37 சதவிகிதமாக 2015 – ஆம் ஆண்டு குறைந்துள்ளது.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience